Sunday, May 31, 2015

தமிழ் தொலைக்காட்சி சேனல்ஸ் தரும் தரமான நிகழ்ச்சிகள் !!


இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை.  பொழுது போக்கிற்காக  தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. இரண்டு நாள் தொடர்ந்து சேனல்ஸ் மாற்றி மாற்றி பார்த்ததில், என்ன என்ன நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றன என்று ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

என் அனுபவத்தில், இதோ என் கணிப்புகள்.

காலை எப்படியும் ஒரு சுப்ரபாதம் அல்லது சாமி நிகழ்ச்சி, காலை மலர் என்று கடலை போடுவது, பின்னர் சமையல் நிகழ்ச்சி, ஒரு சில சேனல்ஸ் செய்தி என்ற பெயரில் அவர் அவர் சொந்த கட்சிக்கு ஏற்றார் போல ஜால்ரா செய்திகள். பின்னர் ஒரு பதினோரு மணியில் இருந்து தொடர்கள்..அதில் கட்டாயம் ஒரு சாமி தொடர் இருக்கும். மகாபாரதம், ராமாயணம், சிவன், ஆஞ்சநேயர் ...என்று எதோ ஒரு சாமி தொடர். பின்னர் கிட்டத்தட்ட ஒரே கதை அமைப்பில், அடுத்தடுத்த தொடர்கள்...நிறைய repeated நடிகர்கள்..என்று சில/பல நேரங்களில் குழம்பம்..இது போன்ற உள்ளூர் நடிக நடிகையர் நடிப்பது என்பது, கட்சிகள் வைத்திருக்கும் டிவி சேனல்கள் மட்டுமே. மற்ற டிவி சேனல்கள் எல்லாமே, வட இந்திய தொடர்களை மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்..

பல நேரங்களில் மிக அன்னியப்பட்டு இருந்தாலும், மக்கள் அதனையும் விடாமல் பார்கிறார்கள், என்பதால் விளம்பரங்கள் வருவது நிச்சயம். காஸ்ட்லி டிரஸ்..செலவு மிச்சம் என்று நிறைய advantage வட இந்திய தொடர்களை வெளியிடும் போது.


அடுத்து, கிட்டத்தட்ட எல்லா சேனல் களும் ஒரு படம் போடுகிறார்கள்..பல நேரங்களில் பயங்கர மொக்கை படமாக அது இருக்கிறது. 70-80 களில் வந்த படங்கள் பெரும்பாலும் திரையிட படுகின்றன. இப்படி திரையிடப்படும் பல படங்கள் youtube இல் பெரும்பாலும் கிடைப்பதால் அதுவும் செலவு மிச்சம் அல்லது சொற்ப பணம் மட்டுமே..என்று நினைகிறேன். இதில் இடை இடையே விளம்பரங்கள் வேறு வருமானம் கொடுத்து விடும்

அதற்க்கு பிறகு மாலை நேரங்களில் ஏதாவது ஒரு டாப் சீரியல் நடிக நடிகையர் நடித்த அல்லது டாப் சீரியல் டைரக்டர் இயக்கிய  தொடர்களை பெரும்பாலும் எல்லா சேனல்களும் வைத்து இருக்கின்றன. 30 நிமிட சீரியல் என்றால் 15 நிமிடம் மட்டுமே பார்க்க முடிகிறது மீதி 15 நிமிடம் விளம்பரம். நல்ல வருமானம்.

 பெரும்பாலான தொடர்களில், ஹீரோயின் தியாக சுடர். வில்லி எப்படியும் ஹீரோயினின் புருஷனை அல்லது காதலனை வலை வீசி பிடிப்பார்..ஹீரோ பயங்கரமான ஆள். ஹீரோயினும் வேணும், வில்லியும் வேணும் என்று கேம் விளையாடுவார். அதே வில்லி ஹீரோயினின் மாமியாரிடம் அன்பாக இருப்பார்....ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா.

பின்னர் சூப்பர் சிங்கர், டான்சர்..டாலேன்ட் ஷோ என்று பாடகர்கள், நடிக நடிகையர் ஜட்ஜ் ஆகா உட்கார்ந்து மொக்கை போடுகிறார்கள். இதில் யாருக்கு என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. சண்டைகள், emotion என்று நிறைய டிராமா வேறு. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகள் உவ்வே ரகம்.

ஒரு சில சேனல்கள் எப்போதும் நாடக நடிக நடிகையர், DJ, RJ என்று யாரையாவது வைத்து கெக்கே பிக்கே என்று பேச வைத்து ஒரு ரியாலிட்டி ஷோ. பெரும்பாலும் spoof ஷோ வாகவே அது இருக்கிறது. யாரையாவது கிண்டல் செய்ய வேண்டியது. முக்கால் வாசி நேரம், அது பங்குபெரும் பெண்களுக்கு இருக்கும் அறிவை சுட்டிகாட்டுவதாகவே இருக்கிறது. பெரும்பாலும் இப்படி பங்கு பெரும் பெண்கள் பொது அறிவில் பூஜ்யமாக இருக்கிறார்கள்/அல்லது நடிக்க வைக்க படுகிறார்கள்.

ஒரு சில சேனல்கள் நிஜம் நடந்தது என்ன என்று...அல்லது துப்பறியும் என்று பல மொக்கைகள்..பல நேரங்களில் இவர்கள் பேசுவது கள்ள காதல் விஷயங்கள்/கொலைகள் மட்டுமே...

சில சேனல்கள் மிட் நைட் ஷோ சில வைத்து இருக்கிறார்கள் அல்லது டாக்டர் இடம் சந்தேகங்கள் கேட்பது என்று சில நேரங்களில் மொக்கை..பிறகு பாடல்கள்...

மறுபடியும் அடுத்த நாள் காலை நிகழ்சிகள் அதே ஆர்டர். கிட்ட தட்ட எல்லா சேனல்களும் ஒரு sequence வைத்து இருக்கிறார்கள்..அதன் படியே தவறாமல் ஒளிபரப்புகிறார்கள்.

இரண்டு நாள்கள் பார்த்த விளைவே,யாரை பார்த்தாலும் சந்தேகம், என்று எனக்கு ஒரு மெண்டல் எப்பெக்ட் தந்து விட்டது. தொடந்து இதனை பார்க்கும் மக்கள் கட்டாயம் மன மாற்றம் அடைந்தே இருப்பார்கள் என்பது என் கணிப்பு.

முடியல, வலிக்குது..அழுதுருவேன்..இனிமே என்ன உடம்புக்கு முடியாம வீட்டில் கிடந்தாலும்..தமிழ் சேனல்ஸ் மட்டும் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். ஒரு தடவை அனுபவித்தது போதும்..

டிஸ்கி

இது சொந்த அனுபவ கருத்து  மட்டுமே..இதில் எந்த நிகழ்ச்சியையும் சேனல்களையும், அதனை பார்க்கும் மக்களையும் குறை சொல்லவில்லை. அவரவர்களுக்கு எது விருப்பமோ அதனை செய்கிறார்கள். இதில் குறை சொல்ல நான் யார்.


நன்றி.


Saturday, May 30, 2015

இந்தியர்களின் நகை அபிமானமும், திருட்டும்

இரண்டு செய்திகள் வாசிக்க/பார்க்க  நேர்ந்தது, அதில் ஒன்று, சவூதி அரசர் தன் மகளுக்கு செய்து கொடுத்த தங்க டாய்லெட் கல்யாண சீதனம். இரண்டாவது, எதோ ஒரு தமிழ் டிவியில் வந்த ஒரு படம். "குடும்ப சங்கிலி" என்று நினைக்கிறன்.  

முதல் செய்தியை வைத்து நிறைய காமெடி செய்து இருந்தார்கள். இது அடுக்குமா?..என்றெல்லாம். ஆனால் உண்மையில் ஒரு பவுன் கூட நகை சீதனமாக வாங்காமல் இந்தியாவில் திருமணங்கள் நடக்காது..என்பதை அனைவரும் அறிவர். கல்யாண பையனே எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் மணமகள் வீட்டுகாரர்கள் விட மாட்டார்கள். இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் சிம்பல். சரி காதல் திருமணம் முடித்தவர்கள் இப்படி எல்லாம் சீதனம் எதிர்பார்பதில்லை என்றாலும், இந்தியாவை பொருத்தவரை, நகை என்பதை தாண்டி ஒரு சேப்டி நெட். நகையில் பணத்தை இன்வெஸ்ட் செய்பவர்களை பார்த்து இருக்கிறேன். அதுவும் பெண் குழந்தைகள் வைத்து இருக்கும் பெற்றோர், பிள்ளைக்கு நகை சேமிப்பது என்பது அவள் குழந்தையாக இருப்பதில் இருந்து நடக்கிறது. எனக்குதெரிந்த நிறைய பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு தங்க காசு வாங்குவதை பார்த்து இருக்கிறேன்.


இதில் தமிழ் சமூகம், தெலுகு சமூகம் என்று இல்லை..சொல்ல போனால் இந்தியா முழுக்க இதே நிலை தான். நான் வாசித்த NPR பக்கம் இதனை உறுதி படுத்துகிறது  பெண்ணுக்கு நகை போட்டு கல்யாணம் முடிக்க வேண்டும், அது ஒரு பாரம் என்பதாலேயே இந்தியாவில் ஆண் குழந்தைகள் வேண்டும், அவன் தங்கச்சி அக்காவை கரை ஏத்துவான் என்று காலம் காலமாக நம்ப பட்டு வருகிறது. 

இதே போன்ற ஒரு கருத்தை நான் பார்த்த "குடும்ப சங்கிலி" என்ற படம் வலியுறுத்துகிறது. அதாவது, ஆண் பிள்ளை பெற முடியவில்லை என்பதற்காக எதோ குடும்பத்தில் ஒரு குறை என்று தள்ளி வைத்தல். அக்காக்கள் எல்லாம் சேர்ந்து தம்பியை படிக்க வைத்தல், பிறகு தம்பி அவர்களை நட்ராற்றில் விட்டு விடுதல்...ஐயோ சாமி..எந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம் என்று என்னை கிள்ளி பார்க்க வைத்தது. இப்பொழுதெல்லாம், நிறைய இந்திய குடும்பங்களில் பெண் குழந்தைகள் மட்டுமே இருகிறார்கள். அவர்கள் பெற்றோரை பார்த்து கொள்ள மாட்டார்கள் என்று யார் சொன்னது. எனக்கு தெரிந்த குடும்பத்தில் தன தாய் தந்தையரின் இறுதி சடங்கு கூட பெண் நிகழ்த்தி இருக்கிறார்.  ஆனால் இன்றும் கிராமங்களில் ஆண் வாரிசு இல்லாத வீடு என்றால், ஒரு இளக்காரம் என்பதை பார்க்க முடிகிறது. எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு பைய்யன் அதுவும் கடை குட்டி பையன் இருப்பின் அவனுக்கு தனி மரியாதை, சலுகை என்பது இன்னும் இருக்க தான் செய்கிறது. எப்பொழுது இந்த பாகுபாடு மாறுமோ.

இப்படி நகை மேல் நகை சேர்த்து, வெளி நாட்டு மாப்பிளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, இங்கு வந்த பிறகு அந்த பெண்கள் நகையை வைத்து சந்திக்கும் சில பிரச்சனைகள். இந்தியாவில் இருப்பது போலவே, எதவாது பார்ட்டி அல்லது விசேசம் என்றால் கழுத்து நிறைய நகை போட்டுட்டு போக வேண்டியது. இது தான் சாக்கு என்று இந்திய குடும்பங்களை நோட்டமிடும் திருடர்களுக்கு இது வசதி. கர்ணம் வைத்து அடித்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்தே நிறைய குடும்பங்களில் நகை திருட்டு நடக்கிறது/நடந்து இருக்கிறது. திருட வருபவர்கள், இந்தியன் குடும்பங்களில் நகை சீதனம் நிறைய இருக்கும் என்று அறிந்து, நோட்டம் இட்டு metal detector கொண்டு வந்து திருடுகிறார்கள். திருடிய நகைகளை pawn ஷாப்பில் உடனடியாக கொண்டு விற்று உருக்கி விடுகிறார்கள்,என்பதால் நீங்கள் போலீஸ் இடம் தெரிவித்தாலும் கண்டு பிடிப்பது கடினம். கோவிந்தா தான். 5 பவுன் 10 பவுன் என்று தாலி சங்கிலி போட்டு போகவேண்டியது. ஈசி ஆகா அவர்களை கத்தி காட்டி மிரட்டி நகையை திருடுவது மிக அதிகரித்து இருக்கிறது.எதற்கு இப்படி ஒரு நகை மோகம் என்று தெரியவில்லை. நகை மட்டுமே வாழ்க்கை அல்ல, நிறைய இருக்கிறது உலகில். நகை வாங்கி மட்டும் சேமித்து வைப்பதால் நீங்கள் பொருளாதாரத்தை முடக்குகிறீர்கள். பணம் புழங்க வேண்டும். ஓரிடத்தில், பேங்க் லாக்கரில் நகை வடிவில் இருப்பதால் என்ன லாபம். நிறைய bonds வாங்குங்கள். நிறைய இன்வெஸ்ட் செய்யுங்கள். வெறும் நகையில் காசை முடக்காதீர்கள்.


சீரியஸ் டாபிக் இல் இருந்து ஒரு relaxation காக,எனக்கு பிடித்த ஒரு பாடல் கௌரி மனோஹரி ராகம் என்று நினைகிறேன்..அற்புதமான இசை, யேசுதாஸ், சித்ரா அவர்களின் குரல் மற்றும்  நடன அசைவுகள்.



நன்றி.

Friday, May 29, 2015

ஐ, மீ, மைசெல்ப், நான், மே...




சில நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்தித்து இருப்போம். ஒரு மீட்டிங் அல்லது பொது இடத்தில் அல்லது பார்டியில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் இப்படி எங்காவது. அவர் நீங்கள் பேசுவதை கேட்பார், ஆனால் கேட்க மாட்டார். அதாவது, நாம் பேசும் வார்த்தைக்கு எப்படி பதில் தருவது என்பது மட்டுமே அவர் கேட்பார் ஆனால் என்ன சொல்ல வருகிறோம் என்று முழுதாக கேட்க மாட்டார்.

உதாரணமாக  நீங்கள் ஒரு ப்ராஜெக்ட் பற்றி எடுத்து அதனை பற்றி பேச வருகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், அதில் பல modules இருக்கலாம் அல்லது ஸ்டேஜ் இருக்கலாம். அதனை நீங்கள் விவரித்து கொண்டு இருப்பீர்கள், அப்பொழுது ஒருவர், நாம் குறிப்பட்ட எதோ ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு, நம்மை கேள்வி கேட்பார். நாம் ஏதேனும் பதில் சொன்னாலும் அந்த பதிலில் இருக்கும் ஒன்றை பிடித்து கேள்வி கேட்பார். நம்மை பேச விட மாட்டார், மாறாக அவர் சொன்ன பதிலில்/கேள்வியில் இருக்கும் நியாயத்தை பக்கம் பக்கமாக விவரிப்பார், விதண்டாவாதம் பேசுவார். "ஏன் எப்படி செய்ய கூடாது?" "என்ன முட்டாள் தனமான செய்கை இது" என்று அனைவர் முன்பும்  கமெண்ட் அடிப்பார்.

நம்மை பேச விடாமல் கேள்வி கேட்டு, நாம் கொஞ்சம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாலும், அதனை பிடித்து கொண்டு, நம்மை மட்டம் தட்டுவார்கள். நாம் தடுமாறுவதை பார்த்து ரசிப்பார்கள். அதுவே அவர்கள் வேண்டுவது.

இப்படி கேள்வி கேட்பவரின் நோக்கம், விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு அல்ல, மாறாக சென்ட்டர் ஆப் அட்ராக்ஷன் தன் பக்கம் திருப்ப மட்டுமே. அதாவது, "என்னா கேள்வி பாரு", "அவன் சொல்லுவது தான் சரி" என்று எல்லாரும் அவரை புகழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் நோக்கம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே எல்லாமே நடக்க வேண்டும் என்பது.

 நீங்கள் அவரை தனியே அழைத்து ப்ராஜெக்ட் பற்றி  பற்றி கேட்டு இருபீர்ர்கள், அப்போது வாயை திறந்து இருக்க மாட்டார். அல்லது, "எல்லாம் சரியாக இருக்கிறது" நம்மிடம் பசப்பி இருப்பார். இவர்களின் நோக்கம் தனக்கு மட்டுமே அந்த ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும், தான் மட்டுமே அதனை நடத்த வேண்டும்..ஐ, மீ, மைசெல்ப், நான் ...என்று எல்லா மொழியிலும் இருக்கும் "நான்" என்ற வார்த்தை மட்டுமே.

இவர்கள் பாம்புக்கு சமமானவர்கள். எப்பொழுதும் கொஞ்சம் தள்ளியே வைத்து இருக்க வேண்டும். இவர்களை ஆங்கிலத்தில் "Narcissist" என்பர். இந்த வகை மக்கள், தான் எப்போதும் successful, என்று காட்டி கொள்ள பார்பார்கள்.  அதே போல, ஏதேனும் குறை, தப்பு என்று அவர் மீது காட்டி விட்டால், உடனே தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது எளிதாக கையை காட்டி விடுவார்கள். "They dont mind throwing someone under the bus to save their back. They enjoy doing such things". இப்படி பட்டவர்கள் தன்னை சுற்றி எல்லாரும் புகழ வேண்டும் என்று நினைப்பார்கள், எல்லாரும் சலாம் போடா வேண்டும், கும்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட மக்கள் அரசியல் தலைவர்கள் ஆயின், அவரை சுற்றி உள்ளவர்கள் பாடு அதோ கதி தான்.

உண்மையில் இப்படி பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சின்ன சின்ன criticism கூட அவர்களை உசுப்பேத்தி விட்டு விடும். இப்படி பட்ட பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் குடும்பத்தில், வேலையில், வெளி உலகத்தில், பண விசயத்தில் என்று  எல்லா வற்றிலும் தோல்வியை மட்டுமே சந்திப்பார்கள். இப்படி பட்ட மனிதர்களை சந்திக்கும் போது அல்லது பழகும் போது கவனமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையேல் உங்களை குழப்பி, உங்கள் தன்னம்பிக்கையை நாசமாக்கிவிட்டு போய் விடுவார்கள். இது என் சொந்த அனுபவத்தில் கண்டது.

நன்றி.

Wednesday, May 27, 2015

வெள்ளந்தி மனிதர்களும், பிழைக்க தெரிந்தவர்களும் The Idiot ம்





ரஷ்சிய எழுத்தாளர் Fyodor Dostoevsky அவர்களின் நாவல் இது. இவரின் இன்னொரு நாவலான crime and punishment போல மிக  பிரபலமானது இல்லை என்றாலும், மனிதரின் உணர்வுகளை படம் பிடித்து காட்டுவதில் இது மிக சிறந்த நாவல்.

ஒருவர், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்பினால் , பேசினால், உண்மையாக இருந்தால்  அல்லது உதவி செய்தால், நம் ஊரில் என்ன சொல்லுவார்கள் அவர்களை. . "வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறான் பாரு, பிழைக்க தெரியாதவன்".

அடுத்து ஒருவர் , ஒரு குறிக்கோளுடன் "இப்படி தான் வாழ்வேன்" என்று தன் கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல்  நடக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அவரை எப்படி  இந்த சமூகம் சொல்லும், "ஊரோடு ஒத்து வாழாதவன்" என்று முத்திரை குத்தும்.

அடுத்து ஒருவர், தன் மனதில் இருப்பதை வெளியில் கொட்டி விடுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள், straight forward ஆக, எதனையும் மறைக்கவோ, beating around the bushes ஆகவோ இல்லாமல் இருந்தால், அவரை என்னவென்று இந்த சமூகம் சொல்லும். "வாழ தெரியாதவன், எதை எப்படி பேசணும் எதை சொல்ல கூடாதுன்னு கூட தெரியாதவன்" என்று.

மேலே குறிப்பிடப்பட்ட பல குணாதிசயங்கள் அனைத்தும் நிறைந்த ஒருவர் தான் "பிரின்ஸ்" என்றழைக்கபடும் "மிஸ்கின்", "தி இடியட்" கதையின் கதாநாயகன். அதாவது, ஒருவரி வெள்ளந்தி மனிதராக இருப்பின் எப்படி சமூகத்தால் நடத்தபடுவார், உபயோகிக்கபடுவார் பின்னர் சக்கையாக தூக்கி எறியப்படுவார் என்பதை விளக்கமாக சொல்வது இந்த நாவல்.

அடுத்து ஒருவர் மனதில் எவ்வளவு எண்ணங்கள் இருப்பினும் வெளிப்படுத்தாமல் அல்லது பிரச்சனையை சந்திக்கவிரும்பாமல்  நமக்கு ஏன் அப்பா வம்பு, இது பெரிய இடத்து சமாசாரம், கிடைக்கிறவரை சுருட்டிட்டு விலகி ஓடி விடுவோம் என்று இருப்பவர்கள், இந்த சமூகம், ஊரோடு ஒத்து வாழ தெரிந்தவன், அல்லது பிழைக்க தெரிந்தவன் என்று சொல்லும். இது போன்ற ஒருவன்  ""Rogozhin",

அடுத்து பவர் மற்றும் பணம் வைத்து இருப்பவர்கள் "Super class" மக்கள். அவர்கள் எந்த சூழலையும்  தன் வசம் இழுக்க பார்பார்கள், அல்லது வளைக்க பார்பார்கள், அவர்கள் வசம் பணம், பதவி எல்லாம் உண்டு. இவர்கள் தான் ரஷ்யன் "Aristocrats".

இது 19ஆம் நூற்றாண்டு ரஷியன் high society மக்கள் கொண்டு அவர்களின் எண்ணங்கள், mindset கொண்டு எழுதப்பட்டது என்றாலும், இன்றைய சமூகத்திற்கும், சூழலுக்கும் கூட அழகாக பொருந்தும்.


டிஸ்கி

இது நாவல் பற்றிய என்னுடைய அனுமானிப்பு மட்டுமே, இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை.

நன்றி.


Tuesday, May 26, 2015

இந்திய பாரம்பரிய தளங்களும் Titanicம் இன்றைய இளைஞர்களும்

எங்களின் பக்கத்து மாகாணமான Tennessee மாகாணத்தில் உள்ள Knoxville, Pigeon Forge மற்றும் Smokey mountains க்கு கடந்த வாரம் மெமோரியல் டே weekend என்பதால் சென்று இருந்தோம். அங்கு,  Titanic museum ஒன்று Titanic கப்பல் போல வடிவமைக்க பட்டு இருந்தது. அங்கு, உண்மையான Titanic கப்பலின் பயணிகள், அதில் இருந்த deck போல வடிவமைக்க பட்ட அறைகள், அதில் உபயோகிக்கப்பட்ட பாத்திரங்கள், life boat, யாரெல்லாம் தப்பி பிழைத்தார்கள்...என்று ஏகப்பட்ட செய்திகள், விஷயங்கள் துணுக்குகள். ஒரு பெரிய உண்மையான iceberg கூட வைத்து இருந்தார்கள், பின்னர் 26டிகிரி வெப்பநிலையில் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் தண்ணீர் எப்படி இருக்கும், என்று தொட்டு பார்க்கவும் வைத்து இருந்தார்கள். உண்மை Titanic பற்றிய நிறைய செய்திகள் அறிய முடிந்தது. Titanic கப்பல் 1912 ஆம் ஆண்டு Southampton நகரில் இருந்து நியூயார்க் சிட்டி வரும் வழியில் iceberg மோதி விபத்துக்கு உள்ளாகி மூழ்கி விட்டது.


நிற்க, இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்பதற்கு காரணம் இருக்கிறது. மதுரையில், திருமலை நாயக்கர் அரண்மனை இருக்கிறது, அது 16 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது. அதன் பெரிய தூண்களும், அமைப்பும் கண்ணை கவரும். ஆனால், அங்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் காறி உமிழ்ந்து விட்டு தான் வர வேண்டும், ஒவ்வொரு தூண்களிலும் என்ன என்னவோ கிறுக்கல்கள், காதல் வசனங்கள், காதலர்களின் பெயர்கள்...என்று பல கண்றாவிகள். இதனை தவிர, ஒவ்வொரு தூணின் பின்னும் ஒரு காதல் ஜோடிகள் இருப்பார்கள். இத்தனைக்கும் எல்லா இடங்களிலும் எழுதி வைத்து இருக்கிறார்கள், தூணில் கிறுக்காதீர்கள், காதல் என்ற பெயரில் அசிங்கம் செய்யாதீர்கள் என்று. ஆயினும் யார் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பறவை எச்சங்கள், உள்ளே museum என்று வைத்து இருக்கிறார்கள், பாழடைந்து  கிடைகிறது. 


இதே நிலை, இந்தியா முழுக்க பரவி கிடக்கிறது.

UGLY WRITING: Defaced walls of the Golconda Fort Photo: Mohamed Yousuf



Picture from http://www.fullstopindia.com/10-annoying-things-about-india-and-indians/#prettyPhoto

கிட்ட தட்ட எல்லா புராதன தளங்களும் இப்படி பட்ட நிலையை அடைந்து இருக்கின்றன.

இதனை என்னும் போது எனக்கு ஒரு சில விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. எத்தனை பேருக்கு நமது, வரலாறு தெரியும். சரி, முழு இந்திய சரித்திரம் அறிந்திருக்க வேண்டாம், தென்னிந்திய சரித்திரம் அல்லது, சுதந்திர போராட்டம்  பற்றி எத்தனை இளைஞர்கள் அறிந்துஇருக்கிறார்கள். எத்தனை பேருக்கு நாட்டு நடப்பு சூழல் தெரியும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு காணொளி மிக மன வருத்தத்தை அளித்தது. இது மும்பை மற்றும் டெல்லி வாழ் இந்திய இளைஞர்கள் இடம் எடுக்கப்பட்ட சர்வே. இந்தியா பற்றி ஐந்து அடிப்படை கேள்விகள் கேட்கபடுகிறது அதற்க்கு அவர்களின் பதில்கள் எனக்கு கண்ணில் நீர் வரவழித்தது. நீங்களும் பாருங்கள்.






இந்திய புராதன தளங்களை தொன்மையை எப்படி காக்க போகிறோம்?, எப்படி இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எப்படி இந்தியா பற்றி அதன் கலாசாரம், வரலாறு பற்றி சொல்லி கொடுக்க போகிறோம்?,  எப்பொழுது, நான் இந்தியன் அல்லது இந்திய வம்சாவளியில் வந்தவன்/ள் என்று பெருமையாக சொல்ல வைக்க போகிறோம்?. அடுத்தடுத்த கேள்விகள் என் தலை சுற்ற வைக்கின்றன. 

1912 ஆம் ஆண்டு எங்கோ உருவாக்கப்பட்ட, மூழ்கி போன Titanic பற்றி எனக்கு தெரிந்த அளவு கூட, நான் பிறந்து, வளர்ந்த மதுரையில் இருக்கும் 16 ஆம் நூற்றாண்டு திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி தெரியவில்லை,என்று என்னும் போது, எனக்கே ஒரு தலைகுனிவு ஏற்படுகிறது. வெறும் professional course மட்டுமே வாழ்க்கை, அது மட்டுமே சோறு போடும் என்று நம்மை இயந்திரங்கள் ஆக்கி படிக்க செய்ததின் விளைவோ இது என்று என்ன தோன்றுகிறது, கவலை கொள்ள செய்கிறது.

 நன்றி.


Saturday, May 23, 2015

சிறு சிறு அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்!


இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்ட் பிரச்னை அம்மாவுக்கு இருந்து இருக்கிறது. ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், இதெல்லாம் ஒன்னும்  செய்யாது, சரியா போயிடும் என்று சொல்லி சொல்லியே சால்சாப்பு சொல்வார்கள். இப்போது, கழுத்தில் கட்டி போல ஆரம்பித்து இருக்கிறது, specialist இடம் கன்சல்ட் செய்த பொது, Goitre என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது தைராய்ட் அளவு பெரியதாகி இருப்பதை இப்படி குறிக்கிறார்கள். முக்கால் வாசி iodine குறைபாட்டினால் இது ஏற்படுகிறது என்றாலும், கவனியாமல் விட்டதால் கான்செர் அளவுக்கு கொண்டு வந்து விடும் அபாயமும் இருக்கிறது.

மேலும் இது கழுத்தை சுற்றி இருப்பதால், வாய்ஸ் கார்ட் அல்லது பேச்சு குழாய் மற்றும் airways அல்லது மூச்சு குழாய் களையும்அழுத்தும் அபாயம் இருக்கிறது. மிகவும் பெரியதாகி விட்டால் சர்ஜெரி மட்டுமே வழி. முதலில் தோன்றும் சிறு சிறு அறிகுறிகளை கவனித்து இருந்தால், வீக்கம் ஆகாமல் தடுத்து இருக்கலாம், சர்ஜெரி அளவு வந்து இருக்காது.

இப்போது என் அம்மாவிற்கு 5 வாரத்திற்குள் சர்ஜெரி  செய்ய சொல்லி இருப்பதால், ஜூன் மத்தியில் இந்தியா பயணம். ஒவ்வொரு முறையும் இந்திய பயணம் எனக்கு பல பாடங்களை கற்று கொடுத்து இருக்கிறது.  பார்க்கலாம் இந்த முறை  என்ன கற்று கொள்ள போகிறேன் என்று.

நன்றி.

Friday, May 22, 2015

IT Outsourcing to india என்னும் ஒரு தலைவலி

Pictures from Google images

எங்களுக்கு தெரிந்த அமெரிக்கர் அவர், எப்போதும் எங்களுடன் டென்னிஸ் விளையாடுவார். புது ஸ்டார்ட் அப் கம்பெனி கடந்த வருடம் தொடங்கி இருந்தார். அப்போது Back end and website மற்றும் சில சப்போர்ட் வேலைக்களுக்கு இந்தியன் கம்பெனி ஒன்றிடம்  Outsourcing செய்ய இருப்பதாக சொல்லி இருந்தார். 6 மாதத்திற்கு பிறகு, நேற்று டென்னிஸ் விளையாடும் போது, எப்படி இருக்கிறது outsourcing என்று கேட்டது தான் தாமதம். அழுகாத குறையாக பெரிய லிஸ்ட் படித்து விட்டார்.

அவர் சொன்ன சில காரணங்கள் இங்கே.


  1. முதலில், நேர வித்தியாசம்.பெரிய  சாப்ட்வேர் கம்பனிகள் இந்த நேர வித்தியாசம் கருத்தில் கொண்டே 12 மணி முதல் 10 மணி வரை ஆபிஸ் நடத்தினாலும், சிறு சிறு நிறுவனங்கள் இன்னும் இதனை adapt செய்யவில்லை என்பதாலும், மிக குறைந்த மக்கள் கொண்டு இயங்குவதாலும், ஒரே ஆளுக்கு வேலை பளு அதிகம் கொடுகிறார்கள் அல்லது, பல ப்ராஜெக்ட் வேலையை ஒருவரிடம் கொடுகிறார்கள், அதனால் இங்கே காலை என்னும் போது அங்கே மாலை நேரம் என்பதால் வேலை பார்க்க ஒரு உற்சாகம் இருப்பதில்லை. 
  2.  ப்ராஜெக்ட் ப்ரோபோசல் முடிந்தவுடன் நம் வேலைக்கு என்று assign செய்யப்படும்  ப்ராஜெக்ட் மேனேஜர் களும், developers ம் , அதிகம் சப்ஜெக்ட் தெரியாதர்கள்,  வேலை செய்யும் டெவெலொபெர் எல்லாம் காலேஜ் ப்ரெஷ் மென் என்பதால் ஒரு அனுபவத்திற்க்காக என்றே வேலைக்கு சேர்கிறார்கள், வேலைக்கு முன் அனுபவங்கள் இருப்பதில்லை.  அதனால் வேலை பற்றி ஒவ்வொரு முறையும் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க மிகவும் கஷ்டபட வேண்டி இருக்கிறது, இதோடு நேர வித்தியாசமும் சேர்ந்து தலைவலி கொடுகிறது.
  3. அடுத்தது, taking responsibility. அதாவது, ஒரு வேலையை நாம் assign செய்தோம் என்றால், அது நம் வேலை போல என்று எடுத்து, தொடக்கம் முதல் கடைசி வரை யோசித்து வேலை செய்து முடித்து தருவதில்லை. நாம் என்ன என்ன எழுதி தருகிறோமோ அதனை மட்டுமே செய்வது. ஒரு சிறு வார்த்தைகள், தவறி இருப்பினும் அல்லது குறிப்பிட படாமல் இருப்பினும், "நீங்கள் அதில் குறிப்பிடவில்லை, அதனால் நாங்கள் செய்து தர வில்லை" என்று சால்சாப்பு சொல்லுவது. 
  4. அடுத்தது, excuses சொல்லுவதில் இந்திய outsourcing கம்பனிகள் சிறந்தவை. அதாவது, முந்தய பாராவில் குறிப்பிட்டது போல, நீங்கள் சரியாக requirements கொடுக்கவில்லை, என்று ஆரம்பிப்பதில் இருந்து, எனக்கு எதுவும் இதனை பற்றி தெரியாது...நீங்கள் என் மேனேஜர் இடம் கேளுங்கள்..அல்லது டெஸ்டிங் மக்களிடம் கேளுங்கள்..என்று கையை காட்டுவது. 
  5. அடுத்த முக்கியமான பாயின்ட் , "Yes" என்ற வார்த்தையை உபயோகிப்பது, அதன் அர்த்தம் வேறாக இருப்பது. உதாரணமாக, We need to have this in production by the end of the month" என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அதற்க்கு "yes" என்று பதில் சொல்லுவார்கள். அதற்க்கு அர்த்தம், "கட்டாயம் முடித்து விடுவோம்" என்பதல்ல, மாறாக, "நீங்கள் சொன்னது எங்கள் காதில் விழுந்தது" என்பது மட்டுமே.இந்திய கம்பனிகளுக்கு "no" என்று சொல்லவே தெரிவதில்லை.
  6. முடிவாக, இப்படி நம்மிடம் ப்ராஜெக்ட் ப்ரோபோசல் செய்து நம்மிடம் outsourcing அக்ரீமெண்ட் வாங்கும் இந்திய கம்பனிகள் எல்லாமே, ரொம்ப ஸ்ட்ரீட் ஸ்மார்ட். அதாவது வேலை ஆர்டர் வாங்கும் வரை இருக்கும் சின்சியாரிட்டி, வேலை முடித்து கொடுப்பதில் இருப்பதில்லை, வேலை கொடுத்து பல மாதங்கள் ஆகினும்  சிறிது கூட வேலை நடந்து இருக்காது. என்ன என்று கேட்டாலும் நிறைய excuses, pointing பிங்கர்ஸ் டு others என்று நிறைய. "They are so greedy , I wont trust them"
இது ஒரு குறிப்பிட்ட மனிதரின் சாப்ட்வேர் outsourcing  அனுபவங்கள் என்று மட்டும் என்னால் தள்ள இயலவில்லை. ஏனெனில், என்னுடைய சொந்த அனுபவமும் ஒரு சில நேரங்களில் இப்படி தான் இருக்கிறது. என்னுடைய ப்ரெண்ட் ஒருவரின் வெப்சைட் உருவாக்க என்று ஒரு ப்ரீ-லான்ஸ் கம்பெனி  ஒன்றிடம்  outsource செய்து இருந்தோம். முதலில் அவர்கள் கேட்கும் ரேட் இல் இருந்து, அவர்கள் கொடுக்கும் output வரை பார்த்தால். பேசாம, இங்கே இருக்கிற ஒரு ஸ்டுடென்ட் எடுத்து அவருக்கு இன்டர்ன்ஷிப் பணம் கொடுத்து அழகா முடிச்சிடலாம் என்று தோன்றி விட்டது. இல்லை, இங்க இருக்கிற ப்ரீலான்ஸ் dev யாரையாவது பிடிச்சு வேலை முடிச்சிடலாம்னு தோன்றிவிட்டது. காசு கொஞ்சம் கூட போனாலும், product output ஆவது, ஒழுங்கா வரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அவர் சொன்னதை நானும் என் சொந்த அனுபவத்தில் வழி மொழிகிறேன். "Some Indian IT outsourcing companies are so greedy and I won't trust them"


டிஸ்கி 

இது என் சொந்த அனுபவத்திலும், தெரிந்தவர்கள் அனுபவத்திலும் குறிப்பாக Software outsourcing வைத்து மட்டுமே எழுதப்பட்டது.  பொதுப்படையானது அல்ல.

நன்றி  

Wednesday, May 20, 2015

எண்ணங்களும் ,காட்சிபடுத்தலும், வெற்றியும்

Dr. APJ. அப்துல்கலாம் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம், "இளைஞர்களே கனவு காணுங்கள்" என்பது. அதனை வைத்து பலர் காமெடி செய்தது கூட பின்னர் நடந்தது.ஆனால் நீங்கள் புத்தகம் படிப்பவராக அதுவும் non-fiction தன்னம்பிக்கை தரும் புத்தகங்கள் படிப்பவராக இருப்பின் கிட்ட தட்ட அனைத்து புத்தகங்களும் ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் "The power of dream and visualization" என்பது.

உதாரணமாக, "The Secret by Rhonda Byrne", "Think and grow rich by Napolean Hill" , "How to win friends and Influence people by Dale Carnegie, "Seven habits of highly effective people by Stephen Covey", "The power of positive thinking by Norman Vincent Peale"....etc etc போன்ற பல புத்தகங்களின் அடி நாதம் "The power of thoughts  and visualization" அல்லது, "எண்ணங்களும், காட்சிப்படுதலும்".

உங்களுக்கு ஆபிசில் பிரச்சனையா, உங்கள் ஆபிஸ் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைகிறீர்களோ அதனை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அதனை காட்சி படுத்தி பாருங்கள். தொடர்ந்து, நீங்கள் ஒரு விஷயத்தை பற்றில் ஆழமாக நம்பும் போது, கனவு அல்லது காட்சி படுத்தி பார்க்கும் போது, நம்முடைய மூளையில் ஆழப்பதிந்து, நம்மை சுற்றியுள்ள auro மாறி விடுகிறது. இதனையே "Rhonda" அவர்கள் "The universe is like a Genie, whatever you wish /visualize with heart  for , it will grand you" என்று சொல்லுகிறார். என்னை கேட்டால் நிறைய மத நம்பிக்கைகளுக்கும் இதுவே மூலம் என்று சொல்லுவேன். கடவுள் நாமத்தை ஜெபிக்க சொல்லுவது, கடவுளிடம் முறை இடுவது, திரும்ப திரும்ப ஒரே எண்ணத்துடன் கடவுளிடம் வாசிப்பது என்பதெல்லாம் இதில் இருந்து வந்திருக்கிறதோ என்று எனக்கு எண்ண தோன்றும்.நம்மூரில், நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள் என்பார்கள், அதுவும் இதனுடன் சேர்ந்தது என்று நினைக்கிறன்.

சரி, கனவு இருக்கிறது, பெரிய மனிதர் ஆக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று, அது மட்டும் போதுமா வெற்றியடைய என்றால், இல்லை என்கிறார் Napolean Hill அவர்கள். கனவு வெறியாக வேண்டும், உதாரணமாக, நீங்கள் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க விழைகிறீர்கள் என்று எடுத்து கொள்ளுவோம், அது ஒரு கனவு என்ற நிலையில் இருந்து வெறி என்ற நிலைக்கு வர வேண்டும், எண்ணம், செயல் எல்லாமே அதனை நோக்கியே இருக்க வேண்டும். அதனை "desire". அடுத்து அந்த எண்ணங்கள், கனவுகள் எல்லாம் நனவாகும் என்று நம்ப வேண்டும், அப்படி நனவானால் என்ன இருப்பீர்கள் என்று காட்சிபடுத்தி பாருங்கள் என்கிறார்கள்.  அதுவே "visualization". அடுத்து உங்களுக்கு அந்த கனவு சம்பந்தமான basic அறிவு இருக்க வேண்டும். "Specialised knowledge", அல்லது உங்களுக்கு அந்த அறிவு இல்லை என்றால், அதனை பெற முயற்சிக்க வேண்டும்.

சரி, உங்களுக்கு கனவு, வெறி, நம்பிக்கை, அடிப்படை அறிவு இருந்தால் போதுமா வெற்றி பெற என்றால் இல்லை. அடுத்த முக்கியமான தகுதி, "organized planning" அல்லது கவனமாக திட்டமிடல் வேண்டும். பின்னர், நல்ல டீம் ஒன்று உருவாக்குவது. ஏனெனில் ஒருவராக எதனையும் சாதிக்க இயலாது. டீம் உருவாக்குவது மட்டும் அல்லாமல் அந்த டீம் மக்களை வழிப்படுத்த உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவழிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்க வேண்டும், ஆனால் செயல் படுத்தும் போது நீங்கள் full responsibility எடுத்து கொள்ள வேண்டும். Pleasing personality இருக்க வேண்டும், motivate செய்ய வேண்டும்.

அடுத்தது, முடிவெடுத்தல், அதுவும் எப்போது முடிவெடுக்க வேண்டுமோ அப்போது முடிவெடுக்க வேண்டும், தள்ளி போடா கூடாது. தினமும் எது முக்கியம் என்று  prioritize செய்ய வேண்டும். ஒரு முறை prioritize செய்து விட்டால், ஒவ்வொரு காரியத்தையும் தள்ளி போடாமல் முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகள் உங்கள் தோல்விக்கு முதல் படி.

நான் மேற் குறிப்பிட்ட எல்லாமே இருக்கிறது, பின்னரும் உங்களை வெற்றி தேடி வரவில்லை என்றால், அவசரபடாமல் பொறுமை காக்க வேண்டும். திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்த கூலி தீரும்" திருவள்ளுவர் சொன்னது.


நான் தொடங்கிய வாக்கியத்திற்கு வருவோம். கனவு காணுங்கள், ஆனால் அதோனோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அந்த கனவை வெறியாக்கி, நம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து கட்சிபடுத்தி, அதற்க்கு தேவையான அறிவை சேகரித்து, கவனமாக திட்டமிட்டு, நல்ல ஒரு டீம் உருவாக்கி, தள்ளி போடாமல் முடிவெடுத்து, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.

டிஸ்கி

இது சில self help புத்தகங்களில் நான் படித்ததை வைத்து தொகுத்து எழுதியது மட்டுமே. பொது அறிவுரை அல்ல.

எப்பொழுதும் கனவு மட்டும் காணும் மக்களுக்காக இந்த பாடல். (நன்றி நந்தவனத்தான் அவர்களே!)




நன்றி

Tuesday, May 19, 2015

ஒல்லியாக இருப்பதெப்படி! பிரெஞ்சு வழி


அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை  உண்டு, french paradox என்று அது அழைக்கபடுவதுண்டு, அது எல்லா பிரெஞ்சு மக்களும் ஸ்லிம் ஆக பிட் ஆக இருப்பார்கள் என்பது. இது அவர்களின் ஜெனெடிக் ஆ, இல்லை லைப் ஸ்டைல் ஆ என்று பலர் குழம்புவார்கள்.

இப்போது மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது..ஆனால் ஒரு 10 வருடத்திற்கு முன்பு வரை, குண்டான obese பிரெஞ்சு, ஜெர்மன் பெண்கள்  யாரையும் நான் பார்த்ததில்லை. சொல்ல போனால், அவர்கள் நிறைய முறை சாப்பிடுவார்கள் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வைன் குடிப்பார்கள். பின்னர் எப்படி இப்படி ஒல்லியாக இருக்கிறார்கள் என்று விவாதம் நடக்கும்.

என்னுடைய பர்சனல் பிரெஞ்சு சாப்பாட்டு அனுபவம் இங்கே. நான் ஒரு முறை கருத்தரங்கிற்காக  ஆக ஓரு நாள் Strasbourg, France இல் தங்கி இருக்கிறேன். அப்போதுஎங்கள்  ஹோஸ்ட் ஆக இருந்த ஒரு குடும்பம் ஒரு நாள் இரவு சாப்பாடிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அது இரவு சாப்பாடு அல்ல விருந்து, சொல்ல போனால் 5 மணியில் தொடங்கிய அது 10 மணி வரை நீண்டது.  7 கோர்ஸ் சாப்பாடு அது  

L’Apéritif/Hors-d’œuvres (finger food), 
L’Entrée (Appetizer), 
Salade( Salad), 
Le Plat Principal/Plat de Résistance (The Main Dish), 
Fromages (Cheese desert) , 
Dessert (Crème brûlée)
le café

ஒவ்வொரு சாப்பாடு முடியும் போதும் ஒரு புது வைன் பாட்டில் ஓபன் செய்வார்கள். கிட்ட தட்ட எல்லா சாப்பாடும் அவர்கள் வீட்டில் விளைந்த காய்கறி, பழங்கள் கொண்டு அல்லது பக்கத்து உழவர் சந்தையில் வாங்கியவை. அவ்வளவு சுவையான தக்காளிகளை நான் வேறு எங்கும் சாப்பிட்டதே இல்லை. மாமிச பட்சினியாக இருந்து வெஜிடரியன் ஆக நான் ஆன புதிது வேறு அப்போது..வேறு எந்த மாமிச உணவுகளை நான் சாப்பிட முடியாமல் போனாலும், நிறைய வெஜிடேரியன் ஆப்சன்ஸ் எனக்கு இருந்தது. அதுவும், என்னால் அவர்களின் Duck Confit சாப்பிட முடியாமல் போனதே என்று பின்னர் வருந்தியதுண்டு.  இப்படி வித விதமாக சாப்பிட்டாலும் எப்படி அவர்களால் ஒல்லியாக இருக்க முடிகிறது என்று பாப்போம்.


முதலில் அவர்கள் கொடுக்கும் போர்சன் மிக மிக குறைவு, அடுத்து, அவர்கள் சாப்பிடுவது ஒரு கடமையாக அவசர கதியாக சாப்பிடுவதில்லை. மாறாக, எல்லோரும் சுற்றி அமர்ந்து கொண்டு பேசி கொண்டு, சிரித்து கொண்டு சந்தோசமாக ரசித்து சாப்பிடுகிறார்கள். 7 கோர்ஸ் சாப்பாடு என்றாலும் ஒவ்வொரு கோர்ஸ்ம் ஒரு கை அளவு தான் இருக்கும். பிங்கர் பூட் என்றாலும்  எண்ணையில் பொரித்த உணவுகளை பார்க்கவே முடியாது. நிறைய BBQ செய்து இருப்பார்கள், அல்லது baking செய்து இருப்பார்கள். நிறைய காய்கறிகள் சாலட் ஆக வந்து சேரும். நிறைய சீஸ் வகைகள்..அனைத்தும் சொந்த பார்ம் இல் இருந்து வந்தவை அல்லது பக்கத்தில் இருக்கும் உழவர் சந்தையில் இருந்து வந்தவை. அதுவும், குறிப்பாக Brie சீஸ் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாமே லிமிட் தான், நிறைய வைன் குடிப்பார்கள் போல என்று எண்ண வேண்டாம், அதுவும் max இரண்டு கிளாஸ் மேலே போகாது. ஆற அமர அமர்ந்து ரசித்து ருசித்து சாப்டுவார்கள. 



அடுத்து அவர்களை போலே, உடற்பயிற்சி செய்பவர்களை பார்க்க முடியாது. அதற்காக தினமும் ஜிம் செல்வார்கள் என்று நினைக்க வேண்டாம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிறைய பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உண்டு என்பதால் கார் உபயோகிப்பவர்கள் மிகவும் குறைவு..அதுவும் நிறைய பிரெஞ்சு மக்கள், நிறைய நடப்பார்கள், அல்லது சைக்கிள் உபயோகிப்பார்கள். எல்லா வீட்டு வேலைகளையும் செய்வார்கள், வேலைகாரி என்ற கான்செப்ட் இல்லவே இல்லை, நிறைய தோட்ட வேலை செய்வார்கள். நிறைய வீடுகளில் காய்கறி தோட்டம் உண்டு. junk food என்பது மெட்ரோ ஊர்களில் வேண்டுமானால் இருக்கும்..ஆனால் மற்ற எல்லா ஊர்களிலும் இன்னும் junk food ஆக்கிரமிக்கவில்லை.

சரி இப்போது என்னுடைய கடந்த பதிவிற்கு வருவோம். இந்திய உணவு பழக்க வழக்கத்திற்கும் இதற்கும் இருக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உண்டு, ஒன்று..போர்சன் கண்ட்ரோல், இரண்டு உடற்பயிற்சி..அதோடுஇன்னும் சிலதும்  சேர்த்து கொள்ளலாம், பொரித்த உணவுகள் அறவே இல்லை, அவசர கதியில் யாரும் சாப்பிடுவதில்லை. நம்ம ஊரில் ஒன்று சொல்லுவார்கள், "நொறுங்க தின்றால் நூறு வயது என்று", அது நிறைய சாப்பிட வேண்டும் என்று அர்த்தமில்லை, மாறாக , நன்றாக மென்று ரசித்து சாப்பிட வேண்டும் என்பதே. அதுவே பிரெஞ்சு மக்களின் பிட்னெஸ் ரகசியம் என்று நான் நினைக்கிறன்.


நன்றி.

Monday, May 18, 2015

சுகர் / டியாபெடிக்ஸ் பெயரில் இந்தியாவில் நடக்கும் கூத்துகள்

எங்கும் எதிலும் டியாபெடிக்ஸ்..சுகர் என்ற வார்த்தை இப்போது எங்கும் நீக்கமற இந்தியாவில் நிறைந்து இருக்கிறது. 30-35 வயது மக்களுக்கு எல்லாம் இப்போது சுகர் வருகிறது. என் பெரியம்மா பெண் அவர், 39 வயதாகிறது அதற்குள் டியாபெடிக்ஸ், அதற்கென்று மருந்து உட்கொள்ளுகிறார்.
முன்பெல்லாம் 60 வயது மக்களுக்கு அதிகம் வரும் என்று நம்பப்பட்ட இது இப்போதுமிடில் ஏஜ் மக்களையும் அதிகம் ஆட்டி படைக்கிறது.  நமது உணவு பழக்க வழக்கம், அதிக உடல் உழைப்பு இல்லாத ஓடி ஆடி உழைக்காத வாழ்க்கை முறை என்பதையும் தாண்டி மக்களுக்கு இதில் இருக்கும் மூட நம்பிக்கைகள் ...தலை சுற்றும்.

உதாரணமாக..என் அம்மாவுக்கு டியாபெடிக்ஸ் இருக்கிறது. தினமும் என்ன சாப்பிட்டார்கள், என்று நான் கேட்பது உண்டு. உடனே அவர்கள் சொல்லுவது, நான் இப்போது சப்பாத்தி தான் சாப்பிடுறேன், இல்ல ஓட்ஸ் குடிக்கிறேன்..அப்படியும் சுகர் குறைய மாட்டீங்கிறது என்பார்கள். ஆனால், நான் திரும்ப திரும்ப அவர்களிடம் சொல்லுவது ஒன்று தான்..."எது சாப்பிட்டாலும், அளவோட சாப்பிடுங்க..கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க..ஒரே நேரத்தில நிறைய சாப்பிடாதீங்க, நிறைய தானியம், பருப்பு வகைகள், நிறைய காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 3 வேலையாக சாப்பிடாமல் 6 வேலையாக சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்". எல்லாம் சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்கு தான்.

சுகர் இருப்பவர்கள் "கார்போஹைட்ரேட் குறைவாக அல்லது அறவே சாப்பிட கூடாது", அரிசியில் இருப்பதை விட, கோதுமையில் சிறிது குறைவாக கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதற்காகவே, இப்படி சாப்பிட சொல்லுகிறார்கள்" ஆனால் நம் மக்கள் செய்வதென்ன, அரிசி தானே சாப்பிட கூடாது, என்று, சப்பாத்தி, ஓட்ஸ் என்று வளைத்து கட்டி சாப்பிடுகிறார்கள். போர்சன் கண்ட்ரோல் இல்லாமல் அதிகம் சாப்பிடும் போது, ரத்தத்தில் சுகர் அளவு சூட் அப் ஆகும். உடனே மயக்கம் வரும்.

அடுத்தது உடல் உழைப்பு அல்லது நடை பயிற்சி கட்டாயம் தேவை. இதில் இப்போதெல்லாம்...நடை பயிற்சி செய்வதெல்லாம் எதோ பாஷன் போல...சும்மா ரெண்டு தெரு நடந்துட்டு வந்து..ஆச்சு என்று கணக்கு காட்டுவது. வேர்வை வர நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  சும்மா நானும் போனேன்..நடந்தேன் என்று யாருக்காகவோ செய்கிறார்கள்.

அடுத்து டியாபெடிக்ஸ் என்று டாக்டரிடம் சென்றால் நடக்கும் கூத்துகள்..ஐயோ என்று இருக்கும். இப்படி இவர்கள் செல்லும் டாக்டேர்கள் எல்லாம் Endocrinology Specialist அல்ல, மாறாக, பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள். இவர்கள் பெரும்பாலும் செய்வதென்ன? . முதலில் சிம்பிள் சுகர்
ஸ்ட்ரிப் டெஸ்ட் எடுப்பார்கள்.அதில் வரும் நம்பர்களை வைத்து 140 தான் இருக்க வேண்டும்..உங்களுக்கு 200 இருக்கிறது, அதனால மருந்து போடணும் என்பார்கள்.  Hemoglobin A1c டெஸ்ட், dialated eye exam என்று பலதும் டெஸ்ட் செய்வதில்லை. பின்னர் தங்கள் கிளினிக்க்கு மெடிக்கல் சேல்ஸ் ரெப்ரெசெண்ட்டிவ் கொண்டு வந்து தரும் மருந்துகளை  இவர்களுக்கு எழுதி தருவது. அதுவும் ஒரு சில நேரங்களில் இவர்கள் எழுதி தரும் மருந்து அவர்கள் வைத்திருக்கும் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது. "இதை 3 மாசம் சாப்பிடுங்க, குறையுதான்னு பார்க்கலாம், இல்லாட்டி வேற மருந்து மாத்திரலாம்" என்று சொல்லியே கொடுக்கிறார்கள்.

மக்களும், அதான் மருந்து போடுறோம்ல சுகர் ஏறாது என்று, வளைத்து சாபிடுகிறார்கள். அடுத்து 3 மாதம் கழித்து மறுபடியும் ஒரு ஸ்ட்ரிப் டெஸ்ட், மறுபடியும் மருந்து மாற்றம். டாக்டர்கள் ஒரு சில நேரம் இப்படி trial அண்ட் error செய்ய அல்லது எங்கள் துறையில் "கிளினிகல் ட்ரயல்" அல்லது மக்களிடம்  சோதனை செய்வது. அதற்க்கு இப்படி அப்பாவி பொது மக்களை அதிகம் படிப்பறிவு இல்லாத மக்களை உபயோகிப்பது.

என் அம்மா எப்போது இங்கே வந்தாலும் இங்கு இருக்கும் மருத்துவரிடம் புல் செக் அப் செய்ய அழைத்து சென்று விடுவேன். அவர்கள் உடனே செய்வது, இந்தியாவில் இருந்து அவர்கள் எடுத்து வரும் சுகர் மாத்திரைகளை தூக்கி எறிவது தான். அதுவும் ஒரு தமிழ் டாக்டர் அம்மா இங்கே இருக்கிறார்கள்,அவர்கள் தமிழிலேயே என் அம்மாவிடம் மாத்திரை கொடுத்தவர்களை திட்டுவார்கள். ஏன் இப்படி ஒரு மருந்து கொடுகிறார்கள் என்று. முழு செக் அப் எதுவும் செய்யாமல், அதிக டோஸ் அல்லது குறைந்த டோஸ் என்று நடக்கும் பல கூத்துகள், அதோடு மக்களுக்கு இருக்கும் மிக அதிக மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து எங்கும் எதிலும் சுகர் என்னும் வார்த்தை நீக்கமற நிறைய உதவுகிறது.

நான் மருந்து கொடுக்கும் மருத்துவர்களை இங்கே குறை சொல்லவில்லை, அவர்கள் எக்ஸ்பெர்ட் அல்லர்..அவர்களால் முடிந்தவரை செய்கிறார்கள்..ஆனால் இது எந்தவிதத்திலும் மக்களுக்கு உபயோகபடாது என்பதே என் எண்ணம்.

நன்றி.

Saturday, May 16, 2015

இந்திய குழந்தைவளர்ப்பும் , அமெரிக்க குழந்தைவளர்ப்பும்

காலை நேரத்தில் பள்ளிக்கு செல்ல குழந்தை அழுகிறது அல்லது அடம் பிடிக்கிறது என்றால் நாம் என்ன செய்வோம், பயங்கரமாக கத்தி, ரெண்டு அடி போட்டு,  டிரெஸ்ஸை மாட்டி விட்டு, அவசர அவசரமாக சாப்பாடு திணிச்சு விட்டு, அலோக்க தூக்கிட்டு போயி வண்டியில/வேன்ல/கார்ல  விட்டுட்டு வருவோம். குழந்தைகள் லஞ்ச் சாப்பிடாமல் வந்தால், வீட்டுக்கு வந்தவுடன் டிவி போட்டுவிட்டு சாப்பாடு திணிச்சு விடுவோம். குழந்தைகள் நன்றாக சாப்பிட வேண்டும் என்று தனி சாப்பாடு செய்வோம், எனக்கு சாப்பாடு வேணாம் ஐஸ் கிரீம் வாங்கு இல்லாட்டி சாப்பிட மாட்டேன் என்றால் வாங்கி கொடுக்கிறோம். எப்பொழுது கடைக்கு சென்றாலும் குழந்தை கை காட்டும் சின்ன சின்ன சினாக்ஸ் வாங்கி தருகிறோம்.  எனக்கு இப்போ பொம்மை வேணும் என்றால் ,அது கேட்கும் பொம்மை வாங்கி தருவோம்.  என் டிவி தான் வேண்டும் என்றால் "டிவி ரிமோட்டை" தியாகம் செய்வோம். குழந்தை எப்போது தூங்குகிறதோ, அது வரை நாமும் தூங்காமல் விழித்து கொண்டு இருப்போம், நமக்கு வேலை இருந்தாலும் தூக்கம் வந்தாலும் குழந்தை தூங்கும் வரை விழித்து இருப்போம்....லேட் ஆக படுக்கைக்கு செல்வதால் அடுத்த நாள் காலையில் குழந்தைகளை எழுப்ப போராட வேண்டி இருக்கும். நமக்கு ஆபிசுக்கு செல்லும் அவசரத்தில் குழந்தைகளையும் கிளப்பி, சாப்பாடு ஊட்டி, டிரஸ் பண்ணி விட்டு...கிளம்புவதற்குள் அப்பாடா என்று இருக்கும்.

..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.


அடுத்து என் பக்கத்து வீட்டு அமெரிக்க அம்மா செய்வதை பாப்போம்  , அவரின் மகள் காலையில் பள்ளிக்கு கிளம்பாமல் டிரஸ் பண்ணாமல் எனக்கு நீ நான் சொல்லும் கவுன் கொடுக்கும் வரை செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது அடிக்க வில்லை, கை கூட வைக்க வில்லை, அதற்க்கு பதில் 1-2-3 என்று கவுன்டிங் செய்து கொண்டு இருந்தார்கள். 3 கவுண்ட்குள் அந்த குழந்தை அவளுக்கு குடுத்து இருக்கும் டிரஸ் ஐ  எடுத்து சாப்பிட வேண்டும்.. இல்லையேல், "Go to your room". குழந்தை உடனே, அவளின் ரூமுக்குள் சென்று "thinking time" எடுத்து கொள்கிறது. பின்னர் 20 நிமிடம் கழித்து, அதுவாக வந்து டிரஸ் மாட்டி கொண்டு ரெடி ஆகி விடுகிறது.  அதே போல டைனிங் டேபிளுக்கு "breakfast" வர அழைக்கும் போது வர வேண்டும்.  அங்கு வைத்திருக்கும் சாப்பாடு சாப்பிட வேண்டும், அது எந்த உணவு அவர் அம்மா தருகிறார்களோ அதனை சாப்பிட வேண்டும். இது கொடுத்தால் தான் சாப்பிடுவேன் இல்லையேல் சாப்பிட மாட்டேன் என்று அழுதால், "சரி, அப்படி என்றால் நீ சாப்பிடவே வேண்டாம் எழுந்து போ" என்று சொல்லி விடுவார்கள்.  குழந்தை பட்டினியுடன் செல்லும் பள்ளிக்கு, அதே போல பசி வயிற்றை கிள்ள, லஞ்சில் வைக்கும் அனைத்தையும் ஒழுங்காக சாப்பிடும்.

 மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் சிறிது ஸ்நாக், பின்னர் விளையாட்டு, பின்னர் டின்னெர், 7:30 மணி அடித்தால் பிள்ளைகள் தானாகவே பல் விளக்கி, நைட் டிரஸ் மாற்றி, படுக்கைக்கு சென்று விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் பெற்றோர் குழந்தைகளுக்கு "புத்தகம் படிக்கிறார்கள்" , தினமும் நடக்கிறது. 8 மணிக்கு குழந்தைகள் தூங்கி விடுகிறார்கள், பின்னர் கிட்ட தட்ட 2 மணி நேரம் கணவன் மனைவிக்கு கிடைக்கிறது. அதே போல ஒவ்வொரு நாளும் குழந்தைகள் காலையில் 6 மணிக்கு எழுந்து விடுகிறார்கள். 

இந்த ஊரில் நீங்கள் குழந்தைகள் டாக்டரிடம் சென்றால் அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான். "Who is running your house, you or your kid?" என்று கேட்பார்கள். அதாவது,  இது உங்கள் வீடு, யாரு உங்களை ஆளுகிறார்கள் என்று.
எத்தனை இந்திய பெற்றோர் குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கிறீர்கள்?. சிறு குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும்போது  குழந்தைகள் கற்பனை சக்தி வளருகிறது, நிறைய புது புது மொழி, கலாச்சாரம், நாடுகள், பழக்க வழக்கங்கள் அறிந்து கொள்ளுகிறார்கள்.  எதனை பேர் வீட்டில் லைப்ரரி இருக்கிறது. எத்தனை பெற்றோர் முதலில் புத்தகம் வாசிக்கிறீர்கள். நாம் தான் நம் குழந்தைகளுக்கு முன் மாதிரி. 
என்னை பொறுத்த வரை, இந்தியா போல பாசம், அன்பு எல்லாம் மேலை நாடுகளில் இல்லை என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்..என்னை பொருத்தவரை, பாசம் வைப்பதில், அன்பு காட்டுவதில் எந்த நாட்டு மக்களும் அனைவரும் சமமே....அமெரிக்க குழந்தை வளர்ப்பில் குழந்தையின் ஒவ்வொரு முவ் ஐயும் பார்பார்கள்..ஆனால் நம்மை போல கவலை படவோ..டென்சன் ஆகவோ மாட்டார்கள். உதாரணமாக குழந்தை கீழே விழுந்து விட்டது..என்றால் குழந்தையோடு சேர்ந்து அவர்களும் அழ மாட்டார்கள்..."Its ok honey, you'll be alright". என்று சொல்லி மருந்து போடுவார்கள். குழந்தைகள் அவர்களாகவே அறிந்து தெரிந்து கொள்ளட்டும் என்று நிறைய அனுமதிப்பார்கள். அதுவும் ஒரு லிமிட்வரை மட்டுமே...குழந்தைகளுக்கு "இது வரை செய், இதற்க்கு மேல் செய்ய வேண்டும் என்றால், நீ இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்" என்று சொல்லி விடுவார்கள்.

நம்ம ஊர் மக்களாக இருந்தால், "என்ன கல்லு நெஞ்சு பாரு இந்த அம்மாவுக்கு இப்படி பிள்ளையை பட்டினி போடுது, குழந்தை கீழே விழுது..இந்த அம்மா பாரு சும்மா உக்கார்ந்து இருக்கு பாரு" என்பார்கள்.  
 
என்னை பொருத்தவரை, நாம் அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை நம்மை அதிகம் depend செய்ய வைக்கிறோம். எல்லாவற்றையும் நாமே குழந்தைகளுக்கு விட்டு கொடுத்து, நமக்கும் டென்சன் வரவழித்து கொள்கிறோம், குழந்தைகளையும் கெடுக்கிறோம். நாம் பாசம், அன்பு என்று நிறைய சொல்லி சொல்லி நிறைய செல்லம் கொடுத்து குழந்தைகள் நம்மை டாமினேட் செய்ய அனுமதிக்கிறோம். அதுவே, அவர்களுக்கும் பின் வாழ்கையில் அவர்களுக்கு பெரிய dependency பிரச்னை ஆகி விடுகிறது. எல்லாவற்றிக்கும் யாரையாவது நம்பி இருப்பது, தனியே முடிவெடுக்க முடியாமல் தவிப்பது என்று நிறைய. குழந்தைகளை ஒரு டிசிப்ளின் கொண்டு வருவது , சுதந்திரமாக சிந்திக்க வைப்பது என்பது அவர்களுக்கு சிறிய வயதில் மட்டும் அல்ல, பெரியவர்கள் ஆகும்  போதும் வாழ்க்கையை எதிர் நோக்க உதவும் என்பது என் எண்ணம். இது என்னுடைய கருத்து மட்டுமே.

நன்றி.




 








Friday, May 15, 2015

ஜாக்பாட்டு அடித்த பலரும் பின் நடுத்தெருவுக்கு வருவதேன்?



என் கூட வேலை பார்த்தவரின் சொந்த காரர் அவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு எதோ லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது அவருக்கு என்று சொல்லி கொண்டு இருந்தார். நாங்கள் அனைவரும் "உங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும், வேலையை விட்டு விடுங்கள்" என்று ஓட்டி கொண்டு இருந்தோம். நெடு நாளைக்கு பிறகு சென்ற வாரம் பேசும் போது அவர் சொன்னது இது தான் , அவருடைய சொந்தகாரர் இப்போது "ஓட்டாண்டி ஆகி விட்டார், bankruptcy file செய்து விட்டார்" என்று. பயங்கர ஷாக் எங்கள் அனைவருக்கும். இரண்டு வருடத்திற்கு முன்பு மில்லியனர் அவர், இப்போது ஓட்டாண்டி. என்ன முரண் இது, அதுவும் இரண்டு வருடத்திற்குள் எப்படி?

எனக்கு இந்த கதை கேட்கும் போது இந்தியாவில் சிறுவயதில் எங்கள் சொந்தகாரர் ஒருவருக்கு கிடைத்த 1 லட்சம் ருபாய் லாட்டரி பரிசும், அதற்க்கு பின் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன.  மிக மிக சாதாரணமான வேலை பார்த்தவர் அவர். சொல்ல போனால் தின வருமானம் போல. வாடகை வீட்டில், மனைவி மற்றும் 2 சிறிய குழந்தைகளுடன் வாழ்க்கை. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்த அவருக்கு ஒரு நாள் 1 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. 80 களில் 1 லட்சம் ரூபாய் என்பது மிக  பெரிய தொகை. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன அவருக்கு தலை கால் புரியவில்லை. இது என் பணம் எனக்கு வந்தது என்ற தலைகனம் அவரிடம் ஒரே நாளில் வந்து ஒட்டி கொண்டது. நிறைய தேவை இல்லாத செலவுகள் செய்தார். பணம் இருக்கிறது என்று வந்து ஒட்டி கொண்ட காக்காய் கூட்டங்களுக்கு தினமும் "தண்ணி" "சாப்பாடு" என்று சகலமும் நடக்கும். அந்த காக்கைகளின் பேச்சை கேட்டு அவர்கள் சொன்ன பல இடங்களில் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று பலதும் செய்து இரண்டே வருடங்களில் எல்லா பணமும் தொலைத்து விட்டார். அவரின் பிள்ளைகள் பணம் இல்லாமல் படிப்பு படிக்க கூட பட்ட கஷ்டம் கண்ணீர் வரவழிக்கும். ஒரு பைசா கூட குழந்தைகளுக்கு என்று அவர் சேமித்து வைக்க வில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் அவர்.

கிட்டத்தட்ட இதே ஒரு நிலை இப்போது நான் கேள்விபடுகிறேன். ஆனால் இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிலை போல. இணையத்தில் தேடிய போது சிக்கிய ஒரு கட்டுரை இதனை ஆமோதிக்கிறது. பரிசு விழுந்த 70% மக்கள் அதனை 1-5 வருடத்திற்குள் தொலைத்து விடுவார்கள் என்று.  

நம்மூரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று. கிட்டத்தட்ட அதே ஒரு நிலை எல்லா பரிசு விழுந்த மக்களிடமும் இருக்கிறது. தேவை இல்லாத ஆடம்பரம் உடனே அவர்களின் வாழ்கையை ஆக்கிரமித்து இருக்கிறது. இது என் பணம், எனக்கு கிடைத்த வரம், என்று ஒரு திமிர் வந்து அவர்களிடம் ஒட்டி கொண்டு இருக்கிறது. தேவையே இல்லாமல் "கார், போட், பெரிய பெரிய வீடுகள், நகைகள், பெயிண்டிங்க்ஸ், தண்ணீ, போதை என்று இவர்கள் அனைவரும் பணத்தை தொலைத்து இருக்கிறார்கள். முறையான "financial planning" இல்லாமல் ஒரு பண திமிர், கர்வம் வந்து இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இது நாடு, இன, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரிடமும் பார்க்க முடிகிறது. இதற்காவே இப்போது அமெரிக்காவில் லாட்டரி பரிசு வென்றவர்களுக்கு என்று இப்போது நிறைய கவுன்செல்லிங் தருகிறார்கள். எப்படி இன்வெஸ்ட் செய்வது என்று. ஆனாலும் இது ஒரு மாயை, ஒரு குறிப்பிட்ட வருடங்களில் மறைந்து விடும் என்று பலரும் அறிவதில்லை. அந்த இன்ஸ்டன்ட் மட்டுமே நினைக்க தோன்றுகிறது. கொஞ்சம் நிதானமாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

நன்றி.


Wednesday, May 13, 2015

Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்


நீங்கள் முகநூல் உபயோகிக்கும் பெண்ணா?, பழைய கல்லூரி, பள்ளி, பக்கத்து வீட்டு தோழர்களை கண்டுபிடிக்க முகநூல் உதவி உள்ளதா?, நீங்களும் உங்கள் சொந்த ஊர், படித்த கல்லூரி, பள்ளி, யுனிவெர்சிட்டி, வேலை பார்க்கும் இடம், யாரை திருமணம் முடித்து இருக்கிறீர்கள் அல்லது யாருடன் எங்கேஜ்மென்ட் ஆகி இருக்கிறது என்றெல்லாம், உங்களின் பிரிண்ட்ஸ் யாரெல்லாம்  ,என்று  பப்ளிக் ப்ரொபைலில் பதிந்து இருக்கிறீர்களா?. கிரேட். 

இப்போது சில கேள்விகள்.  

  1.  உங்கள்  பிரெண்ட்ஸ் லிஸ்டில் இருக்கும் எத்தனை பேர் உங்களுக்கு உண்மையில் பரிச்சயமானவர்கள். ஏனெனில் உங்களுக்கு பிரெண்டுக்கு பிரெண்டு எல்லாம் ரெகுஸ்ட் அனுப்பலாம். அதனை நீங்களும் சரி நம்முடைய ப்ரிஎண்டின் ப்ரெண்ட் தானே என்று அக்செப்ட் செய்து இருக்கலாம். அதனால் தான் இந்த கேள்வி. எத்தனை பேர் உங்களுக்கு உண்மையில் தெரியும் அல்லது பழகி இருக்கிறீர்கள்.
  2. முக நூல் அக்கௌன்ட் ஆரம்பிக்கும் போதும் அல்லது பிறகும் ப்ரொபைலை பற்றி கேள்விகளை எல்லாம் இக்னோர் செய்யாமல் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இருக்குறீர்களா?, உதாரணமாக, நீங்கள் எந்த வருடம் இப்போது வேலை பார்க்கும் கம்பனியில் சேர்ந்தீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு, சின்சியர் ஆக பதில் அளித்து இருகிறீர்களா?
  3. நீங்கள் எத்தனை முறை ஏதாவது ஷேர் செய்யும் போது, ப்ரைவசி செட்டிங்க்ஸ் ஐ கவனித்து ஷேர் செய்து இருக்குறீர்கள். உதாரணமாக உங்கள் ப்ரொபைல் படம் எப்பொழுதும் பப்ளிக் அனைவருக்கும் தெரியும் படி இருக்கும், அதற்க்கு வரும் கமெண்ட்ஸ் உங்கள் பதில் என்று அனைத்தும் அனைவருக்கும் தெரியும். 
  4. உங்கள் கவர் போட்டோ எப்போதும் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அதனை எந்த செட்டிங்க்ஸ் கொண்டும் மாற்ற முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
  5. உங்கள் ப்ரொபைல் கூகிள் போன்ற தேடு பொறியில் தேடப்படாமல் இருக்க என்று சில ப்ரொபைல் செட்டிங்க்ஸ் இருக்கிறது எதனை பேருக்கு தெரியும். 
  6. அதே போல, தேவை இல்லாதவர்கள் ப்ரெண்ட் ரெகுவேஸ்ட் அனுப்பாமல் இருக்க என்று ப்ரைவசி செட்டிங்க்ஸ் எதனை பேருக்கு தெரியும்.
  7. நீங்கள் பிளாக்கர் அல்லது வோர்ட்ப்ரெஸ் உபயோகித்து ப்ளாக் எழுதுபவர் என்றால், எதனை பேர் உங்கள் ப்ளாக் முகவரியை உங்கள் முகநூல் ப்ரொபைலுடன் இணைத்து இருக்குறீர்கள்.

சரி, இப்போது ப்ரைவசி செட்டிங்க்ஸ் பற்றி அறியாமல் இருந்தால் நடக்கும் சில பின் விளைவுகள்.

உங்களுக்கு பிடிக்காத நபர் அல்லது எதிரி அல்லது யாருக்கோ உங்களை பற்றிய தகவல்கள் தேவை எனில் அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான். 

உங்கள் பெயரை கூகுளில் டைப் செய்ய வேண்டியது. கூகுள் தேடுதளம், உங்கள் பெயரில் இருக்கும் facebook profiles என்று அனைத்தையும் அள்ளி கொண்டு வந்து கொடுக்கும். ஏனெனில் நீங்கள் "உங்கள் ப்ரொபைல் கூகிள் போன்ற தேடு பொறியில் தேடப்படாமல் இருக்க என்று சில ப்ரொபைல் செட்டிங்க்ஸ் இருக்கிறது " அதனை enable செய்ய வில்லை.

உங்கள் முக நூல் பக்கத்தை தேட வேண்டியது தான். பிங்கோ..எல்லாமே அங்கே இருக்கிறது. உங்கள் கல்வி தகுதி, யார் உங்கள் நண்பர்கள், நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள், யாரை மணந்து இருக்குறீர்கள், யார் யாரெல்லாம் உங்கள் நண்பர்கள் ...etc etc 

நீங்கள் அமெரிக்காவில் இருப்பவர் எனில், உங்கள் முழுப்பெயர் மற்றும் உங்கள் கணவரின் பெயர் கொண்டு நீங்கள் வசிக்கும் வீட்டின் முகவரி முதல் கண்டு பிடிக்க முடியும். தேவைப்பட்டால் உங்கள் போன் நம்பர் வரை யாரும் துப்பு துலக்க முடியும். ஆகையால், முகநூலில் உங்களை பற்றிய செய்திகளை பதியும் போது மிக மிக கவனம் தேவை.

உங்களுக்கு ப்ரெண்ட் ரெகுவேஸ்ட் கூட யாரும் அனுப்ப தேவை இல்லை. அவர்களுக்கு தேவையான எல்லாமே உங்கள் பப்ளிக் ப்ரோபிளில் இருக்கிறது.

சரி நீங்கள் மேலே கண்ட ப்ரொபைல் செட்டிங்க்ஸ் எல்லாம் பக்கா வாக செய்து இருக்குறீர்கள். உங்கள் க்ளோஸ் நண்பர்கள் தவிர யாரும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது என்று இறுமாப்பாக இருக்க வேண்டாம்.

அப்படியே, நீங்கள் "ப்ரெண்ட் ரெகுவேஸ்ட்" பப்ளிக் ஆக  அனுமதிக்காமல் இருப்பினும், பிரெண்ட்ஸ் ஆப் பிரெண்ட்ஸ் வரை உங்கள் ப்ரொபைல் தெரிந்தே ஆகும். இப்போது உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட்டில் ஒரு பெண் இருந்து அவரின் ப்ரெண்ட் லிஸ்டில் இருக்கும் ஒரு பெண் உங்களுக்கு ரெகுவேஸ்ட் அனுப்புகிறார் என்று வைத்து கொள்வோம். நீங்களும் நம் நெருங்கிய தோழியின் நண்பி தானே என்று அனுமதிகிரீர்கள் என்று வைத்து கொண்டாலும் , அந்த பெண்ணின் நண்பர்களுக்கும் இப்போது உங்கள் ப்ரொபைல் தெரியும்.. நீங்கள் ஷேர் செய்யும் படங்கள், குழந்தைகள் படங்கள், எல்லாம் 3rd லெவல் வரை தெரியும்..கவனம் தேவை.

சில ப்ரைவசி  டிப்ஸ் இங்கே .

  1. எப்போதும், உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட் ஐ யாரிடமும் காட்டாமல் "ஒன்லி மீ" ஆப்சனில் போட்டு வையுங்கள்.
  2. நீங்கள் பெர்சனல் ஆக தெரியாத பழகாத யாரையும் உங்கள் ப்ரெண்ட் லிஸ்டில் சேர்க்க வேண்டாம்.
  3. ப்ரைவசி செட்டிங்க்ஸ் மாற்றி அமைத்து கூகிள் போன்ற தேடு பொறிகள் தேடாத வண்ணம் மாற்றி அமையுங்கள். 
  4. ஒவ்வொரு போஸ்ட் ஷேர் செய்யும் போதும், யார் உங்கள் டார்கெட் ஆடியன்ஸ் என்று பாருங்கள்.
  5. உங்கள் ப்ரொபைல் படமாக உங்கள் தனி படங்களை போடாதீர்கள், குடும்ப படம் போடலாம் அல்லது இயற்க்கை காட்சிகள் என்றும் போடாலாம்.
  6. எப்போதும் கவர் போடோவாக உங்கள் குடும்ப/பெர்சனல் படங்களை போடாதீர்கள். ப்ரொபைல் படத்தில் இருக்கும் ப்ரைவசி செட்டிங்க்ஸ் கூட கவர் படங்களுக்கு இல்லை.
  7. இது எல்லாம் செய்து, முகநூல் உபயோகிக்க முடிந்தால் உபயோகியுங்கள், இல்லையேல் முக நூல் கணக்கை மூடி விடுங்கள் 

எல்லா புது டெக்னாலாஜி வரும் போதும் நாம் உடனே மகிழ்ந்து அதன் பின் விளைவுகளை பற்றி அதிகம் கவலை படாமல் செய்கிறோம் உபயோகிக்கிறோம். ஆனால் உண்மையில் அதன் பின் விளைவுகளை பற்றி ஒரு நிமிடமும், ப்ரைவசி செட்டிங்க்ஸ் பற்றி சிறிதும் படித்து பார்த்தாலே போதும்...அதில் இருக்கும் ஓட்டைகள் என்ன என்ன என்று. நீங்கள் எதார்த்தமாக நினைக்கும் பல விசயங்களும் பல நேரங்களில் எதார்த்தமான விளைவுகளை தருவதில்லை, மாறாக பல நேரங்களில் பிரச்சனைகளையும் தர இயலும். அதுவும் பொது வெளியில் இயங்கும் பெண்கள் இந்த விசயத்தில் மிக மிக கவனமாக இருக்கவும், இல்லையேல், உங்களையும் அறியாமல் சில நேரங்களில் தேவை இல்லாத பிரச்சனைகளில் மாட்டி கொள்ள இயலும்.

இது என்னுடைய சொந்த அனுபவத்தில் எழுதியது.

நன்றி.


Tuesday, May 12, 2015

புல்லும் புல் சார்ந்த இடமும் அமெரிக்கா எனப்படும்...


அமெரிக்காவில் தனி வீடு வாங்கி இருப்பவர்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். "lawn care " என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்துகள்.

முதலில் புல்வெளி  வேண்டும் என்று எல்லா மரங்களையும் வெட்டி, அங்கு எல்லாம் புல் விதைகளை வாங்கி போட்டு அதன் மேல் வைக்கோல் பரப்பி வைத்து இருப்பார்கள். இன்னும் சிலர் sod எனப்படும் சிறிது வளர்ந்த புல்வெளிகளை வாங்கி பரப்பி வைத்து, தண்ணீர் விட்டு கொண்டு இருப்பார்கள். புல் நன்றாக வளரவேண்டும் என்று உரம் போடுவார்கள். தினமும்  தண்ணீர் விடுவார்கள், களை எடுப்பார்கள். களை வளராமல் இருக்க வேண்டும் என்று வார வாரம் ட்ரிம் செய்வார்கள்.

எல்லா செடிகளையும் வெட்டி விட்டு, பூ பூக்கும் செடிகளாக வாங்கி நட்டு வைப்பார்கள். உதாரணமாக நாங்கள் வசிக்கும் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் என்று ஒரு சில செடிகள் உண்டு, அதனை வாங்கி எங்கும் நட்டு வைப்பார்கள்.

மரங்களும் அதே போலவே. கிட்ட தட்ட எல்லா வீடுகளிலும் ஒரு டாக் வூட் மரமாவது இருக்கும். எல்லா வீடுகளிலும் பல "Azalea" செடிகள் இருக்கும். அதே போல, நாக் அவுட் ரோஸ் செடிகள் இருக்கும். அல்லது வசந்த காலமாக இருப்பின் கிட்டத்தட்ட அனைவரும் "துலிப்" செடிகள் வைத்திருப்பார்கள்.
இந்த செடிகள் நன்றாக வளர வேண்டும் என்று பல உரங்கள் போடுவார்கள்.

காய்கறி, பழங்கள் உண்டாக்கும் செடிகள் அல்லது மரங்கள் ஏதேனும் நட்டு வைக்க வேண்டும் என்றால் வரும் தலை வலி பெரியது.

முதலில், இங்கு எல்லா கம்யுனிட்டியிலும் ஒரு HOA அல்லது ஹவுஸ் ஒனெர் அசோசியேசன் இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் ரூல்ஸ் சில நேரம் தலை சுற்றும். முதலில், புல் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வளர்ந்தது என்றால் உடனே, வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவார்கள். இன்னும் ஒரு வாரத்திக்குள் புல்லை வெட்டுங்கள் இல்லையேல் பைன் என்று வரும் அதில்.

எந்த வகை செடிகள் வளர்க்க வேண்டும் என்று அவர்களிடம் பெர்மிசன் வாங்க வேண்டும். உதாரணமாக ஏதாவது காய்கறி வளர்க்கலாம் என்றாலும் அதனை வீட்டுக்கு முன் இருக்கும் இடத்தில் வளர்க்க கூடாது, வீட்டுக்கு ஓரமாக அல்லது பின் கட்டில் ஒரு பாத்தி போல கட்டி அதில் மட்டுமே வளர்க்க வேண்டும். அதிகம் பூச்சிகள் அல்லது புழுக்களை ஈர்க்கும் எந்த செடியும் வளர்க்க கூடாது. அடுத்த வீட்டிற்கு உபத்திரவம் கொடுக்கும் படி எந்த செடியும் இருக்க கூடாது etc etc

அப்படி நீங்கள் ஏதாவது மாற்றி செய்தாலோ உடனே நோட்டீஸ் வரும், அல்லது பைன் கட்ட வேண்டி வரும். இந்த காரணத்தினாலேயே இந்தியர்கள் பலரும் இங்குள்ளவர்கள் போலவே புல், செடி என்று நட்டு வைப்பார்கள்.  நாமால் புல் வெட்ட முடியவில்லை என்றால் யாருக்காவது காசு கொடுத்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை புல் வெட்டுவார்கள். அதற்கென்று பணம் அழ வேண்டும்.

இப்படி ஊருக்காக அல்லது அதனோடு ஒத்து வாழ நாம் நடத்தும் நாடகங்கள் எல்லாம் எனக்கு "Vanity Fair" என்னும் "William  Thackeray" அவர்களின் நாவலை ஞாபகப்படுத்தும்.

சரி இதனால் என்ன?, ஊரோடு ஒத்துவாழ்ந்து விட்டு போகலாமே என்றால், அதனால் வரும் பின் விளைவுகள்.

உதாரணமாக, போலன் அலர்ஜி எனப்படும் மகரந்த தூள் அலர்ஜி. இங்கு வசந்த காலம் ஆரம்பித்து விட்டால், வானிலை அறிக்கை வாசிக்கும் போது கிட்ட தட்ட எல்லா செய்தி சானல் களும் எவ்வளவு போலன் கவுன்ட் இருக்கிறது என்று ரிப்போர்ட் செய்வார்கள். எல்லா இடங்களிலும் ஒரே போல செடிகளும் மரங்களுமாக வைத்து வைத்து, அதே செடிகள் மலரும் போது பரப்பும் மகரந்த தூள்கள், மூச்சு குழாய்களில் புகுந்து சுவாச சம்பந்தமான பிரச்சனைகளை உண்டு செய்கின்றன. இதோடு பலருக்கு சைனஸ் பிரச்னையும் இந்த மகரந்த தூள்கள் உண்டாக்கு கின்றன.

எனக்கு ஜியார்ஜியா மாகாணம் வரும் வரை இந்த போலன் அலேர்ஜி இருந்ததில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல்  மாதங்களில் எனக்கு போலன் அலேர்ஜியும் சைனஸ் தலைவலியும் தொடர்ந்து வருகின்றன. கிட்ட தட்ட எல்லா இந்திய குழந்தைகளுக்கும் போலன், புல் அலேர்ஜி இருக்கிறது அல்லது ஆஸ்துமா இருக்கிறது.

 இப்படி பணம் கொட்டி புல் வளர்த்து, வெட்ட, மீண்டும் வளர்த்து....என்ன பலன் இருக்கிறது, ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை.

நன்றி 

Saturday, May 9, 2015

அன்னையர் தின பரிசும் , உத்தம வில்லனும்


நாளைக்கு அன்னையர் தினம் என்பதால் நானும் என் தோழியர் குழாமும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று , எங்களின் வாண்டுகளும் அவர்களின் அப்பாக்களும் சேர்ந்து எங்களுக்கு கொடுத்த ஒரு கிப்ட் 4 மணி நேரமும் செலவழிக்க பணமும். அதுவும் இது முழுக்க முழுக்க பெண்கள் நேரம். எதுவேண்டும் என்றாலும் செய்யுங்கள் லேடீஸ், என்று கொடுத்த பொன்னான நேரம்.

பெரும்பாலான பெண்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். அதாவது திருமணத்திற்கு முன், அல்லது கல்லூரி படிக்கும் போது  தோழிகள் உடன் சினிமா பார்க்க தியேட்டர் சென்று இருப்பார்கள். பின்னர் திருமணம் ஆன பிறகு சினிமா டிராமா என்று எது சென்றாலும் அது கணவன் குழந்தைகள் உடன் தான் இருக்கும். ஒரு சில நேரம் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் அவர்களுடன் செல்லலாம். கல்லூரி காலம் போல ஒன்லி லேடீஸ் அல்லது தோழிகள் மட்டும் எல்லாரும் சேர்ந்து  செல்வது என்பது அபூர்வம். அதுவும் இல்லத்தரசியாக காலை முதல் மாலை வரை குழந்தை குடும்பம் என்று இருக்கும் பெண்களுக்கு ஒரு 4 மணி நேரம் எந்த இடையூரும் இல்லாமல் எங்களுக்கே எங்களுக்கான டைம் என்று கிடைத்தால் வாவ்..

அப்படி கிடைத்தது எங்களுக்கு 4 மணி நேரம் அன்னையர் தின பரிசாக..சரி என்ன செய்யலாம் என்று உக்கார்ந்து யோசித்ததில் ஒரு சிலரின் சாய்ஸ் சரி "ஏதாவது சினிமா போகலாம் பா" என்பது . அதை சொன்னபோதே எனக்கு "அய்யயோ இப்போ ஹாட் ஆ இருக்கிற ஒரே படம்னா அது , உத்தம வில்லன் தானே" என்று நினைப்பு தோன்றி முடிப்பதற்குள்ளே எல்லாரும் சேர்ந்து "உத்தம வில்லன் போலாம்" என்றனர். "Finally majority won"

ஒரு வழியாக எல்லாரும் முடிவு செய்து தியேட்டர் சென்றாயிற்று, உக்கார்ந்து சில நிமிடங்களில் என்ன பாட்டு என்று தெரியாமல் ஒரு பாட்டு, அதுவும் பூஜா குமாருடன் கமல் போடும் ஆட்டம். "ஐயோ சாமி, இந்த வயசில இதெல்லாம் இவருக்கு தேவையா, பல நேரங்களில் முகத்தில் இருக்கும் வயதின் அடையாளங்களை மறைக்க என்று நிறைய லாங் ஷார்ட்ஸ்?" என்று நான் கமெண்ட் அடிக்க, எங்கள் க்ரூபின் கமல் வெறியை ," ஏன் தலைவரை மட்டும் சொல்லுறீங்க, பூஜா குமாருக்கு மட்டும் வயசாகல" என்று கவுன்ட்டர் கொடுக்க, சரி போனா போகுது என்று விட்டு விட்டோம்.

அடுத்து, எங்களை ரொம்ப புல்லரிக்க வைத்தது,  "என் அருமை கள்ள காதலா " என்று விளித்து ஆண்ட்ரியா பேசும் வசனம். நாங்கள் அனைவரும் கமல் வெறியை பக்கம் திரும்ப அவளோ அப்போதும் சளைக்காமல், எங்களுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.

கடைசி வரை எனக்கு இது எந்த genre படம் என்று விளங்க வில்லை. புராண படமா, கரண்ட் affairs படமா, மிட் லைப் crisis படமா, சாகப்போகும் ஒருவரின் bucket லிஸ்ட் படமா அல்லது மனோதத்துவம் சொல்லும் படமா..படம் முடிந்தவுடன் எனக்கு தோன்றிய சில நினைவுகள் "அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், நீங்க யாருக்கு சார் படம் எடுத்து இருக்கீங்க..நாங்க பார்க்கணும்னு எடுத்து இருக்கீங்களா இல்ல, உங்களை satisfy பண்ண படம் எடுத்து இருக்கீங்களா.  நீங்க எவ்வளவு பெரிய ஆளு, அறிவாளின்னு எல்லாருக்கும் தெரியும் சார், ப்ளீஸ் எங்களுக்காகவும் கொஞ்சம் படம் எடுங்க சார்"

ஐயோ சாமி முடியல, வலிக்குது, அழுதுருவேன்..என்று நொந்து போய் அவள் பக்கம் திரும்பி "இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு வந்து எங்களுக்கு கிடச்ச 4 மணி நேரத்தை இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே  என்று கொலை வெறியுடன் திரும்ப, அவளோ கூலாக, "தலைவர் எப்படி நடிச்சாலும் சரி, படம் எப்படி இருந்தாலும் சரி, நான் பார்ப்பேன், கட்டாயம் பார்ப்பேன்" என்று சொன்ன போது...எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்.."இப்படி பட்ட தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் நாட்டுல ஒரு சிலரை அசைக்க முடியாது"


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

டிஸ்கி

இது இந்த படத்தை பற்றிய என்னோட பெர்சனல் அனுபவம், கருத்து மட்டுமே. விமர்சனம் அல்ல, யாரையும் புண் படுத்த எழுதியது அல்ல.

நன்றி.





Friday, May 8, 2015

நெகடிவ் மக்களை சமாளிப்பது எப்படி?

உங்கள் வாழ்கையில் இது போன்ற மக்களை சந்தித்து  இருப்பீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நேரடி சம்பந்தம் கூட ஒரு சில நேரம் இருக்காது. ஆனால் நம்மை பற்றி அடுத்தவர்களிடம் குறை புரண் பேசி இருப்பார்கள், அல்லது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் இருக்கும் போது அங்கே வந்து நமக்கு சொல்வது போல சில நேரங்களில் ஏதாவது குறை சொல்லுவார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெறுப்பு பொறாமை தெறிக்கும் படி  இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் உங்களுடன் வேலை பார்பவர்களாக இருப்பார்கள். எதற்கு எடுத்தாலும் உங்களை குறை சொல்வார்கள்,  என்ன செய்தாலும் குறை சொல்வார்கள். அனைவரை பற்றியும் குறை சொல்வார்கள். உங்களை பற்றி மற்றவர்களிடமும் மற்றவரை பற்றி உங்களிடமும் குறை கூறுவார்கள்.
ஒரு பத்து நிமிடம் நீங்கள் இப்படிப்பட்ட மக்களிடம் பேசினால் போதும், உங்கள் முழு எனெர்ஜியும் வடிந்து விட்டது போன்ற ஒரு பீலிங் வரும்.

படம் :google image

ஆபிசில் இவர்களை போன்றவர்களை எப்படி சமாளிப்பது..சில டிப்ஸ் இங்கே..


  1. இப்படி எப்போதும் கம்ப்ளைன்/குறை சொல்லுபவர்கள் பெற நினைப்பது "அட்டென்சன்" . உண்மையில் இவர்கள் தங்களின் டார்க் சைடை மறைபதற்காகவே இப்படி அடுத்தவர்களை பற்றி குறை சொல்லுகிறார்கள். அதனால் அவர்கள் உங்களை பற்றி குறை சொல்லும் போது நீங்கள் ரியாக்ட் செய்தீர்கள் ஆயின் அதுவே அவர்களின் வெற்றி ஆகும். அவர்கள் எதிர்பார்ப்பதும் அதுவே தான். ஒரு சுவர் போல ஸ்ட்ராங் ஆக அவர்கள் சொல்லுவதை இக்னோர் செய்யுங்கள். அவர்கள் சொல்லும் குறை எல்லாம் உங்களை பற்றி அவர்களின் பெர்செப்சன் தானே தவிர உண்மையில் நீங்கள் அதுவல்ல என்று உறுதியாக நம்புங்கள். 
  2. எப்போதும் இப்படிப்பட்ட "hater" மக்களை  திரும்ப பார்க்கும் போது நீங்கள் எப்போதும் போல "ஹலோ" "குட் மார்னிங்" சொல்லுங்கள். "Kill them with kindness". அவர்கள் நல்ல உடை உடுத்தி இருந்தால் அதனை சுட்டி காட்டுங்கள். நீங்கள் இப்படி செய்யும் போது  அது அவர்களை மிக வெறுப்பேத்தலாம், அவர்கள் மறுபடியும் உங்களை சண்டைக்கு தேவை இல்லாமல் இழுத்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். எந்த நிலையிலும் அவர்கள் சண்டைக்கு இழுக்கும் போதும் பதிலுக்கு சண்டை போடுவதோ அல்லது அவர்களை திட்டுவதோ உங்களை ஒரு வீக் பெர்சன் ஆக காட்டும்.  உங்களை மெல்ட் டௌன் செய்ய இதனையே ஒரு strategy ஆக பலரும் எடுத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனம் தேவை. இப்படி பட்டவர்கள் நீண்ட நாட்கள் ஆபிசில் காலம் தள்ள முடியாது. அவர்கள் எவ்வளவு சப்ஜெக்ட் தெரிந்தவாராக இருப்பினும் ஒரு ஆபிசில் அனைவருடனும் இணைந்து வேலை பார்க்க முடியாமல் எப்போதும் குறை சொல்லி கொண்டு இருந்தால் யாருக்கும் அவரை பிடிக்காது.
  3. "Kill them with your success" நீங்கள் success ஆக ஆக இப்படி பட்டவர்கள் உங்களை சமாளிக்க முடியாமல் பொறாமையில் வெந்து வெந்து உங்களை விட்டு விடுவார்கள். உதாரணமாக உங்கள் உடன் வேலை பார்ப்பவர் உனக்கு இந்த வேலை பார்க்க தெரியாது என்று எல்லார் முன்னிலையிலும் குறை சொல்லுகிறாரா, எந்த ரியாக்சனும் காட்டாதீர்கள் பதில் சொல்லாதீர்கள், பதிலுக்கு "show them in action, what you can do". பேசாதீர்கள், செயலில் காட்டுங்கள். 
  4. பொதுவாக இப்படி குறை சொல்லுபவர்களை கண்டால் ஏன் இவர்களை போன்றவர்களை நாம் வாழ்கையில் சந்திக்க வேண்டும் என்று மன வருத்தம் வரும். ஆனால், இவர்களை போன்றவர்கள் உங்களை குறை சொல்லி சொல்லியே உங்களை செதுக்குகிறார்கள். அதனால் இவர்கள் போன்றவர்களும் உங்கள் வாழ்கையில் தேவை. என்னை பொருத்தவரை இவர்களை போன்றவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் தருகிறார்கள். இப்படிபட்டவர்கள் இல்லேயேல் வாழ்க்கை போரடித்து விடும் .
  5. எப்போதும் உங்கள் பிளஸ் இல் நம்பிக்கை வையுங்கள். இப்படி குறை சொல்லி பொறமை படுபவர்கள் எல்லாம் உங்கள் வளர்ச்சியை பார்த்து தானும் அதனை போல இல்லையே என்று வயிறு எரிபவர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும் படி வைத்து கொள்ளாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை இதனை பற்றி தீர்மானிக்க குறை சொல்ல இவர்கள் யார். தலை நிமிர்ந்து நடங்கள். வெற்றி உங்களுடன் வரும்.

டிஸ்கி 

இது என்னுடைய அனுபவத்தில் எழுதியது மட்டுமே . இது என் சொந்த கருத்துக்கள் மட்டுமே.


நன்றி.



Tuesday, May 5, 2015

பெண்களும் மிட் லைப் தடுமாற்றமும்

இங்கிலீஷ் விங்க்லிஷ், "H ow old are you?" என்ற இரண்டு இந்திய படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே பெண்களின்  மிட் லைப் பற்றியது. அவர்களின் change in priorities அல்லது தன்னையும் கவனிக்க வைக்க அவர்கள் செய்யும் சில விஷயங்கள் பற்றியது.



மிட் லைப்பில் இருக்கும் பல பெண்களிடம் நாடு மொழி இன வித்தியாசம் இன்றி பேசி  போது பல நேரங்களில் ஒரு வெறுமை அவர்கள் தொனியில் இருக்கும். பெரும்பாலான பெண்கள் இளவயதில் திருமணம் முடித்தவர்கள், அவர்களுக்கு பெரிய வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கலாம். இது நாள் வரை திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு என்று குடும்பத்திற்காக தன் நேரத்தை  செலவிட்ட அவர்கள், குழந்தைகள் ஒரு கட்டத்தை/வயதை  நெருங்கியதும்அடுத்தது என்ன? என்ற ஒரு கேள்வி தொக்கி நிற்கும்.அதோடு மெனோபாஸ் போன்ற உடல் கூறுகளும் சேர்ந்து வாழ்கை வெறுமையாகி  விடும். ஒரு சிலருக்கு, பெற்றோர் மரணம் அல்லது நெருங்கிய சொந்தங்களின் மரணம் நேர்ந்து இது போன்ற வெறுமையை அதிகபடுத்தும். இது நாள் வரை எமோசனல் ஆக ஒருவரை சார்ந்திருந்த பெண்கள் அந்த எமோசனல் சப்போர்ட் இல்லை என்னும் போது டிப்ரெசன் அளவுக்கு சென்று விடுவது உண்டு. 

இந்த நேரங்களில் பலர் சில எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கலாம். உதாரணமாக அதுவரை வேலை எதுவும் செய்யாத அவர்கள், நானும் வேலைக்கு போகிறேன் என்று ஆரம்பிப்பது, தானும் இந்த சமூகத்தில் தனியாக வாழ முடியும், சம்பாதிக்க முடியும் என்பன போன்ற சில மன குழப்பங்கள். இது நாள் வரை எனக்காக என்று எதுவும் செய்யவில்லையே என் வாழ்க்கையில்,  ஏதாவது செய்து ப்ரூவ் செய்ய வேண்டும் இந்த உலகத்திற்கு, என்று ஒரு சிலர் சொல்லுவது அல்லது செய்வது. தனக்கு இளமை போய்விட்டதோ..என்று தன்னை மிக அழகு படுத்தி கொள்ள நினைப்பது, நல்ல நல்ல உடைகள்வாங்க செலவழிப்பது, நாட்டியம், இசை என்று ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைப்பது "to get noticed". இது போன்ற ஒரு transition அல்லது மன மாற்றம் நிகழும் நேரத்தில் குடும்பத்தில் இரு பிடிப்பு இல்லாத ஒரு நிலை. அல்லது குடும்பத்தில் எல்லோரிடமும் எரிந்து விழுவது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் தன்னை பற்றி குறை சொல்லுகிறார்கள், எனக்கு மதிப்பு இல்லை என்று ஆரம்பிப்பது...என்று அனைத்தும் நடப்பது இந்த காலத்தில் தான். அமெரிக்காவில் இப்படி என் மன நிலை இருக்கிறது என்று நீங்கள் சென்றால் உடனே அவர்கள் "It's mid life crisis and depression" என்று சொல்லி depression மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிப்பார்கள். பலருக்கு இது போன்ற மருந்துகள் பயன்படுகின்றன என்றாலும் அவை எல்லாம் சிறு காலத்திற்கு மட்டுமே. பின்னர் மறுபடியும் இதே போன்ற கேள்விகள், ப்ரியாரிட்டி என்ன என்று தேடல்கள் ஆரம்பிக்கும். 

இது ஒரு கடந்து போகும் காலம்..ஆனால் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலமும் இது தான்.  இந்த நேரத்தில் தன் குடும்பம் அல்லாத யாரேனும் ஒருவர் தன்னிடம் அன்பாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ உடனே அவரை நம்புவது என்பது பதின்ம  வயது இனக்கவர்ச்சிக்கு ஒப்பானது. அதுவும் அந்த நபர் உங்களை சப்போர்ட் செய்கிறார் அல்லது என்கரேஜ் செய்கிறார் என்னும் போது அந்த இனக்கவர்ச்சி வேறு வகை உருவம் எடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால் இது போன்ற தடுமாற்றங்கள் எல்லாம் ஷார்ட் லைப் ஸ்பான் கொண்டது, என்று கொஞ்ச கவனமாக இருந்தால் பல பெரிய இழப்புகள் அல்லது முடிவுகளை தவிர்க்கலாம். தேவை கொஞ்சம் குடும்பத்தில் இருப்பவர்கள் சப்போர்ட், கொஞ்சம் புரிதல் அல்லது சில நேரங்களில் மெடிக்கல் ட்ரீட்மென்ட். ஆனால் இது ஒரு passing cloud மட்டுமே. உண்மை நிலை அறிந்து திரும்பி வந்துவிடலாம்.

நன்றி.

Friday, May 1, 2015

பதிவுலகில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி? ஓர் கைடு




  1. முதல் தகுதி உங்களுக்கு அறிவியல் தெரிந்திருக்க கூடாது. நிறைய கற்பனை வளம் இருக்க வேண்டும் 
  2. உதாரணமாக,நீங்கள் சிந்தெடிக் பையலாஜி பற்றி எழுத வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள், அதற்க்கு உங்களுக்கு basic biology தெரிந்திருக்க வேண்டும் என்ச்று தேவை இல்லை. உங்களுக்கு தேவை எல்லாம் நெட்டில் தேடும்போது கிடக்கும் ஒரு சில விசயங்கள், பின்னர் இருக்கவே இருக்கு உங்கள் கற்பனை குதிரை, அதனை தட்டி விடுங்கள்.. சுடச்சுட ஒரு பதிவு தயார். பிறகு என்ன.. படிக்கும் சிலரும் இவர்களின் கதையை நம்புவார்கள். உங்களுக்கு வெற்றிதான்.
  3. யார் வந்து ப்ரூவ் கொடு என்று கேட்க்க போகிறார்கள், அப்போ பாத்துக்கலாம் அதனை எல்லாம்.
  4. அடுத்து பரிணாமம், டார்வின் மெண்டல் இவர்கள் எல்லாம் பைத்திய காரர்கள் வேலை வெட்டி இல்லதவ்வ்ர்கள், அவர்களே முன்னுக்கு பின் முரணாக பேசி இருக்காங்க பாருங்க என்று மேற்கோள் காட்ட வேண்டியது. படிக்குரவங்களுக்கு என்ன தெரிய போகுது? 
  5. உங்களுக்கு தெரியுதோ இல்லையோ அதனை பற்றி எல்லாம் யார் கேட்டா?
  6. மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா தெரிந்து இருக்க வேண்டும், உதாரணமாக உறவுமுறை திருமணம் எல்லாம் கெடுதல் இல்லை, ஏன்னா கான்சர் பாதிப்பு இரண்டு வகை திருமணத்திலும் ஒன்றுந்தான் என்று விவாதிக்க வேணும்.
  7. நோயின்னா எல்லா மக்களுக்கும் கான்செர் இல்ல சக்கர வியாதி தானே தெரியும்,Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay-Sachs Disease இதெல்லாம் உறவுகல்ல திருமணம் முடிகிறதால வருதுன்னு சொன்னா அவங்களுக்கு புரியவா போகுது..
  8. நீங்க எதைவேண்ணா எழுதுங்க , சுட்டி,தொடுப்பு எதையும் கொடுக்க கூடாது, யாரு போய்  அதை எல்லாம் சரி பார்த்துட்டு இருக்க போறாங்க..

அவ்வளவு தான், நீங்க பதிவுலக சயின்டிஸ்ட் ஆயாச்சு? பின்ன என்ன ஒரு கவர்ந்து இழுக்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து வச்சுடுங்க.. முடிஞ்சது கதை..
இன்னும் கூட நிறைய டிப்ஸ் இருக்கும்,  இருந்தா சொல்லுங்கப்பா, எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். 

நன்றி 

அழகாய் இருப்பதன் சாதகங்களும் பாதகங்களும்.

சில தினங்களுக்கு முன் ஹுசைன் அம்மா அவர்களின் முகமாகும் பெண்கள் படிக்க நேர்ந்தது. அதனை தொடர்ந்த என் சிந்தனைகளும் என் அனுபவத்தில் நான் சந்தித்த பெண்களை கொண்டும்  இது எழுதப்பட்டது. இது முழுக்க முழுக்க என் கருத்து மட்டுமே.

2001 ஆம் ஆண்டு வந்த படம் அது "Legally Blonde". Reese Witherspoon அவர்கள் மிக அழகான லா படிக்கும் பெண்ணாக அதில் நடித்து இருப்பார்கள். சட்டம், மருத்துவம் போன்று படிக்கும் பல பெண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று ஒரு விதத்தில் நம்பபடுகிறது. அதாவது மிக சீரியஸ் ஆக, எப்போதும் படிக்கும் புத்தக புழுக்கள் ஆக இருப்பார்கள் என்று நம்ப படுகிறது. ஒரு பெண் அழகாக அழகான உடை உடுத்துவராக காட்டுபவர் என்றால் இது போன்ற ஒரு சூழலில் அவளை சீரியஸ் ஆக  யாரும் எடுத்து கொள்வதில்லை.  மிக அழகான பெண்களுக்கு மூளை அல்லது அறிவு  கிடையாது என்பது இங்கே பரவலாக நம்பப்படும் ஒரு விஷயம். அதாவது "All blondes  are  brainless".  அந்த படத்தில் அழகான பெண்களுக்கும் மூளை உண்டு என்று அறிவு உண்டு என்று அவர் காட்டி இருப்பார்.

பொதுவாக எல்லா நாடுகளிலயும் அழகான பெண்கள் என்றால் அவர்கள் எந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்று ஒரு வரைமுறை வைத்து இருக்கிறார்கள். ரிசெப்சனிஸ்ட், அறிவிப்பாளர், RJ/DJ, நடிகைகள், மாடல்கள் போன்றவை சில.

ஒரு successful ஆராய்ச்சியாளராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ பெரிய CEO ஆகவோ ஒரு அழகான பெண் இருக்கிறார் என்றால் அது அபூர்வம். ஏனெனில் "Men don't take beautiful women seriously, when it comes to business/law/research/politics". அப்படி ஒரு பெண் அழகாகவும் அறிவாகவும் இருக்கிறாள் தன் அறிவை காட்ட போராட வேண்டி இருக்கும்.

உதாரணமாக ஒரு நன்கு படித்த மிக அழகான பெண்  ஒரு அறிவியல் கருத்தரங்கத்தில் பங்கு பெற வருகிறாள் என்று வைத்து கொள்ளுங்கள், நிறைய பேர் அவள் பக்கம் திரும்பி பார்ப்பார்கள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் அதே பெண் தன் ஆராய்ச்சி பற்றியோ அல்லது தன்னுடைய நிறுவனம் பற்றியோ பேசுகிறாள் என்றால் எத்தனை பேர் அதனை கவனிப்பார்கள் அல்லது அந்த பெண்ணை serious ஆக எடுத்து கொள்வார்கள் என்று நினைகிறீர்கள். வெகு சிலரே என்பது தான் உண்மை. அழகான பெண்ணை பார்த்ததும் வேறு வகை உணர்சிகள் தான் மேலோங்கி நிற்குமே தவிர அவளின் அறிவை பற்றிய எண்ணம் மேலோங்கி நிற்காது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


அழகான பெண்கள் நிர்வாகம் தெரிந்தவர்கள் அல்லர் என்பது ஆண்களின்  ஒரு பக்க எண்ணம் என்றாலும் பெண்களும் வேறு வகை எண்ணங்கள் கொண்டுஇருப்பார்கள் அது ஒரு வகை பொறமை உணர்ச்சி.


சரி அப்போது அழகான பெண்கள் வேளையில் உயர முடியாதா என்றால் அதுவும் இல்லை. சொல்லபோனால், அழகான பெண்கள் நன்றாக உடை உடுத்த தெரிந்த பெண்கள் career ladder இல் உயர அதிக சான்ஸ் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள், அதாவது சீக்கிரம் ப்ரோமோசன் கிடைக்கும் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை எல்லாம் ஒரு பொசிசன் வரை தான். ஒரு பொசிசனுக்கு மேலே நீங்கள் உயர வேண்டும் என்றால் அழகு என்பது கொஞ்சம் கூட உதவாது, சொல்ல போனால் உங்களுக்கு பாதகமான விளைவை மட்டுமே தரும் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி ஒரு காரணம் இருப்பதாலேயே, எனக்கு தெரிந்த மிக அழகான உயர் பதவியில் இருக்கும் சில  பெண்கள்  மிக கன்செர்வேடிவ் ஆக உடை உடுத்துவது பார்த்து இருக்கிறேன்.

சமீபத்தில் நான் வாசித்த BBC யின் ஒரு கட்டுரையும் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவிக்கிறது.

அதே போல அழகாய் இருப்பதன் இன்னொருகோணமும் உண்டு. அதாவது வெளி அழகு என்பதற்கு ஒரு  ஷெல்ப் லைப் உண்டு.உதாரணமாக ஒரு  பத்து வருடம் என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் சிறு வயதில் இருந்து அழகான பெண்கள் கேட்கும் சில வார்த்தைகள் வயதானால் காணமல் போய்விடும். ஆனால் இப்படி சிறு வயதில் இருந்து புகழாரம் கேட்ட பெண்களுக்கோ அது போன்ற ஒரு வேலிடேசன் அல்லது அங்கீகாரம் இல்லாமல் depression செல்லும் நிலை கூட பார்த்து இருக்கிறேன்.நான் படிக்கும்போது என்னுடன் படித்த ஒருரஷ்ய   பெண் சொன்னது, "I dont want to even think about how I look after 10 years, because I dont want to cross my 20s" என்று. முக்கியமாக ரஷ்ய  பெண்களிடம் இது போன்ற ஒரு பயத்தை அதிகம் பார்க்கலாம். இந்த பயத்தினாலே 30 வயதை கடந்த நிறைய பெண்கள் எங்கு சென்றாலும் மேக்கப் அணியும் ஒரு பழக்கமும் அவர்களிடம் காணலாம்.

என்னை பொருத்தவரை, அழகு அல்லது அழகாக உடை உடுத்துவது என்பது பல நேரங்களில் கான்பிடன்ஸ்  தரும்..ஆனால் "One should not carried away by mere external beauty". வெளி அழகுடன் மன உறுதியும் சேர்ந்துவிட்டால் எதையும் சாதிக்கலாம் என்பது என் எண்ணம்.

நன்றி