Wednesday, October 28, 2015

பிறந்தநாள் பார்ட்டிகள் - உக்கார்ந்து யோசிப்பாங்களோ?

சில வருடங்களுக்கு முன் பிறந்தநாள் கொ/தி ண்டாட்டம் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் எப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் கம்மேர்சியல் ஆகி விட்டன என்று குறிப்பிட்டு இருந்தேன்.  இதுவும் பிறந்த நாள் குறித்த பதிவு என்றாலும் இதுவும் கொஞ்சம் திண்டாட்டம் மற்றும் பிறந்தநாள் எப்படி நம் மக்களிடையே தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று எனக்கு தெரிந்த சில விஷயங்கள் குறித்தது.

உண்மையில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பிறந்த நாள் எல்லாம் பெரிய விசயமாக எனக்கு  கொண்டாட பட்டதில்லை. கோவிலுக்கு செல்வது, சிறு வயதில் டிரஸ் வாங்கி தந்து இருக்கிறார்கள். இதனை தவிர கேக் வெட்டுவது என்றெல்லாம் நான் ஒரு முறை கூட செய்ததில்லை.  ஆனால் இப்பொழுது எல்லாம், பர்த்டே பார்ட்டி வைப்பது என்பது அவசியமானதாக நினைகிறார்கள். அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று நீள்கிறது. இந்தியாவில் கூட பெரிய அளவில் இவை கொண்டாட படுகிறது. கேக் வெட்டி, பெரிய ஹால் பிடித்து சாப்பாடு எல்லாம் போடுகிறார்கள். சிலர் ப்ளெக்ஸ் பன்னெர் எல்லாம் வைக்கிறார்கள். 

இங்கு இருக்கும் தேசி மக்களிடையே பிள்ளைகளுக்கு பர்த்டே பார்ட்டி வைப்பதில்  ஒரு போட்டி நடக்கிறது. பர்த்டே பார்ட்டி வைப்பது எங்கு வைப்பது, என்ன டெகரெசன் வைப்பது, என்ன தீம் வைப்பது, என்ன ரிட்டர்ன் கிப்ட் கொடுப்பது  என்றெல்லாம் அது நீள்கிறது. நீ அங்க பார்டி வைக்கிறியா, நான் பாரு உன்ன விட ஒரு படி மேல போய் இங்க வைக்கிறேன் பாரு. என்று வித விதமாக வைக்கிறார்கள், யோசிகிறார்கள். ஆண் குழந்தை பர்த்டே பார்டி எனில் "தாமஸ், ஸ்பைடர்மேன், பேட்மேன், லெகொ, தற்பொழுது பேமஸ் "பான்யன்" என்றும், பெண் குழந்தைகள் எனில், "பார்பி, ப்ரோசன்,பிரின்சஸ்" என்று விதவிதமாக ட்ரஸில் இருந்து, கேக், ப்ளேட், நாப்கின், டெகரேசன் என்று சகலமும் அந்த தீமில் செய்கிறார்கள், இதில் ஒரு சிலர் பார்டி ஹாலுக்கு என்று அந்த தீம் டிரஸ் உடுத்திய மக்கள் வந்து ஆட்டோகிராப் எல்லாம் செய்யும் அளவு அல்லது முக பெய்ண்டிங் என்றெல்லாம் ஒவ்வொன்றுக்கும் பணத்தை தண்ணியாக செலவளிகிரர்கள். உண்மையில் அந்த குழந்தைகளுக்கு இவை எல்லாம் ஞாபகம் இருக்குமா, இல்லை தன்னால் முடியாததை இப்படி செய்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ஒரு வயது ஆண், பெண் இரட்டை குழந்தைகள் பர்த்டே பார்டி சென்று விட்டு அவர்கள் செலவழித்த செலவை பார்க்கும் போது வாயடைத்து போய்  விட்டேன். ப்ரிசெச்ஸ் கேக் மற்றும் ஸ்பைடர்மேன் கேக், இரண்டு டெகரேசன் ப்ளேட், நாப்கின் மற்றும் இரண்டு அதே போன்ற உடை உடுத்திய மக்கள் மற்றும் ரிட்டர்ன் கிபிட் பெரியது மற்றும் பலூன் ஊதி விலங்குகள் அல்லது உருவங்கள் செய்து தரும் க்ளௌன்  என்று அசத்தி இருந்தார்கள். எனக்கு தோன்றியது இது தான், எப்படி அந்த ஒரு வயது குழந்தைக்கு இவை எல்லாம் நியாபகம் இருக்கும். எதுக்கு இவ்வளவு செலவு..
இதெயெல்லாம் கேட்டா நம்மள கஞ்சம்ன்னு சொல்லுவாங்க, சரி அவங்க கிட்ட காசு இருக்கு செலவக்கிறாங்க நமக்கு என்ன பா, என்று பேசாமல் இருந்து விடலாம்,  நமக்கு எதுக்கு வம்பு என்று வந்து விட்டேன்.

என்னவோ, அவங்க அவங்க ஸ்டேடஸ் காட்டுற ஒரு நிகழ்ச்சியா இப்போதெல்லாம் பர்த்டே பார்டிகள் நடத்தபடுது என்பது மட்டும் உண்மை.

சரி ஒரு ரிலாக்ஸ்சேசன் க்காக, மர்லின் மன்றோ பாடிய, ஹாப்பி பர்த்டே Mr.President பாட்டு 




.

டிஸ்கி 
இது பிறந்தநாள் பார்டிகள் குறித்த எனது எண்ணங்கள் மட்டுமே, பொதுப்படையானது அல்ல.


நன்றி


லீவு நோட்டிஸ்:

நிறைய வேலை இருப்பதால், இரண்டு வாரம் ப்ளாகுக்கு லீவு விடபடுகிறது. நேரம் அமைந்தால் மறுபடியும் எழுத முயற்சிக்கிறேன்.

Tuesday, October 27, 2015

அரபு நாட்டில் அடிமைகள் ஆகும் வேலைகார பெண்கள்?

வீட்டு வேலைக்கு என்று அரபு நாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் வேலைக்கார பெண்கள் பின்னர் எப்படி கொடுமை படுத்தப்பட்டு சில நே ரங்களில் கொல் லபடுகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்பொழுது கேள்வி பட்டு/படித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சரி இன்னொரு வெளிநாட்டு வேலைக்கு சென்று கஷ்டபடுகின்ற பெண்ணின் இன்னொரு கதை, என்று கடந்து சென்று இருக்கிறேன்.

ஆனால், நேற்று அரபு நாட்டு வேலைக்கு சென்று தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி அந்த நாட்டு அரசியல் சட்டப்படி கர்ப்பமானது தெரிந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்ற நிலையில் சொந்த நாட்டின் ரேடியோ ஸ்டேஷன் மூலம் தொடர்பு கொண்டு தப்பித்து பிலிப்பைன்ஸ் நாடு சென்ற மோனிகா என்ற பெண்ணின் கதையை Raped, pregnant and afraid of being jailed என்ற BBC செய்தி மூலம் படிக்க நேர்ந்தது. அதன் தொடுப்பு செய்தியாக நைஜீரியா நாட்டின் மற்றொரு பெண் Almaz என்றொரு பெண்ணின் கதையையும்  படிக்க நேர்ந்தது. அல்லது படங்களாக பார்க்க நேர்ந்தது . கண்ணீர் வரவழிக்கும் கதைகள் இவை எல்லாம்.

இதே போன்றொரு செய்தியையும் அதனை தொடர்ந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முடிவான இனிமேல் வீட்டு வேலைக்கு என்று பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவும் அதே போல எதியோபியா மற்றும் நேபால் போன்ற நாடுகள் லெபனான் நாட்டுக்கு வேலைக்கார பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவு குறித்து பல செய்திகளும்  படிக்க நேர்ந்தது.



எல்லா கதைகளும் கிட்டத்தட்ட எப்படி பெண்கள் வீட்டு வேலைக்கு என்று அழைக்கப்பட்டு அடிமைகளாக மாற்ற படுகிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இதனை படித்த பிறகு, வேலைக்கு சேரும் அரபு நாட்டினரால் இந்த நிலையை பெண்கள் அடைகிறார்களா? அல்லது அங்கே சென்ற  இந்திய குடும்பங்களும் இந்த கொடுமையை செய்கின்றனவா ? என்று பல கேள்விகள் என்னுள்ளே.

என்னெனில், எனக்கு தெரிந்து அரபு நாடுகளில் சென்று செட்டில் ஆன இந்தியர்கள் கூட டொமெஸ்டிக் ஹெல்ப் என்று சிலரை உதவிக்கு வைத்து கொண்டவர்களை பார்த்து இருக்கிறேன். சாப்பாடு, காப்பி எல்லாம் அவர்களுக்கு கிடையாது. ஒவ்வொரு மாதமும் இந்திய ரூபாயில் 15-20 ஆயிரம் பணம். ஷிபிட் முறையில் வேலை செய்வார்கள். காலையில் இருந்து மாலை வரை வேலை. இதற்க்கு வேலைக்கு பிடித்து தருவதற்கு என்றே சில எம்ப்லோய்மென்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. லோக்கல்இந்தியன்  கம்யுநிடியில் சொன்னால் போதும், வேலைக்கு ஆட்களை அனுப்பி விடுவார்கள்.
இன்னும்  பலர் எனக்கு தெரிந்து , தின வேலைக்கு இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டு வேலைக்கு என்று ஆட்களை வைத்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்படி வேலைக்கு வரும் பெண்கள் பலரும் ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பதை காண நேர்ந்தது. அதே போல, பல அரபு பெண்களும் தங்களுக்கு உதவியாக பிலிப்பைன்ஸ் பெண்களை அழைத்து கொண்டு ஷாப்பிங் வருவதை பார்க்க முடிந்தது.

இப்படி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உண்மையில் பாதுகாப்பு கொடுக்க படுகிறதா? அல்லது மனித உரிமைகள் மறுக்கபடுகிறதா? இல்லை பிலிப்பைன்ஸ் பெண் மோனிகா போல அடிமை போல நடத்தப்பட்டு கொடுமை படுத்த படும் நிலை இருக்கிறதா? வெளியேற நினைத்தாலும் சட்டங்கள் அதற்க்கு துணை வருகிறதா?, இல்லை அவர்களின் சொந்த நாட்டின் உதவியை  சுலபமாகஅணுக முடியுமா?  அடுக்கடுக்கான கேள்விகள் தொக்கி நின்றாலும்.

அடி மனதில் கனமாக நிற்பது எப்படி ஒரு சக மனிதனை அடிமை போல் இப்படி  நடத்த இந்த மக்களுக்கு மனது வருகிறது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


References

http://www.economist.com/node/16953469
http://www.bbc.com/news/magazine-34616879
http://www.bbc.com/news/magazine-29415876
http://www.huffingtonpost.com/josie-ensor/maids-made-into-slaves-in_b_397648.html



Monday, October 26, 2015

பிரெண்ட்லி மக்களும் அன்பிரெண்ட்லி மக்களும்

எப்பொழுதும்  சைகோலோஜி மீது ஆர்வம் உண்டு, அதுவும் மக்களின் நடத்தைகள் குறித்த சைகோலோஜி ரொம்ப சுவாரசியமானது. அப்படி எனக்கு அப்பட்டமாக தெரிந்த பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி குணாதிசயங்கள் இங்கே.

ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சாதாரணமாக உடை உடுத்தி இருந்தார் , மிக மிக சிம்பிள் ஆக. ஹலோ, ஹாய் சொல்லி சாதாரணமாக பேச ஆரம்பித்து , சில நிமிடங்களில் நமக்கு வாவ் என்று சொல்ல தோன்றும் அளவு அவர்களின் பேச்சு இருந்தது. நல்ல அறிவு ஞானம் கொண்டு இருப்பார்கள். நீங்கள் சொல்லுவதை சின்சியர் ஆக கேட்பார்கள், உங்களுக்கு அறிவுரை தேவை எனில் சொல்லுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லாரையும் எப்படியாவது சிரிக்க வைத்து விடுவார்கள். அவர்களிடம் பேசினாலே நேரம் போவதே தெரியாது. இவர்களை குறித்து சிலர் கமெண்ட் எல்லாம் பின்னால் அடித்தாலும் எதை பற்றியும் இவர்கள் கவலை பட மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் தன்னை பற்றி நன்கு அறிந்தவர்கள், அடுத்தவர்களின் ஜட்ஜ்மெண்ட் க்கு எப்பொழுதும் காத்து கிடக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களை பற்றி நல்லது சொன்னாலும் சரி கெட்டது சொன்னாலும் சரி, கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படி குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மிக அபூர்வம், ஆனால் இவர்கள் ஹை ஸ்பிரிடட், ஹை அசிவிங் மக்கள். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஒரு தேடல் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். மிக மிக பிரெண்ட்லி மக்கள் இவர்கள்.

இப்பொழுது  இன்னொரு வகை மக்கள், இவர்கள் மிக அன்பிரெண்ட்லி, இவர்கள் முந்தய மக்களின் எதிர்பத மக்கள்  எப்பொழுது அந்த இடத்தை விட்டு நகருவோம் என்று நினைக்க வைத்து விடுவார்கள். இவர்களின் பேச்சு எப்பொழுதும்அவர்களை  சுற்றியே இருக்கும்,  ரொம்ப அலுத்து கொண்டே இருப்பார்கள், எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்வார்கள். ரோடு சரியில்லை, வீடு சரியில்லை, மக்கள் சரியில்லை என்று எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்து செய்து நமக்கு காதில் ரத்தம் வர வைப்பார்கள்.

இன்னொரு மக்கள், இவர்கள் எப்பொழுதும் யாருடனாவது கம்பெடிசொன் அல்லது போட்டி போட்டு கொண்டே இருப்பார்கள். அது சின்ன சின்ன விசயங்களாக கூட இருக்கும். அவ  கார் வச்சிருக்கா, நானும் வாங்கணும். அவர் சேலை வாங்குறா நானும் வாங்கணும் என்று மெட்டீரியல் பொருள்களில் இருந்து வேலை, லட்சியம் வரை இது தொடரும். எல்லாரையும் இவர்கள் போட்டியாக மட்டுமே நினைப்பார்கள். எல்லாரையும் விட தான் உசத்தி என்று காட்டுவதில் இவர்களுக்கு அலாதி பிரியம். இவர்கள் தங்களின் நண்பர்களை கூட எதிரிகளாக அல்லது போட்டியாளர்களாக  தான் பார்பார்கள். இவர்களிடம் நட்பு வைத்திருப்பது என்பது கடினாமான வேலை.

அடுத்த வகை மக்கள் தான் பாஸ் என்று காட்டி கொள்ளுவார்கள். அதாவது பிரெண்ட்ஸ் கெட் டுகெதர் என்று வைத்து சென்றோம் என்றாலும் அதில் அவர் மட்டுமே ஆர்டர் தர வேண்டும் மற்றவர்கள் நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது, தான் பாஸ், எல்லா முடிவுகளும் தான் மட்டுமே எடுப்பேன் என்று நடந்து கொள்ளுவது. இது வெகு சீக்கிரத்தில்அவர்களை அவர்கள்  நட்பு வட்டத்திடம் இருந்து பிரித்து விடும் அட்டிடுட் என்று உணருவதில்லை.

இன்னொரு வகை மக்கள், இவர்கள் தங்களுக்கு ஏதாவது தேவை எனில் யாருடைய காலையும் பிடிப்பார்கள். நமக்கு போன் மேலே போன் போடுவார்கள். அக்கறையாக விசாரிப்பார்கள். என்னடா இது என்று யோசிக்கும் வேளையில் தனக்கு ஆக வேண்டிய காரியத்தை குறித்து சொல்லுவார்கள். ஆடடா இதுக்கு தானா?, என்று நமக்கு சிரிப்பு வரும். இதே மக்களிடம் நீங்கள் எந்த ஹெல்ப் வேண்டும் என்று கேட்டாலும், போனே எடுக்க மாட்டார்கள், அல்லது காலம் கடத்துவார்கள்.

இந்த கடைசி வகை மக்கள், எனக்கு கொஞ்சமும் ஒத்து வராதவர்கள். இவர்கள், எப்பொழுதும் அடுத்தவர்களை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று அனைவர் முன்னிலையிலும் அவமான படுத்துவார்கள். அவர்களை பொருத்தவரை அது பன், என்ன தவறு  என்று சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் சரியான காலை வாறும் bullyகள். நம்மிடம் சிரித்து பேசி விஷயத்தை வாங்கி விட்டு அனைவர் முன்னிலையிலும் அதனை சொல்லி கிண்டல் செய்வார்கள். இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருப்பது நல்லது.


டிஸ்கி
இது நான் சந்தித்த, கடந்து சென்ற சில பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி மக்களின் சைகோலோஜி குறித்த எனது புரிதல் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

Thursday, October 22, 2015

சாமி ஆடிகளும், குறி சொல்பவர்களும், பேயுடன் பேசுபவர்களும்!

நேற்று சஸ்பென்ஸ் த்ரில்லெர் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி அவர்களின் நாவலின் தழுவலான Poirot  தொடர்  "Dumb Wintness" பார்க்க நேர்ந்தது. Poirot ஆக David Suchet நடித்து அசத்தி இருப்பார்.



இந்த நாவலில் ஒரு கேரக்டர் வரும், அது எப்பொழுதும் பேயுடன் பேசும் கேரக்டர். பேய் என்ன சொல்லுகிறது யாரை குறித்து சொல்லுகிறது , யார் கொலையாளி என்று தெரிவிக்கிறது என்று பேயை அழைத்து பேசும் கேரக்டர். 

அந்த கேரக்டர் பார்த்து அவர் பேசுவதை குறித்து எல்லாரும் பயந்து கொண்டு இருக்க, Poirot ஒன்று சொல்லுவார், "அவர் சொல்லுவது எல்லாம் கெஸ் வொர்க், உண்மை இல்லை, உங்களை நம்பவைக்க, திசை திருப்ப நடக்கும் நாடகம்" என்று. எனக்கு அதனை கேட்ட பின்னர், நான் சந்தித்த,படித்த   சில சாமி ஆடிகளும் குறி சொல்லுபவர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

சிறு வயதில் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது சாமி ஆடிகள் பார்த்து இருக்கிறேன். அதுவும் பூசாரிகள் அனைவரும் சாமி ஆடிகளாக அருள் வந்தவர்களாக பார்த்து, என் அம்மாவிடம் "எப்படி மா சாமி வரும்?" என்று கேட்டது ஞாபகம் வருகிறது. அதுவும் ஒரு  சாமி கோவில் பூசாரி அருள் வந்து கையில் அருவாள் எல்லாம் வைத்து சாமி ஆடியதை பார்த்து பயந்து இரவெல்லாம்  தூங்காமல் இருந்தது ஞாபகம் இருக்கிறது. 

அதே போல, நிறைய அம்மன் கோவில்களில் எல்லாம் பெண்கள் சாமி ஆடுவதை பார்த்து இருக்கிறேன். சாமி வரும் போது எல்லாம் "டேய், அவனே இவனே என்று அனைவரையும் திட்டுவதையும் பார்த்து இருக்கிறேன்". முக்கியமாக கோவிலில் சாமி வரும் போதெல்லாம், "சாமிக்கு படைக்க வேண்டும், சாமி கும்பிட வேண்டும்" என்று பலரும் குறிப்பிடுவார்கள். இதே போன்ற ஒன்று "பொன்னியின் செல்வன்" கதையில் தேவராளன் சன்னதம் வந்து ஆடுவதையும், "அவர் வேண்டுவதை சூசகமாக கூறுவதையும்" படித்த பிறகு, ஒரு வேலை எல்லா சாமி ஆடிகளும் "தனக்கு வேண்டுவதை சூசகமாக, சாமி கேட்பதாக கேட்கிறார்களோ?, அல்லது மன அழுத்தத்தை இப்படி வெளி இடுகிறார்களோ" என்று எண்ணுவது உண்டு. இன்னும் சிலர், "சாமி ஆடினா, நம்மையும் மதிப்பார்கள்"  என்று வோலேன்டீர் ஆக சாமி ஆடுகிறார்களோ என்றெல்லாம் நான் நினைப்பது உண்டு.


உதாரணமாக, எங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு அடிக்கடி சாமி வரும், என்ன சாமி வேண்டும் என்று கேட்டால், "அவருக்கு வேண்டியதை, பெரிய லிஸ்ட் படிப்பார், அதுவும்  சாமி கேட்பது போல" கேட்பார். தன்னை சுற்றி எல்லாரும் கடவுளுக்கு பயந்தவர்கள், இவர்களை நன்கு உபயோகித்து கொள்ளலாம் என்ற சூட்சுமம் தெரிந்ததால் அவர் இப்படி ஆட்டி படைத்து கொண்டு இருந்தார். நான் ஒரு முறை, "அவருக்கு சாமி எல்லாம் வர வில்லை, எல்லாம் பொய்," என்று சொல்லி, எல்லாரும் நீ சாமிய குத்தம் சொல்லுற என்று என்னை திட்டியது நியாபகம் வருகிறது.

இன்னொரு விசயமும் எனக்கு தெரிந்து புதிராக இருந்து இருக்கிறது. அது, பெரிய பெரிய கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு சாமி வந்து பார்த்ததில்லை. ஆனால் சிறிய அம்மன் கோயில்கள் அல்லது குலதெய்வ கோயில்களில் எல்லாம் சாமி கும்பிடும் மக்களுக்கு அதிகம் சாமி வந்து பார்த்து இருக்கிறேன். ஏன் இப்படி என்று வியந்தது உண்டு.

அதே போல, இன்னொரு அனுபவம் எனக்கு உண்டு, ஒரு முறை மதுரையில் இருந்து சென்னை பயணம், ரயிலில் என் குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்தோம். எங்களுடன் இன்னொரு நடுத்தர வயதுக்காரரும் ஏறினார், பெரிய பட்டை போட்டு, காவி வேட்டி கட்டி இருந்தார் அவர். அப்பொழுது, ஒரு நடுத்தர வயது அம்மாவும், அய்யாவும் ஏறினார்கள். அவர்களுடன் சாதாரணமாக பேச்சு கொடுத்த அவர், திடீரென்று சாமி வந்தவர் போல, "உங்கள்  வீட்டில் பெண் தெய்வம் இருக்கிறது, அதனை நீங்கள் சரியாக கும்பிடவில்லை, கோவமாக இருக்கிறது" என்று எல்லாம் சொல்லி விட்டு, "ஒரு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும், என்னை வந்து சந்தியுங்கள்" என்று போன் நம்பர் குடுத்தார். எல்லாரும் அவர் சொன்னதை பார்த்து பயந்து விட, எனக்கு நிறைய சாமி ஆடி அனுபவங்கள் இருந்ததால் எதையும் நம்பவில்லை.

இதனை குறித்த நியாபகம் கூட எனக்கு மறந்து விட்டது, ஆனால் என் அண்ணன்,  கிட்டதட்ட இதே போல ஒன்றை ஒரு பஸ் பயணத்தில் ஒருவர் தன்னிடம் கூறியதாக நேற்று தெரிவித்தார்.நான்  Poirot அவர்கள் கூறியது போல, இது "சரியான கெஸ் வொர்க் , எல்லாருடைய வீட்டிலும் ஏதேனும் பெண் தெய்வம் குல தெய்வமாக இருக்கும், அதனை நன்கு உபயோகித்து இப்படி செய்கிறார்கள்" என்றுகூற, என் அண்ணனோ "எப்படி அவர்களுக்கு என்னிடம் மட்டும் அப்படி சொல்ல தோன்றும், உண்மையில் அவருக்கு சாமி வருது" என்று சொல்ல, படித்தவர்களே இப்படி இருப்பது கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரிவில்லை. . 

குறி சொல்பவர்கள் கூறுவது என்பது பல நேரங்களில் கெஸ் வொர்க் தான், தங்களை தேடி வரும் மக்கள் பல நேரங்களில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வருகிறார்கள் என்று நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் வாயில் இருந்தே பல விசயங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கே சொல்கிறார்கள். நல்ல வாக்கு சாதுரியமும், ஸ்ட்ரீட் ஸ்மார்ட்நெஸ் ம் தெரிந்தவர்கள் இவர்கள். தற்போது சாமி பக்தி மிக மிக அதிகமாகிவிட்ட இந்த நிலையில், நிறைய மக்கள் இப்படி இன்ஸ்டன்ட் "குறி" சொல்பவர்களாக மாறி இருப்பதை கண்கூடாக காண நேர்ந்தது. 

அதுவும் நன்கு படித்த நல்ல வேலையில் இருப்பவர்களும் இப்படிகுறி கேட்க செல்வது நாம் நிறைய backward ஆக சென்று கொண்டு இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. 

டிஸ்கி 

நான் எவரின் கடவுள் நம்பிக்கையையோ, பாரம்பரியத்தையோ இங்கு குறிப்பிட்டு  சொல்லவில்லை. ஆனால், மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி ஆதாயம் தேடும் மக்களை குறித்த என் அனுபவங்களை குறித்தே இங்கு பதிந்து இருக்கிறேன். இது என் அனுபவம் மட்டுமே, பொதுப்படையானது அல்ல.



நன்றி.


Tuesday, October 20, 2015

ஓபிசிடியும்,ஒல்லி பெல்லி அறுவை சிகிட்ச்சையும் , இந்தியாவும்

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இன் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அது எவ்வாறு உலக மக்கள் தொகையில் 29% மக்கள் ஓபிசிட்டி எனப்படும் மிக அதிக எடை கொண்ட குண்டு பூசணிக்காய்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய  Lancet மருத்துவ இதழில் வெளிவந்த கட்டுரையின் சாராம்சம்.

1980 இல் இருந்ததற்கும் 2013 யில் இருந்ததற்கும் கிட்டத்தட்ட 27% பெரியவர்கள் ஓபிஸ் ஆகி இருக்கிறார்கள் என்றும் 47.1% குழந்தைகள் ஓபீஸ் ஆகி இருக்கிறார்கள் என்றும் படித்த போது தலை சுற்றியது. குழந்தைகளை பொருத்தவரை எடை அபரிமிதமாக, கிட்டதட்ட 50% வளர்ச்சி இது. 30 வருட வித்தியாசத்தில் இது நடந்து இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கிய காரணம் போர்சன் சைஸ் இல்லாதது, அதிக கொழுப்பு மற்றும் carb உணவு எடுத்து கொள்ளுவது மற்றும்  உடல் பயிற்சி இல்லாதது போன்றவை முக்கிய காரணம் எனலாம். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 30வருடங்களில் எல்லா குழந்தைகளும் குண்டாவதை தவிர்க்க முடியாமல் DNA அளவில் ஜெனடிகல் மாற்றம் நிகழ்ந்து விடலாம்.

இதற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. ஐந்தில் ஒரு இந்தியர் ஓபீஸ் ஆக இருப்பதாக அதே கட்டுரை தெரிவிக்கிறது.  குண்டானவர்கள் எண்ணிக்கையில் US, சீனாவுக்கு அடுத்து இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில்  உள்ளது. அதுவும் இந்த மாற்றம் 30 வருட இடைவெளியில் நிகழ்ந்து இருக்கிறது.



ஒரு காலத்தில் ப்ரோச்பெரிட்டி அல்லது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்பட்ட இந்த ஓபிசிட்டி தற்பொழுது எல்லா நாடுகளிலும் ஏன் வளரும் நாடுகளான பிரேசில், மெக்ஸிகோ பாகிஸ்தான் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும், ஆப்பிரிக்கா நாடுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

இது என்னடா தலைவலி என்று நான் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில், இந்தியாவில் வெயிட்டை குறைத்து ஒல்லி பெல்லி கொண்டுவர என்று வெயிட் குறைக்கும் அறுவை சிகிட்ச்சை செய்து கொள்வோர் பன்மடங்கு அதிகமானது பற்றியும் படிக்க நேர்ந்தது. 2009 இல் கிட்ட தட்ட 800 பேர் வெயிட் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர் என்றும் அதுவே 18000 பேர் ஆகா 2014 இல் வெறும் ஐந்து வருடங்களில் வளர்ந்து இருப்பதும் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அதனை அமைச்சர் அருண் ஜெட்லி போன்றோர் எடுத்துகொண்டு இது போன்ற அறுவை சிகிச்சையை ப்ரொமோட் செய்வதும் படித்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டேன்.

நல்ல சத்தான  உணவுப்பழக்கம், உடல்பயிற்சி மூலம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய உடல் எடையை இபப்டி அறிவை சிகிச்சை போன்று குறுக்கு வழியில் செய்ய நினைத்து உயிரை இழந்த ஆர்த்தி அகர்வால் போன்ற நடிகை நினைவு ஏனோ எனக்கு வந்து தொலைத்தது.


நன்றி 

Sunday, October 18, 2015

தற்பெருமை என்னும் ஒரு தொற்று வியாதி

இது எனக்கு மட்டும் தான் நடக்குதுதா இல்லை எல்லாரும் இதே போல கேட்டு இருக்கீங்களான்னு தெரியல. 

முகுந்த் கூட படித்த பையன் அவன், அவங்க அம்மா என்னை எங்க பார்த்தாலும், முகுந்த் எப்படி படிக்கிறான், என்ன என்ன எக்ஸ்ட்ரா கிளாஸ் போறான், ஹோம் வொர்க் சீக்கிரம் பண்ணுறான..அப்படி எல்லாம் கேட்டுட்டு, உடனே அவங்க பையன் ரொம்ப ப்ரில்லியண்ட், கிண்டர் கார்டன் லையே 2 grade புத்தகம் படிப்பான். அதுக்குள்ளார கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் பண்ணுறான். அவன் தான் கிளாஸ்ல நம்பர் ஒன்...ஹிந்தி வேற படிக்கிறான், soccer போறான். கிப்டெட் ப்ரோக்ராம்ல இருக்கான் அப்படின்னு ஒரே தற்பெருமை. நான் கேட்டனா, உங்க பைய்யன் என்ன படிக்கிறான், எங்க படிக்கிறான்னு. ஏன் மா..ஏன்.வலேண்டீரா வந்து கடி போடுறீர்ங்க...எனக்கு மட்டுமே தான் இப்படி வந்து மாட்டுதோ? இல்ல நிறைய மக்களுக்கு இது நடந்து இருக்கா தெரியல.

அதே போல இன்னும் சிலர் இவங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற தேசி மக்கள். மெதுவா ஹலோ எப்படின்னு ஆரம்பிப்பாங்க, அப்புறம் மெதுவா சொல்லவே இஷ்டம் இல்லாதவங்க போல, தான் ரொம்ப ambitious, வேலை பார்த்துட்டே MBA டாப் யுனிவெர்சிடில படிக்கிறேன், இல்ல நான் பெரிய ஆர்கிடெக்ட், நான் இல்லாட்டி என் கம்பனியே நடக்காது, நான் தான் எல்லா முடிவும் எடுப்பேன் என்று பேசுவாங்க, பேசுவாங்க பேசிட்டே இருப்பாங்க...நான் கேட்டனா..நீங்க மேல படிகிறீர்கள என்று..அவங்கள பொறுத்த வரை, "நீங்க கிரேட், எப்படி சமாளிகுறீங்க" அப்படின்னு நாம சொல்லுற இரண்டு வார்த்தைகள். பந்தாவா, காஸ்ட்லி செல் போன் வச்சுகிறது, வொர்க் சப்போர்ட் பண்ணுறேன் பா, அப்படின்னு பொது இடத்துல இல்ல பார்ட்டில பார்க்கும் போது எல்லாம் சீன் போடுறதுன்னு...ஒரே குஷ்டம்பா..

அடுத்தவகை  முக்கால் வாசி நேரம் நான் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா அப்படின்னு ஷோ கட்டுற மக்கள். ஒரு சில மக்கள் வீட்டுக்கு பார்டிக்கு அல்லது பூஜைக்கு கூப்பிடுவாங்க, அவங்கள் நம்ம ப்ரெண்ட் கூட இருக்க மாட்டங்க ஆனா ஹலோ ஹாய் சொல்லி இருப்போம். வீட்டுக்கு கூப்பிட்டு ப்ளேடு போடுவாங்க பாருங்க காதில ரத்தம் வரும். எல்லாமே, இந்த பொருள் அங்க வாங்கினது, இது ஸ்பெஷல் ஆ செய்ய சொல்லி வாங்குனது. இது யுனிக் எங்கயுமே கிடைக்காது. இப்போ தான் வீட்டை ரீமாடல் பண்ணினோம், வெறும் 70 ஆயிரம் டாலர் தான் செலவாச்சு..என்று ரொம்ப சலிப்பா சொல்லுற மாதிரி நாம எவ்வளவு பணக்காரன் தெரியுமா அப்படின்னு பறை சட்டுறது. "ஏன் பா ஏன் என்று காதில் நமக்கு ரத்தம் வரும்".

இன்னும் சில மக்கள் இருக்காங்க,முக்கியமா பொண்ணுகள சொல்லலாம். " ஏ, இங்க பாரேன் நேத்து தான் இந்த டிரஸ் வாங்கினேன், செயின், வளையல்...., எப்படி இருக்குன்னு சொல்லலையே" என்று வாலேன்டீர் ஆக வந்து கேட்பார்கள்.  அப்புறம் நம்ம கிட்ட ஹனஸ்ட் அட்வைஸ் சொல்லுற மாதிரி, இதெயெல்லாம் ஏன் இன்னும் போடுற, இதெல்லாம் ஓல்ட் டிசைன்..வேற இதை போல வாங்கலாமே, அப்படின்னு சொல்லுவங்க..இங்க தான் நான் வாங்கினேன்..பாரு எவ்வளவு நல்லா இருக்கு சீப் கூட...அப்படின்னு நாம "நீ போட்டு இருக்கிறது கிரேட், நானும் வாங்குறேன்", அப்படின்னு சொல்லுற வரை விடமாட்டாங்க....அதாவது நமக்கு ஸ்டைல் டிப்ஸ் கொடுக்குறாங்கலாமா...யாரு கேட்டது உங்க ஸ்டைல் டிப்ஸ் ஐ.

இன்னும் ஒரு சில மக்கள் பார்த்து இருக்குறேன், அவங்க தான் தன பெர்பெக்ட், அப்படின்னு காட்டுறதுக்கு மெனக்கெடுவாங்க.உதாரணமா, எடுத்தது எடுத்த எடத்துல வைக்கணும், இல்லாட்டி எனக்கு பிடிக்காது, அப்படி செய்யதவங்க எல்லாம் என்னா மக்களோ, கொஞ்சம் கூட சுத்தம் இல்லாதவங்க..ஐ டோன்ட் லைக் தெம். என்று சீன் போடுவார்கள்.  

இந்த மாதிரி தற்பெருமை பேசுறவன்களோட மோடிவ் என்னன்னா, நான்/நாங்க  உன்ன/உங்களை  விட பெட்டெர் தெரியுமா...நீ/நீங்க  எப்பவுமே என்ன/எங்கள  விட கீழ தான் அப்படின்னு காட்டிகிறதுக்கு.
என்னை பொருத்தவரை இவங்க பாவம், கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இல்லாதவங்க, அடுத்தவங்களின் புகழுக்காக எல்லாத்தையும் செய்யிறவங்க..இவங்கள பார்க்கும் போது grow up பீபிள் என்று சொல்ல தோன்றும். 

பறவைகள் பலவிதம்ன்னு, மனிதர்கள் பலவிதம், அதில் தற்பெருமை பேசுறவர்கள் ஒருவிதம் போல.


நன்றி.

Saturday, October 17, 2015

அமெரிக்க கொலு என்னும் ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்யு!


முன்பு எல்லாம் பரம்பரை பரம்பரையாக கொலு வைப்பார்கள். அம்மா திருமண மான பின் மகளுக்கு ஒரு சில பொம்மைகள் வாங்கி கொடுப்பது என்பது பல குடும்பங்களில் வழக்கம். மரப்பாச்சி போன்றவை அதில் அடக்கம். வீட்டு பாரம்பரியத்தை காக்க, என்று வரும் மருமகளும் கொலு வைக்க ஆரம்பிப்பார்கள்.  
குடும்பத்தில் கொலு வைக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே கொலு வைப்பது என்ற சம்பிரதாயம் எல்லாம் போய் இப்பொழுது எல்லார் வீடுகளிலும் நிறைய கொலு வைக்கிறார்கள். அதிலும் அமெரிக்காவில் எத்தனை பேரை நீ கூப்பிடுற, பாரு நான் உன்னை விட அதிகம் கூப்பிடுறேன் பாரு, என்று போட்டி எல்லாம் நடக்கிறது. அதாவது, உனக்கு செல்வாக்கு நிறையயா இல்ல எனக்கு செல்வாக்கு இருக்கா என்று காட்டவே நிறைய மக்கள் கொலு வைக்கிறார்கள்.  

முன்பெல்லாம் தன் வீட்டில் இருக்கும் சிறு பெண்களை அழகாக பூ தைச்சு குங்கும சிமிழ் கொடுத்து அக்கம் பக்கம் வீட்டுல இருக்கிறவங்கள எல்லாம் "எங்க  வீட்டு கொலுவுக்கு  வாங்க " என்று அழைத்து வர சொல்லுவார்கள். இப்பொழுது எல்லாமே மாடர்ன் தான், evite இல் கொலு அழைப்பிதழ் வருகிறது. பின்னர் நீங்கள் அதில் RSVP செய்யவில்லை என்றால் போனில் கூப்பிட்டு" RSVP செய்யுங்கள், நாங்கள் எத்தனை பேருக்கு வெத்திலை பாக்கு கொடுக்கணும்னு கணக்கு பண்ணனும்" என்று சொல்லுகிறார்கள். 

இதில் கஷ்டபடுபவர்கள் யார் என்றால் கொலு பாக்க அழைக்கப்படும் என்னை போன்றவர்கள் தான், அதுவும் இந்த வருட கொலு க்கு நடுவில் ஒரே ஒரு வீகெண்ட் தான் என்பதால் கிட்ட தட்ட கொலு வைத்த எல்லா வீட்டிலும் இருந்து அழைப்பு. இருப்பது இரண்டு நாள்,  இரண்டு நாளைக்குள் எத்தனை வீட்டுகளுக்கு செல்வது?. அதுவும் ஒரு வீடும் அடுத்த வீடும் இருக்கும் தொலைவு 20-30 மைல்கள். அவர்கள் அழைத்திருக்கும் நேரம் 5 மணிக்கு மேல் 8 மணிக்குள். எத்தனை வீடுகளுக்கு செல்வது? அதுவும் ஒரு வீட்டுக்கு சென்று விட்டு அடுத்த வீட்டுக்கு செல்லவில்லை என்றால் அதுவும் முகத்தை தூக்கி வைத்து கொள்கிறார்கள். ஒரு சிலர் நட்பை கூட துண்டித்து விட்டு இருக்கிறார்கள். கொலுவுக்கு அழைக்கும் போது அடுத்தவர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள் மக்களே.

அடுத்து எத்தனை பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள், எத்தனை பேர் வீட்டுக்கு சென்றோம் என்று பறை அடித்து கொள்ளுகிறார்கள்,அதனை பெருமையாக சொல்கிறார்கள். ஊரு விட்டு ஊரு வந்து இப்படி கொலுபோன்ற இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம் என்பதில் பலருக்கும் பெருமை தான், ஆனால் அது ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்யு ஆகி மற்றவங்களுக்கு தொல்லையாகும் போது தான் கடுப்பை வர வழிக்கிறது .  

டிஸ்கி 
இது என்னுடைய பர்சனல் அனுபவம் எண்ணங்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவோ, அனுபவங்களை பொதுபடுத்தவோ இல்லை.

நன்றி 
 


Thursday, October 15, 2015

இரவு நேர மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதா?

கடந்த பதிவுகளில் ஒன்றில் விஜயகுமார் என்பவர் நியூ யார்க் நகர் மெட்ரோ  பயண அனுபவங்கள் குறித்து எழுதும் படி கேட்டு இருந்தார். நான் நியூயார்க் இல் வசித்ததில்லை என்றாலும் நியூ ஜெர்சி யில் இருந்து நியூயார்க் ஒரு முறை மெட்ரோ பிடித்து சென்றதும், சுதந்திர தேவி சிலையை பார்த்ததும் உண்டு. ஆனால் தினம் தினம் மெட்ரோ ட்ரைன் ஐ எடுத்து வேலைக்கு சென்ற அனுபவம் இல்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த சில மெட்ரோ ட்ரைன்கள் குறித்த சில அனுபவங்கள் இங்கே.



லண்டன், நியூயார்க், அட்லாண்டா  போன்ற பெரிய நகரங்களில் டௌன் டவுன் எனப்படும் சிட்டி சென்ட் இல் முக்கால் வாசி நேரம் பார்கிங் கிடைக்காது மற்றும் அதிக பைசா என்பதாலும், டிராபிக் கொன்று விடும் என்பதாலும் நிறைய பேர் மெட்ரோ subway எனப்படும் துரித ரயில் எடுத்து வேலைக்கு செல்வது உண்டு. நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் தீவில் நிறைய அலுவலகங்கள் இருக்கும் என்பதாலும் அருகில் வசிக்க வீடு வாங்க முடியாது என்பதாலும் நிறைய பேர் ஊருக்கு வெளியே வீடு வாங்கி குடியேறுகின்றனர். அவர்கள் தன அலுவலகம் வர உபயோகிப்பது மெட்ரோ subway. அதே போல நாங்கள் இருக்கும் அட்லாண்டாவிலும் MARTA எனப்படும் துரித ரயில் உண்டு.

முதன் முதலில் நான் மெட்ரோ உபயோகித்தது என்றால் அது லண்டன் அண்டர் கிரௌண்ட் மெட்ரோ தான். ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் உபயோகிப்பது கண்டு வியந்து இருக்கிறேன். அதே போல frankfurt U-Bahn உபயோகித்து இருக்கிறேன். என்ன துல்லியமான நேர பின்பற்றல், காலையில் இருந்து 9-10 மணி வரை தொடர்ந்து இருக்கும் ரயில்கள். இரவு சேவை என்று தனி, எப்படி பயணிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று ஐரோப்பா வந்த புதிதில் வியந்து இருக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை ஐரோப்பாவில் உபயோகித்தவரை மெட்ரோ உபயோகித்து தனியாக ஊரின்  எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் சென்று விடலாம். well connected. நான் அப்பொழுது இருந்தது ஸ்டுடென்ட் ஆக என்பதால் ஸ்டுடென்ட் பாஸ் உண்டு. அந்த மாநிலத்துக்குள் எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் ஸ்டுடென்ட் id காட்டி இலவசமாக சென்று விடலாம்.  சனி கிழமை நான் பிரான்க்புர்ட் வந்தது ஞாபகம் வருகிறது. காலையில் குரூப் ஆக கிளம்பி நாள் முழுதும் பிரான்க்புர்ட் சுற்றி விட்டு பின்னர் இரவு ரயில் பிடித்து வீட்டுக்கு சென்றதும் ஞாபகம் வருகிறது.

அதே போல  கிட்டத்தட்ட ஒரு மாதம் லண்டன் அண்டர் கிரௌண்ட் யிலும் தினமும் காலையில் சென்று மாலையில் திரும்பி இருக்கிறேன்.  என்னை பொருத்தவரை லண்டன்,பிரான்க்புர்ட்   மெட்ரோ பயணங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவை.

ஆனாலும் பாரிஸ் மெட்ரோ இரவு நேரங்களில் நான் எடுக்க யோசிப்பதுண்டு. பாரிஸில் ஒரு வாரம் கருத்தரங்குக்கு என்று தங்க நேர்ந்த போது, இரவு நேர ரயில் பயணத்தில் நிறைய தண்ணி பார்டிகள் ஏறியதையும் ஒரு சில ஸ்டேஷன் களில் இருக்கும் மக்கள் சரியானவர்களாக இருப்பதையும் பார்க்க நேர்ந்தது. ஆனாலும் யாரும் என்னிடம்  தப்பான முறையில் நடந்ததில்லை. அவர்களாக பேசி கொள்வார்கள் அல்லது பைத்தியம் போலே நடந்து கொள்வார்கள். உங்களை தொல்லை படுத்த மாட்டார்கள்.


இப்பொழுது என்னுடைய MARTA அனுபவம் இங்கே. அட்லாண்டா வந்த பிறகு MARTA உபயோகிக்க இயலவில்லை. ஏனெலில் என்னுடைய லேப் இருந்த பகுதியில் ஒரே ட்ரைன் எடுத்து செல்ல முடியாது. ரயில் மற்றும் பஸ் மாறி செல்வதற்குள் நேரம் கடந்து விடும் என்பதால் நான் முக்கியமாக கார் உபயோகிக்க ஆரம்பித்து இருந்தேன். கடந்த மாதம் ஒரு கருத்தரங்குக்கு என்று MARTA எடுத்து விடலாம் என்று நானும் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரும்(ஒரு வெள்ளை ஆண்) முடிவு செய்து விட்டோம். அப்பொழுது என்னுடன் வேலை பார்க்கும் மற்றொருவர், MARTA எடுக்க போறியா பார்த்தும்மா என்றார். நானோ, "நிறைய மெட்ரோ பயணம் செய்து இருக்கிறேன். அதனால் ஒன்னும் பிரச்னை இல்லை" என்றேன். அவர், தனியாக வராதே, நீயும் இன்னொருவரும் உடன் வாருங்கள் என்றார்.

காலையில் ட்ரைன் எடுக்கும் போது எந்த பிரச்னையும் தெரியவில்லை. சொல்ல போனால் நிறைய ஆபீஸ் செல்லும் மக்கள் இருந்தது எனக்கு மற்ற மெட்ரோ ரயில்களை நினைவு படுத்தியது. நல்ல அறிவிப்பு மற்றும் நிறைய மக்கள் சொகுசான பயணம் என்று 20-30 நிமிடங்களில் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்தாயிற்று. நானும் கூட வந்தவரும் மெட்ரோ வை கமெண்ட் செய்தவரை குறித்து கிண்டல் அடித்து கொண்டு வந்தோம்.

மீட்டிங் முடிந்து இரவு 7:30 க்கு மேலே ட்ரைன் எடுத்து வீட்டுக்கு வர நின்று கொண்டு இருந்தோம். மிக சொற்பமான மக்கள் நின்று கொண்டு இருந்தார்கள். பின்னர் ரயில் வந்ததும் எங்கள் பெட்டியில் எங்கள் இருவரை தவிர இரண்டு பேர் ஏறினர். இங்கே இருக்கும் மக்களுக்கு தெரிந்து இருக்கும் ஒரு சில கருப்பு மக்கள் எப்படி உடை உடுத்துவார்கள் எப்படி இருப்பார்கள் என்று. நிறைய செயின் போட்டு கொண்டு பெரிய பை வைத்து கொண்டு ஒருவ(ர்/ன்) ஏறி அதன் பின் இன்னொருவரும் ஏறி பின்னர அவர்களின் பேச்சு எல்லாமே inappropriate. தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை பொருள்கள் மற்றும் பெண்களின்  அங்கங்கள் குறித்த மிக அசிங்கமான பேச்சு. நான் இறங்க வேண்டிய ஸ்டாப் பில் அவர்களும் இறங்க எத்தனிக்க, அவர்களின் பேச்சை கேட்ட பின்னர் என்னுடன் வந்தவர் அவருடைய ஸ்டாப் இல்லை என்றாலும் எனக்காக இறங்கி நான் கார் எடுக்கும் வரை வெயிட் செய்து விட்டு சென்றார்.

இது பொதுவான நிகழ்வா? இல்லை அட்லாண்டாவில் இருக்கும் மெட்ரோவில் மட்டும் நடப்பதா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்க  பெரிய மெட்ரோக்களில் இது கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறன்.

டிஸ்கி

இது என்னுடைய சொந்த அனுபவம், பொதுப்படையானது அல்ல,  எல்லாருடைய அனுபவமும் வேறு மாதிரி இருக்கலாம். அதனால் இரவு நேர தனியே மெட்ரோ பயணம் பெண்களுக்கு safe இல்லை என்பது என் எண்ணம். ஆனால் போலீஸ் நீங்கள் கூப்பிடலாம் என்று சொன்னர்ர்கள், பயன் இருக்குமா என்று தெரியவில்லை.

நன்றி


Tuesday, October 13, 2015

டூ ஹாட் டு பி எ என்ஜினியர் ,பெண்மையும் வேலையும்

இந்த வருட ஆரம்பத்தில் அழகாய் இருப்பதன் சாதகங்களும் பாதகங்களும் என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன்.  அதில் அழகான பெண்கள் அல்லது நன்றாக தன்னை ப்ரெசென்ட் செய்து கொள்ள தெரிந்த பெண்கள் ப்ரோபாஸ்னலி சீரியஸ் ஆக எடுத்து கொள்ள படுவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். அதாவது, நீங்கள் அழகானவர் எனில் வேலையில் முன்னேற வேண்டும் எனில் career ladder இல் மேலே ஏற வேண்டும் எனில் உங்களை சிறிது அழகில்லாதவராக காட்டி கொள்ள வேண்டும். அல்லது மிக மிக கன்செர்வேடிவ் உடைகளை உடுத்த வேண்டும். இல்லையேல் உங்களை யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

இதனை வலியுறுத்தி Ada Lovelace டே என்னும் ஒரு நாள் 13 அக்டோபர் கொண்டாடப்படுகிறது. அது மிக அழகான mathematician Ada Lovelace அவர்களின் நினைவாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருக்கும் பெண்களை கொண்டாட என்று தற்போது உபயோகிக்க படுகிறது.


Thanks to photos from bbc.co.uk

இதனை குறித்த செய்தி ஒன்று இன்று BBC யில் பார்க்க நேர்ந்தது. "Too hot to be an Engineer: Women mark Ada Lovelace Day".  ஆயிரகணக்கான பெண்கள் அறிவியல் மற்றும்  தொழிநுட்பம் துறையை சார்ந்த #looklikeanengineer என்ற ட்விட்டர் hashtag க்கு தங்களின் துறை சார்ந்த புகைப்படங்களை அனுப்பி வருகிறார்கள்.இந்த hashtag ஐ ஆரம்பித்தவர் Isis என்னும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். ஒரு பணி நிரப்பும் வேலைக்காக "நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன்" என்று ஒரு விளம்பரம் எடுக்க ஐசிஸ் இன் கம்பெனி அவரை அணுகியபோது அவர் எந்த மேக்கப் எதுவும் இல்லாமல் ஒரு விளம்பரம் செய்ய உதவி இருக்கிறார். அது ஒரு புயலை கிளப்பி இருக்கிறது. அதாவது நிறைய பேர் "இவர் உண்மையிலேயே என்ஜினியர் ஆ, இவ்வளவு அழகாக இருக்கிறார், இருக்காது" என்று சொல்லி இருகின்றனர்.


Thanks to photos from bbc.co.uk

வெறுத்து போய், #looklikeanengineer என்று அவரின் ப்ளாக்யில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு, உலகெங்கும் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் இருக்கும் பெண்களை புகைப்படம் அனுப்ப சொல்லி இருக்கிறார். நிறைய அழகான பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அதுவே பிரபலம் ஆகி இருக்கிறது.


எல்லா இடங்களிலும் ஸ்டீரியோடைப் இருக்கிறது. scientist என்றால் லேப் கோட் எஞ்சினீர் என்றால் ஹார்ட் ஹாட், நர்ஸ் என்றால் பெண்கள் ..போன்ற சில. அதே போல பெண்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட வேலைகள் மட்டுமே அனுமதிக்க, ஏற்றுகொள்ள அல்லது நினைக்க படுகிறது. ஆனால் உண்மையில் உலகெங்கும் பெண்கள் எல்லா துறைகளிலும் கால்பதித்து இருக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இந்த ஸ்டீரியோ டைப்பில் இருந்து வெளியே வருவதில்லை.

இதனை சார்ந்த Athene Donald என்பவரின் வலைபூ வாசிக்க நேர்ந்தது. எப்படி பெண்களை உற்சாகபடுத்தலாம், ஸ்டீரியோ டைப் வேளைகளில் இருந்து வெளியே வர வைக்கலாம், ரிஸ்க் எடுக்க உற்சாகபடுத்தலாம் என்பதனை குறித்து வாசிக்க நேர்ந்தது. அதில் எனக்கு பிடித்த சில இங்கே.

1. தவறான செய்கை, நடத்தை கண்டால் தைரியமாக பேச ரிப்போர்ட் செய்ய சொல்லி உற்சாகபடுத்துதல்
2. கருத்தரங்கக்குகலில் நிறைய பெண் பேச்சாளர்களை அனுமதித்தல் மற்றும் அழைத்தல். பெண்களை நிறைய math, science படிக்க சொல்லி உற்சாகபடுத்துதல்
3. பெண்களை நிறைய பரிசுகள் மற்றும் பெல்லொவ்ஷிப், ஸ்காலர்ஷிப் கொடுத்து படிக்க உற்சாக படுத்துதல்.
4.  நம்மை குடும்பம், சமூகம்  அனுமதிக்காது  என்று உள்ளுக்குள்ளே புழுங்கி தனக்கு திறமை இல்லை என்று முடிவு கட்டி விடும் நிலையில் இருக்கும் பெண்களை அவர்களின் திறமைகளை வெளியே உலகறிய செய்தல்.
5. நீங்களே ஒரு நல்ல ரோல் மாடல் ஆக இருப்பது, பல பெண்களை வழி நடத்த உதவும்.


"Happy Ada Lovelace day to fellow women who are in science, technology, engineering and heath care"


நன்றி 

Monday, October 12, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!!

 கடந்த வருடங்களை நினைத்து, கடந்து வந்த பாதைகளை நான் அசை போடும் போது ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ".  எத்தனை அருமையான பாடல் இது.


.நான் +12 முடித்தசமயம் எப்படியாவது இன்ஜினியரிங் சேர்ந்து விட வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை எனக்கு. ஆனால் சீட் கிடைக்கவில்லை. என் உடன் படித்த பலரும் காசு கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னிடம் கல்லூரி இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று வந்து சொல்லும் போது எனக்கு ஒரே அழுகை அழுகையாக வரும். எனக்கு மட்டும் என் கிடைகல சீட் என்று அழுவேன். எனக்கு மட்டுமே என் இப்படி நடக்கிறது என்று அழுகை தினமும்.

நெடுநாளைக்கு பிறகு அதே தோழிகள் சிலரிடம் பேச நேர்ந்தது. அதில் முக்கால் வாசி பேர் தற்போது படித்த கல்லூரியில் பேராசிரியை ஆக இருப்பதாகவும் ஒரு சிலர் வேலை எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.  இன்ஜினியரிங் சேராதது எவ்வளவு நன்மை என்று நினைத்து கொண்டேன்.

 இன்னொரு நிகழ்வு, சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த வேலை அது, எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்த வேலை. ஹெல்த் கேர் பீல்ட் என்பதால் மக்களுக்கு சேவை செய்ய மறைமுக வாய்ப்பு என்று நினைத்து சந்தோசப்பட்டேன். ஆனால் உள்ளே அரசியல் தாங்க முடியவில்லை. இந்தியாவில் வேலையில் நடக்கும் அரசியல் எல்லாம் ஒன்றும் இல்லை என்னும் அளவு இருந்தது . ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டு கொண்டு, ஒருவர் கீழே விழுந்தால் சந்தோஷ பட்டு கொண்டு, வெளியே நன்றாக நடித்து கொண்டு உள்ளே அத்தனை வஞ்சமும் வைத்து அரசியல் செய்த மக்களை பார்த்து நொந்து போய் வேறு வழி இல்லாமல் வேலை விட்டு வர வேண்டிய நிலை. உள்ளே அப்படி ஒரு வலி. இன்னும் நினைத்தால் மனது வலிக்கும்.

ஆனால் என்னுடன் அங்கு வேலை பார்த்த ஒருவரிடம் கடந்த வாரம் பேச நேர்ந்தது. அவர் சொன்னது," நீங்கள் வெளியே வந்த நேரம் தான் சரியான நேரம், அதற்க்கு பிறகு அந்த ப்ராஜெக்ட் மூடி விட்டார்கள் அதில் வேலை செய்த பலரும் வேலை இழந்து விட்டனர்" என்றனர். அட கடவுளே, என்ன விளையாட்டு இது என்று நினைக்க தோன்றுகிறது.

அதே போல, என்னுடன் எப்பொழுதோ வேலை பார்த்த ஒருவர் தற்போது வேறு நாட்டில் பேராசிரியர் ஆக இருக்கிறார். அவருடன் நான் செய்த ப்ராஜெக்ட்டை  (நானே மறந்து போன ஒன்று) பப்ளிஷ் செய்து இருக்கிறார், என்னையும் ஒரு சக ஆசிரியர் ஆக அந்த ஆர்டிகளில் பார்த்த போது, "அட, நான் எப்பொழுதோ செய்த ஒரு உதவிக்கு , அவர்கள் நமக்கு நன்றி கடன் செய்கிறார்களே "என்று ஆச்சரிய பட தோன்றியது.

என் அம்மா ஒன்று சொல்லுவார்கள், "என்ன தான் உருண்டு பிரண்டாலும்  ஓட்டுற மண்ணு தான் ஓட்டும்" என்று. அதாவது உங்களுக்கு என்று சில விசயங்கள் விதிக்கப்பட்டு இருந்தால் அவை எப்படியும் உங்களை வந்து சேரும். உங்களுகென்று விதிக்கபடாத சில நீங்கள் எவ்வளவு விரும்பி சென்றாலும் அல்லது முயற்சி செய்தாலும் கிடைக்காது.
அதில் எதோ காரணம் இருக்கும் ஆனால் என்னவென்று அப்பொழுது புரியாது ஆனால் நடக்கும் எல்லாவற்றுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணம் வந்து விட்டால் ஏமாற்றம் வரும் போது தாங்கி கொள்ள முடியும் .



"நீ  வேண்டுவதை கடவுள்/இயற்க்கை கொடுப்பதில்லை, மாறாக உனக்கு தேவையானதை அவர் தர மறப்பதில்லை. "

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை. ஏன் கிடைக்கவில்லை என்று அலுத்து, அழுது புலம்பி ஆர்பரிப்பதை விட, நமக்கு தேவையானது எப்படியாவது நம்மிடம் வந்து சேரும் என்று அமைதியாக இருப்பது சிறந்தது என்று புரிகிறது. திரும்ப ஒருமுறை பாட்டை பாடி பார்கிறேன். "நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,  நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை"

நன்றி.



Friday, October 9, 2015

அமெரிக்காவை எப்படியெல்லாம் பிரிக்கலாம்?

1955 இல் மொழிவாரியாக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாநிலங்கள் மொழி வாரியாகவோ அல்லது பொருளாதார காரணங்களுக்காகவோ பிரிக்க பட்டு கொண்டு இருக்கின்றன.

அமெரிக்கா வே யுனிடெட் ஸ்டேட்ஸ் என்று, அனைத்து மாநிலங்களும் இணைந்த ஒன்று தான். ஆனாலும் எப்படியெல்லாம் அமெரிக்கா பிரிக்க படலாம், என்று வாஷிங்டன் போஸ்டில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிரப்படுகிறது.


photos fromwww.atlasofprejudice.com


உதாரணமாக 12 வகையாக அமெரிக்காவை பிரிக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. அதில் எனக்கு பிடித்த சில வகைகள் இங்கே.

1. முதல் வகையில், அவர்கள் கூறுவது மூன்று வகையாக அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதில் கிழக்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் எனவும், மேற்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் இன்பத்தை விரும்பும் மக்கள் எனவும், இடையில் இருக்கும் மக்கள் எல்லாம் பழைமை விரும்பும் traditional மக்கள் என்றும் பிரிக்கலாம்.

இதில் முக்கியமாக நோர்த் ஈஸ்ட் மாநிலங்களை அதில் உள்ள  ஐவி லீகு கல்லூரிகள், பல்கலை கழகங்களை வைத்து வைத்து இப்படி குறிப்பிடுகிறார்கள் என்றும் மேற்கில் ஹாலிவூட் இருப்பதாலும், மத்திய மாகாணங்கள் எல்லாம் பழமை விரும்பிகளாக இருப்பதால் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று  நினைக்கிறன்.


2. இரண்டாவது வகையில், மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை வடக்கு மாநிலங்கள் எல்லாமே மைக்ரோ வேவ் வைத்து சமையல் செய்பவர்கள், தென் கிழக்கு மாகணங்களில் ஒரு சில barbecue செய்பவர்கள்மற்றும் தென் மாகாணங்கள் பல டீப் ப்ரை செய்யும் மாகாணங்கள்.

உண்மையில் நானே ,நோர்த் கரோலினாவில் இருந்து அட்லாண்டா வந்த சமயத்தில் வேலை பார்க்கும் மக்களுடன் ஒரு ரெஸ்டாரென்ட் சாப்பிட சென்று அங்கு ஐஸ் கிரீம் ஐ மாவில் தோய்த்து ப்ரை செய்து கொடுத்தார்கள். அதில் வடிந்த எண்ணையை பார்த்தவுடன் அடப்பாவிங்களா ஐஸ் கிரீமை எப்படிடா ப்ரை செய்வீங்க என்று எண்ணியது நினைவுக்கு வந்தது.


3. மூன்றாவது வகையாக அமெரிக்கா இரண்டு வகையில் பிரிக்கப்படலாம். வட மேற்கு, வட கிழக்கு மத்திய பகுதி எல்லாமே "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்" என்று தங்களை நினத்து கொள்பவர்கள் என்று வைத்து கொண்டு, தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மக்களாகிய பெரும்பாலோர் "பைபிள் பெல்ட்" மக்கள் என்று குறிபிடுகிறார்கள்.அதாவது ஏசுவே சகலமும், என்று நெட்டுரு தட்டும் மக்கள்.

பைபிள் பெல்ட்மாநிலங்களில்  வசிக்கும் பல மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். உங்கள் வீடுகளை வந்து சிலர் கும்பலாக வந்து தட்டுவார்கள். "ஏசுவே பரம பிதா அவரை பற்றுங்கள், உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இதனை படியுங்கள் என்று ஒரு சீட்டை நீட்டுவார்கள்." அதுவும் நீங்கள் கிருஸ்துவர் இல்லை என்றால் நிறைய பேர் வந்து அவர்களுடைய சர்சில் உங்களை இழுக்க பார்பார்கள்.அமெரிக்கா வந்து என்னுடைய முதல் இப்படி அனுபவம்  முந்தைய வேலை பார்த்த இடத்தில் நடந்தது. ஒருவர் பிரசங்கி போல, வந்து ஏசுவே பரம பிதா என்று பிரசங்கம் ஆரம்பித்து விட்டார். பின்னர் அவரிடம் இருந்து கழண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

4. இந்த வகை மிக சுவாரசியம். இதில் 2 வகை மக்கள் இருப்பதாக கூறுகிறது. வடக்கு மற்றும் தெற்கு என்று இரு பிரிவுகள். அதில் வடக்கு மாநிலங்கள் பலவற்றில் இருக்கும் மக்கள் நாங்கள் நிற பாகுபாடு பார்ப்பதில்லை என்று வெளியில் காட்டி கொள்ளுவார்கள், ஆனால் உண்மையில் நிறைய பார்பார்கள்.  தெற்கு மாகான மக்கள் வெளிப்படையாக நிறப்பாகுபாடு காட்டுவார்கள். அது சட்ட விரோதம் என்று தெரிந்தாலும் பலர் மறைமுகமாக இதனை செய்வார்கள்.

5. இந்த கடைசி வகையில் இரண்டு வகையில் அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதாவது, வடகிழக்கு மேற்கு மாநிலங்கள்  மற்றும்  ஹோமோ செக்ஸ் மக்களை அங்கிகரித்தவை அதனால் அவை gay மாநிலங்கள் எனவும், மற்றவை ஏசுவே பரம பிதா அவரை பற்றினால் சொர்க்கம் அடைந்து விடலாம். gay மக்கள் எல்லாம் பாவிகள் என்று பிதற்றும் மக்களை கொண்டது அதனால். இந்த மாநில மக்கள் எல்லாரும் சொர்கத்தை அடைய போகிறவர்கள் என்பதால் அவர்களை ஒரு மாநிலமாக பிரித்து விடலாம் என்கிறார்கள்.

இன்னும் பல வகைகளில் பிரிக்கலாம் என்றாலும் மேலே குறிப்பிட்ட சில எனக்கு ரொம்ப சிரிப்பு வந்ததால் குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் பல, மொழி வாரியாக இல்லாமல், இன வாரியாக, வெள்ளைகள், மெக்சிகன்கள், கறுப்பின மக்கள் இருப்பதை வைத்து பிரிக்கலாம். எங்கெல்லாம் அதிகம் புயல் வீசும் எங்கெல்லாம் அதிகம் மழை பெய்யும் அல்லது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம் பிரிக்கலாம் என்று பார்க்கும் போது, எல்லா நாடுகளையும் போல அமெரிக்காவும் பல வகைகளில் வேற்றுமை கொண்டது. ஆனாலும் இங்கே சட்டமும், போலிசும் அதிக பவர் வைத்து இருப்பதால் இன்னும் உடைந்து  பிரிக்கபடாமல் இருக்கிறது என்று நினைக்கிறன்.

நன்றி.

Thursday, October 8, 2015

பதின்ம வயதும், SMSம், பேச்சும், மொழியும்

மிடில் ஸ்கூல் டீச்சர் ஒரு அம்மாவை ரொம்ப நாளாக தெரியும் எப்பொழுதாவது சந்தித்து பேசி கொள்ளுவது உண்டு. அப்படி ஒரு தடவை எதேச்சையாக சந்தித்து பேசி கொண்டு இருந்த பொது அவர் தெரிவித்த சில விஷயங்கள் ஆச்சரியத்தை வரவழித்தன. அவர் 7ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை ஆக இருக்கிறார். அவர் குறிப்பிட்ட சில பதின்ம வயது பிள்ளைகளின் பிரச்சனைகள் மற்றும் peer பிரஷர். அது எப்படி குழந்தைகளின் கல்வியினை பாதிக்கிறது என்பது குறித்த சில விஷயங்கள் இங்கே.

பிள்ளைகள் மிடில் ஸ்கூல் போய்  விட்டார்கள் என்றாலே நிறைய பெற்றோருக்கு பயம் வந்து விடும். ஏனெலில் பதின்ம வயது ஆரம்பிக்கும் நேரம் அதனால் நிறைய ஹார்மோன் ரஷ் எனப்படும் தொல்லைகள் அதிகம் ஆரம்பிக்கும். தன்னை அழகுபடுத்து பார்க்க வேண்டும் என்று பல பெண் குழந்தைகள் முயல ஆரம்பிக்கும் காலம். அதே போல  பையன்களும் , நான் ஆண் இன்னும் குழந்தை அல்ல என்று ஜிம் செல்லுவது, கடினமான காரியங்கள் செய்வது என்று ஆரம்பிப்பார்கள். முக்கியமாக தான் இன்னும் குழந்தை அல்ல, வளர்ந்து விட்டேன் என்று ஊருக்கு தெரிவிக்க நினைப்பார்கள். இது ஒரு குழப்பமான பருவம், எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத பருவம். இந்த காலத்தில் பெற்றோர் தன்னுடைய பிள்ளைகளிடம் நண்பர்களாக பழக ஆரம்பிக்க வில்லை அல்லது முயலவில்லை எனில், உங்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 இந்த குழப்ப நிலையில் சந்தடி சாக்கில் நுழைந்த ஒரு விஷயம் தான் "செல்போன்" தற்பொழுது, எலிமெண்டரி பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகள் கேட்பது, எனக்கு செல் போன் வேண்டும் என்பது தான். என் தோழியின் மகள் தற்போது 6 ஆம் வகுப்பு சேர்ந்து இருக்கிறார். எப்பொழுது நாங்கள் சந்தித்தாலும், தன் அம்மாவிடம் "செல் போன் வாங்கி தார் சொல்லுங்கள் ஆண்டி" என்று ஒரு பாட்டு ஆரம்பிப்பாள். இது ஒரு வகை "peer pressure". அதுவே, bullying க்கு ஒரு காரணியாக எல்லாரும் ராக் செய்வார்கள் என்று பயந்து வைத்து கொள்ள விரும்புவது.

சரி, போய் தொலைகிறது என்று பல பெற்றோர் செல்போன் வாங்கி தருகிறார்கள். அது வந்தவுடன் முதலில் இந்த பதின்ம வயதினர் ஆரம்பிப்பது "SMS". கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு குறைந்தது 100 SMS செய்திகள் அனுப்புவதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது.



photo courtesy "Google images"

இப்படி SMS யினால் விளையும் ஒரு முக்கிய பிரச்னை "சுருக்கு மொழி".  ஜியார்ஜ் ஒர்வேல் அவர்களின் 1984 படித்தவர்களுக்கு ஒரு வார்த்தை மிக பிரபலம் அது "Newspeak" அதாவது பத்திகையில் பிரசுரிக்க என்று எப்படி ஆங்கில வார்த்தைகள் மாற்றி அமைக்க படுகின்றன என்பதனை அவர் குறிப்பிட்டு இருப்பார். அதாவது பத்திரிக்கைக்கு என்று ஒரு சில வார்த்தைகள் உருவாக்கப்படும். உதாரணமாக "thoughtcrime ", "duckspeak"..போன்ற ஒரு சில.

ஆனால் இப்பொழுது "textspeak" என்ற ஒன்று SMS அல்லது குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் மத்தியில் மிக பிரபலம். "LOL", "Gr8", "GM","B4", "S", "ROFL", "BFN".....இவை எல்லாம் தெரியாதவர்கள் இப்பொழுது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எல்லார் கையிலும் செல்போன் இருக்கும் இந்த காலத்தில் எப்படி மொழியை சுருக்குவது என்று யாரோ கண்டு பிடித்த இவை எல்லார் கைகளிலும் கிடைத்து சின்னா பின்னமாகி கொண்டு இருக்கிறது.

photo courtesy "Google images"

அதனால் என்ன பிரச்சனை என்று கேட்பவர்களுக்கு. எல்லாவற்றையுமே சுருக்கி பழகி கொண்ட இவர்கள்  உண்மையான மொழியில் அவற்றை எப்படி குறிப்பிடுவது என்று தெரியாமல் ஸ்பெல்லிங் தெரியாமல் முழிக்கிறார்கள். நிறைய யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் கஷ்டப்படுகிறார்கள். சரியான வாக்கிய உபயோகம் தெரிவதில்லை. சரியான noun, verb, preposition எல்லாம் உபயோகிக்க தெரியாமல் தடுமாறுகிறார்கள். இது ஆங்கிலத்தில் என்று மட்டும் இல்லை. தமிழில் கூட எல்லாரும் ஆங்கில எழுத்துக்களை வைத்து எழுதுவதால் எந்த ல், ழ், ள் போடா வேண்டும். அல்லது ன், ண் வித்தியாசம் என்ன, எப்பொழுது ந் போடவேண்டும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கும் எழுத்துக்களை வைத்து ஒரு கூட்டான் சோறு மொழி உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த பிரச்னை ஒரு உலகளாவிய பிரச்னை. எல்லா மொழிக்கும் இது பொருந்தும். அது இந்திய மொழிகளுக்கு மட்டும் அல்ல உலக மொழிகளும் இந்த பிரச்சனையை சந்தித்து கொண்டு இருகின்றனர். ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டு வராபடின் எந்த மொழியும் பிழைக்காது என்பது மட்டுமே என் எண்ணம். தகவல் தொழில்நுட்பம் தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறன்.

நன்றி.



Tuesday, October 6, 2015

இந்தியர்கள் அமெரிக்கா வந்த பிறகு இந்தியா திரும்ப யோசிப்பது ஏன்?


photo courtesy thanks to Google images

இது பழைய டாபிக் ஆக இருக்கலாம். எனக்கு தெரிந்து இங்கு செட்டில் ஆகி 10-15 வருடங்களுக்கு பிறகு இந்தியாசென்ற   3 குடும்பங்களில் இரண்டு   திரும்பி வந்து விட்டனர். ஒன்று  அங்கேயே தங்கி விட்டனர். அவர்களில் இங்கு வந்து திரும்பி செட்டில் ஆன குடும்பத்துடனும் அங்கே இருக்கும் குடும்பத்துடனும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் சொல்லிய சில விஷயங்கள் இங்கே.

எதற்காக அமெரிக்கா வந்த பிறகு இந்தியா திரும்ப நினைகிறார்கள்?

பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர் பெரும்பாலும் எடுக்கும் ஒரு முடிவு இது. எங்கே பெண்கள் வளர்ந்து யாரையாவது கூட்டி கொண்டு வந்து விடுவார்களோ என்று நினைத்து பயந்து இந்தியா சென்று விடலாம். அங்கு சென்றாலாவது நம் கலாச்சாரத்துடன் நம் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் வளரும் என்று இந்தியா திரும்ப நினைகிறார்கள்.

அடுத்த முக்கிய காரணமாக வயதான பெற்றோரை பார்த்து கொள்ள இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைகிறார்கள். முக்கியமாக நானே, என் அப்பாவின் மறைவுக்கு அம்மாவை கவனித்து கொள்ள அருகில் இருக்க என்று  இந்தியா திரும்பி விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இன்னும் ஒரு சிலர் நாம் இந்தியாவில் சென்று நாம் படித்ததை வைத்து தொழில் தொடங்கலாம் என்றும் சென்று இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இங்கே பிறந்த ஊர் மண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம் என்று திரும்ப நினைகிறார்கள்.


 என்ன பிரச்சனைகள் எதிர்கொள்ள,சமாளிக்க வேண்டும் ?


முதல் பிரச்னை, வேலை கிடைக்குமா? கிடைத்தாலும் இங்கே இருப்பது போல வொர்க் லைப் பாலன்ஸ் இருக்குமா? உதாரணமாக இந்தியாவில் இருந்து இங்கே சாப்ட்வேர் துறையில் வந்து செட்டில் ஆன பலரும் கணவன் மனைவி இருவரும் சாப்ட்வேர் துறையில் இருப்பின் மறுபடியும் அங்கே சென்று செட்டில் ஆவது என்றால் குறைந்தது 10-12 மணி நேர வேலை, காலையில் சென்றால் மாலையில் கூட சீக்கிரம் வர முடியாத நிலை என்று வொர்க் லைப் பாலன்ஸ் இல்லாமல் இருப்பது. குழந்தைகள் கூட ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் ஒரு மணி நேரம் கூட முழுதாக செலவழிக்க முடியாமல் இருப்பது.

குழந்தைகள் சிறு குழந்தைகளாக இருக்கும் போதே இந்தியா திரும்பி விட வேண்டும் என்று நினைபவர்கள் சரியான நேரத்தில் முடிவெடுத்தவர்கள் என்று நினைக்கிறன். ஏனெனில் சிறிது வளர்ந்த பிறகு இங்கே பழகிய பிறகு இந்தியா திரும்பும் போது அவர்கள் அட்ஜெஸ்ட் ஆக கஷ்டபடுவார்கள். ஏனெனில், குழந்தைகள் இங்கே படிக்கும் சிலபஸ்க்கும் அங்கே இருக்கும் சிலபஸ்க்கும் நிறைய மாற்றங்கள் சந்திகிறார்கள். நிறைய கேள்வி கேட்டு, புரிந்து படித்த பிள்ளைகள் அங்கே சென்று கேள்வி மேல் கேள்வி கேட்டாலோ பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். அமெரிக்கன் ஸ்கூல் இன்டெர் நேஷனல் சிலபஸ் என்று இருந்தாலும் பெரும்பாலும் அங்கே நிறைய பேர் பிள்ளைகளை சேர்க்க முடியாமல் இருப்பது அல்லது தூரம் அதிகமாக இருப்பது அதுவும்  டிராபிக், ஸ்கூல் பஸ். இதனாலேயே நிறைய பேர் முக்கியமாக பெண்கள் வேலையை விட வேண்டிய சூழல் வருகிறது.

சாப்ட்வேர் தவிர மற்ற துறைகள் எனில் சொல்லவே வேண்டாம். வேலை கிடைப்பது கடினம். உதாரணமாக ஆராய்ச்சி துறையை சொல்லலாம் நிறைய பேர் PhD முடித்து postdoc படிப்புக்காக இங்கே வருகிறார்கள். அவர்கள் இந்தியா திரும்ப நினைக்க கூட மாட்டார்கள். ஏனெலில் முதலில் இந்தியாவில் பல்கலைகழகங்களில் நடக்கும் பொலிடிக்ஸ். காசு கொடுத்தால் Professor ஆகி விடலாம். அதற்க்கு PhD யோ இல்லை வெளிநாட்டு Postdoc ஒ தேவையே இல்லை. இது என்னுடன் படித்து பெற்றோர்களின் உடல் நலத்திற்க்காக இந்தியா சென்று செட்டில் ஆன ஒருவர் கூறியது.

தனியாக கம்பனி ஆரம்பிக்கலாம் என்றால் மறந்து விடுங்கள். முதலில் ரேகுலேசன் என்று உங்கள் உயிரை வாங்குவார்கள். பின்னர் எல்லாரும் ஏதாவது எதிர் பார்பார்கள். கிட்டத்தட்ட சிவாஜி பட நிலைமையில் உங்கள் நிலைமை ஆகி விடும்.

சரி, பல்கலை கழக பேராசிரியர் ஆக முடியாது, கம்பனியும் ஆரம்பிக்க முடியாது, ஏதாவது இருக்கும் கம்பெனியில் சேர்ந்து விடலாம் என்றால், இந்தியாவில் அப்படி கம்பனிகள் நிறைய இல்லாமல் இருப்பது முதல் காரணம். அப்படியே இருப்பினும் அதில் உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் peanut அளவு மட்டுமே.


குடும்ப , சமூக சூழல் 

அடுத்த முக்கிய அட்ஜஸ்ட்மென்ட் என்னவென்றால், நண்பர்கள் இல்லாமல் இருப்பது. இதனை நான் சொன்னவுடன் சிலர் "என்னது இந்தியாவில நண்பர்கள் இல்லையா? என்ன சொல்லுறீங்க" என்பார்கள். உண்மை அதுதான். உங்களுடன் கூட படித்த கல்லூரி நண்பர்கள் உங்களை போலவே வெளிநாட்டுக்கு அல்லது வெளி மாநிலத்திற்கு மாறி இருப்பார்கள். அவர்களை எப்போதாவது ஒரு முறை சந்திக்க முடியுமே தவிர, எப்பொழுதும் உங்கள் கல்லூரி காலம் போல சந்திக்க முடியாது. அல்லது அவர்கள் இந்தியாவிலேயே இருப்பவர்கள் எனில் கட்டாயம் நீங்கள் 15-20 வருடங்களுக்கு முன்பு சந்தித்தவர்கள் இல்லை அவர்கள் என்பதை நீங்கள் உணருவீர்கள். சூழ்நிலை கட்டாயம் அவர்களை மாற்றி இருக்கும். இங்கேயாவது ஒரு சில குடும்பங்கள் உங்கள் நண்பர்கள் என்று கூறி கொள்ள உதவி கேட்டு கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் அது எனக்கு தெரிந்து இல்லவே இல்லை.

அடுத்தது சொந்தங்கள் இப்பொழுதும் அதே போல இருப்பார்கள், நீங்கள் சிறு வயதில் இருந்ததை போல இருக்கலாம் என்றால் மறந்து விடுங்கள். நீங்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா சென்று செட்டில் ஆக நினைகிறேன் என்று உங்கள் சொந்தங்களிடம் சொல்லி பாருங்கள் அவர்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று. உங்களை இப்பொழுது மதிப்பது போல நீங்கள் இந்தியா சென்றவுடன் மதிக்க மாட்டார்கள். தற்போது இந்தியாவில் பணம் பணம் பணம் மட்டுமே பிரதானம். பணம் இருந்தால் சொந்தங்கள் உங்களுடன் ஒட்டி கொண்டு இருப்பார்கள் இல்லையேல்
நீ யாரோ அவர்கள் யாரோ.

உதாரணமாக என் அண்ணன் தன்னுடைய குடும்பத்துடன் மதுரையில் இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தை தவிர அவருக்கு வேறு யாரும் சொந்தம் இல்லை நட்பு இல்லை. ஏன் என்று கேட்டால், எல்லாரும் ஏதாவது நம்மிடம் எதிர்பாத்து கொண்டே இருக்கிறார்கள் கொடுத்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள் இல்லையேல் நம்மை பற்றி குறை கூறுகிறார்கள் என்றார். எல்லாரும் ஹாய், பாய் என்றளவில் மட்டுமே சொந்தங்களும் நட்புகளும் இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தை தவிர.

அடுத்து முக்கியமாக பெண்கள் சந்திப்பது. இங்கே பல ஆண்டுகள் மாமியார், நாத்தனார் என்று சொந்தகள் கூட இல்லாமல் இருந்து விட்டு அங்கே சென்றதும் அவர்களின் அடிக்கடி சந்திப்பு பல நேரங்களில் பிரச்சனைகளில் கொண்டு வந்து விடுகிறது. அதனால் பல நேரங்களில் சொந்த நாட்டில் இருப்பினும் நெருங்கிய சொந்தங்கள் அருகில் இருப்பதை யாரும் முக்கியமாக பெண்கள் விரும்புவதில்லை. 

கலாச்சாரம்.

முக்கியமாக பெண் குழந்தை வைத்து இருக்கும் பெற்றோர் இங்கிருந்து அங்கு சென்ற பிறகு சொன்ன விஷயங்கள். தாய் மொழி பேச்சளவில் மட்டுமே இருப்பது. பல பள்ளிகள் தமிழை முக்கிய பாடமாக அறிவிக்காமல் இருப்பது. டிவி, சினிமா, செல் போன் போன்றபலவும் "எல்லாவற்றையும்" சொல்லி தருவது.  இங்கே பள்ளிகளிலேயே பாலியல் கல்வி புகட்டி விடுவார்கள். அங்கே அதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் நண்பர்கள் தோழிகள் மூலம் அறிந்து கொள்ளுவது. என்று தற்போது கலாசார விசயத்தில் இங்கே இருப்பதற்கும் அங்கே செல்வதற்கும் மிக அதிக வேறுபாடுகள் இல்லாமல் இருப்பது.  என்ன ஒரு அட்வண்டஜ் என்றால், ஏதாவது தப்பி தவறி நடந்தால் அடித்து, உதைத்து வீட்டில் பூட்டி வைத்து கல்யாணம் செய்து கொடுத்து விடலாம். யாரும் ஏன்  என்று  கேட்க மாட்டார்கள். இங்கே இருப்பது போல பெண்களுக்கு ப்ரோடேக்சன், பாதுகாப்பு  என்பதெல்லாம் இல்லாமல் இருப்பது. என்று பயம் தற்போது நிறைய பெண் குழந்தை பெற்றவர்களுக்கு வர ஆரம்பித்து இருக்கிறது.

அதனால் முடிவாக அவர்களிடம் கேட்ட பிறகு நான் கற்று கொண்டது, எல்லாமே "இக்கரைக்கு அக்கறை பச்சை தான்" அதனால் வயதான பெற்றோர் உங்களுக்கு இந்தியா திரும்ப ஒரு காரணமாக இருப்பின், அவர்களை இங்கே அழைத்து வந்து விடுங்கள். நிறைய இந்தியர்கள் இருக்கும் ஒரு ஊருக்கு குடி பெயர்ந்து விடுங்கள். நீங்கள் இந்தியாவை மிஸ் செய்ய மாட்டீர்கள், உங்களின் பெற்றோரும் மிஸ் செய்ய மாட்டார்கள்.  கலாச்சார விசயத்தில் கூட நிறைய இந்தியர்கள் இங்கே வந்த பிறகு இந்தியாவில் இருந்ததை விட  அதிக மொழி, கலாச்சார பற்று கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. நாம் இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்வதை காண முடிகிறது. அவ்வப்போது இந்தியா சென்று வாருங்கள். அதனால் சொந்தங்களும் நண்பர்களும்  சந்தோசப்படுவார்கள், எப்பொழுதும் தொலைவில் இருப்பதே சந்தோசம். அருகில் நெருங்க நெருங்க அவஸ்தை தான்.


டிஸ்கி
இது  என் ஒரு சில நண்பர்களின் வாழ்கையில் இருந்து எடுக்கப்பட்டது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

Sunday, October 4, 2015

70-80, தற்போது: பெண்களும், சுதந்திரமும்

கனடா  பயணத்தில் ஒரு நாள்,  நயாகராவில் நன்கு சுற்றி விட்டு சரியான பசியுடன், களைப்புடன்  ரெஸ்டாரென்ட் அதுவும் இந்தியன் ரெஸ்டாரென்ட் தேடி கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு   உணவகம் கண்ணில் பட, அப்பாடா என்று ஒரு வழியாக அமர்ந்து உணவு ஆர்டர் செய்து விட்டு வெயிட் செய்து கொண்டு இருந்த நேரம், பக்கத்தில் இரண்டு சிறு வயது பையன்கள் இரண்டு பேரும் அவர்களின் அம்மாக்கள் இரண்டு பேரும் மற்றும் இரண்டு சிறு வயது பெண்களும் அமர்ந்து இந்திய சினிமா 70,80 களில் மற்றும் தற்பொழுது என்று சுவாரஸ்யமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.

பையன்கள், எப்படி ஓவர் டிராமாடிக் ஓவர் ஆக்டிங் ஆக இருந்தது பழைய படங்கள், என்று கலாய்த்து கொண்டு இருந்தனர். பெண்களும், அப்பொழுது எப்படி பெண் அடிமை தனம் இருந்தது அது எப்படி பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பாடம் எல்லாம் சினிமாவில்  எடுக்கப்பட்டது என்று சொல்லி கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த அம்மா கேட்டார், நீங்கள், "அவள் அப்படித்தான்", "மனதில் உறுதி வேண்டும்", "அவள் ஒரு தொடர்கதை", கல்யாண அகதிகள்",  போன்றவற்றை பார்த்ததுண்டா? அவற்றை பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்". என்றார்.

அவர் சொன்னதை நான் அசை போட்டு பார்த்தபோது தோன்றியது இது. உண்மையை சொன்னால் 70 களின் இறுதியில் தொடங்கி 80 களில் கூட நிறைய பெண்களை மையபடுத்திய கதைகளை கொண்ட படங்கள் நிறைய வந்ததுண்டு. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா, பாரதிராஜா ஏன் பழைய பாக்யராஜ் படங்கள் கூட பெண்களை மையபடுத்தி நிறைய கதைகள் இருக்கும். உண்மையில் ரொம்ப அட்வான்ஸ் கதைகளன் கொண்டவை இவை எல்லாம்.

இதனை பற்றி என் கணவரிடம் பேசி கொண்டு இருந்தபோது, அவர் கூறியது இது. "70-80 களில் எல்லாம் பெண்கள் சுதந்திரம் என்பது பேச ஆரம்பிக்க பட்டது, அதனை வலியிறுத்த பெண்கள் முன்னேற வேண்டும் என்று பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது இந்திய பெண்கள், சுதந்திரம் என்ற பெயரில் ஆடை உடுத்துவதும், எல்லாவற்றுக்கும் சண்டைக்கு நிற்பதும், நீயா நானா என்று போட்டி போடுவது என்பது போன்ற ஒரு சில வட்டத்திற்குள் அடங்கி விடும்.  சொல்ல போனால் நிறைய இந்திய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாது?"என்றார் .

இதனை கேட்ட போது எனக்கு கோவம் வந்தது. 2010 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் "பெண்கள் சுதந்திரம்" என்ற பெயரில் எழுதிய கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வந்த எதிர் வினைகள் போன்றவையும் ஞாபகம் வந்தன. ஆனால் உண்மையில் இந்திய பெண்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே இருக்கிறார்களா,அல்லது சுருக்கி கொள்ள விளைகிறார்களா? எத்தனை பேர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர விரும்புவார்கள் என்று பல எண்ணங்கள். women empowerment என்ற பெயரில் தீபிகா படுகோனே செய்த விளம்பர ஸ்டன்ட் போன்றவையும் நினைவிற்கு வந்தது. உண்மையில் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன? பல கேள்விகள் என்னுள்ளே.

அப்பொழுது தற்செயலாக என்னுடைய ஆபிசில் ஒன் ஆன் ஒன் எனப்படும் மீட்டிங் இல் என்னுடைய மேனேஜர் இடம் பேச நேர்ந்தது. 50 களின் இறுதியில் இருக்கும் வெள்ளை இன பெண் அவர். ஒரு பெண் IT டிவிசன் இல் டைரக்டர் ஆக இருக்கிறார். சாதாரணமாக பேசி கொண்டு இருந்த போது அவர் குறிப்பிட்டது இது, "I'm the only women director, heading an IT division, its very unusual for a women to head development divison, many women prefer to go into the HR managerial route" என்று குறிபிட்டார். அதாவது, ஒரு பெண் அதுவும் சாப்ட்வேர் வேலையில் டெவெலெபெர் ஆக வாழ்கையை ஆரம்பித்து பின்னர் டைரக்டர் ஆவது என்பது சாதாரணமல்ல. பொதுவாக பெண்கள்,HR  மேனேஜர் போன்றவற்றை மட்டுமே விரும்புவார்கள். உண்மையை நோக்கினால், ரொம்ப முன்னேறிய நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் ஒரு சில வேலைகள் மட்டுமே  பெண்கள் prefer செய்கிறார்கள். "டீச்சர், நர்ஸ், HR, ப்ரொண்ட் ஆபிஸ்,மார்க்கெட்டிங்,  IT துறை என்றால்  சாப்ட்வேர் டெஸ்ட்டர், HR மேனேஜர், பிசினெஸ் அனலிஸ்ட்"  போன்ற சில. மற்ற துறைகளில் பெண்கள் கால் பதித்து இருந்தாலும் பெரும்பாலான பெண்களாக prefer செய்வது என்பது இது போன்ற ஒரு சில துறைகள் ஆக மட்டுமே இருக்கும்.

இந்திய பெண்கள் எப்பொழுதும் தங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று நினைத்து இருந்த நான், பொதுவாக உலகமெங்கும் உள்ள பெரும்பான்மை  பெண்கள் தங்களை ஒரு வட்டத்திற்குள் மட்டுமே வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படி வைத்து கொள்ள விரும்பும் மக்களின் சதவீதம் 1970-80 களில் ஏற்பட்ட பெண்கள் சமஉரிமை போராட்டத்திற்கு பிறகு  குறைந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. தாங்களும் எல்லா துறைகளும் தேர்ந்தெடுக்கலாம், கால்பதிக்கலாம் சாதிக்கலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சினிமா துறையை பொருத்தவரை, நிறைய மாற்றங்கள். ஹாலிவூட் படங்கள் நிறைய பெண்களை சுற்றி நகரும் கதைகள் என்று நிறைய வருகிறது. சொல்ல போனால், பாலிவூட் கூட தற்பொழுது  கஹாணி, queen என்று பெண்கள் சுற்றி நகரும் கதைகள் வர தொடங்கி நல்ல மாற்றத்தை தருகின்றன. ஆனால் தமிழ் சினிமா மட்டுமே தான் ரிவேர்ஸ் டைறேக்ச்ன் இல் பயணித்து, பெண்கள் என்றால் லூசு, தனியாக முடிவெடுக்க தெரியாதவர்கள், ரெண்டு பாட்டு க்கு வந்தால் போதும். ஆண்களை எப்பொழுதும் ஏமாத்துவார்கள். என்று ஒரு  வட்டத்தை உண்டாக்கி அதனை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள்.

70, 80 களில்  10 படங்கள் வந்தால் அவற்றில் குறைந்தது 2-3 படங்கள் பெண்களை முன்னிறுத்தி அல்லது பெண்களை சுற்றி நடக்கும் கதை களன் கொண்டவை. இப்பொழுது 100 படங்கள் வந்தால் அதில் 1, 2 கூட அப்படி இருப்பதில்லை. 30 வருட தலைமுறை இடைவெளி இது. ஆனால் ஏன் இந்த நிலை. தற்போதைய தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா?.

தற்போது யாருக்காக திரைபடங்கள் எடுக்க படுகின்றன என்று யோசித்ததில், "காலேஜ் மக்கள்", "இளைய தலைமுறை" மக்கள் இவர்களுக்காகவே எடுக்க படுகின்றன. பெண்கள் எல்லாரும் டிவி சீரியல்களில் மூழ்கி விட்டனர். அவர்களை பொருத்தவரை. மாமியார், நாத்தனார், குடும்ப பிரச்னை எப்படி சமாளிப்பது எப்படி குழப்புவது என்பதிலேயே தன்னிறைவு அடைந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறன். அவர்களின் குறுகிய வட்டம் மட்டுமே போதும் என்று நினைத்து விட்டதாலே பெண்களும் சுதந்திரமும் முன்னிறுத்தி 70-80 களில் வந்த படங்கள் போல படங்கள் வருவதில்லை போலும். மக்கள் விரும்புகிறார்கள் என்று படத்தயாரிபவர்களும், டைரக்டர்களும் சொல்கிறார்கள். அப்பொழுது உண்மையில் பெண்களை முன்னிறுத்திய படங்களான, "மொழி, 36 வயதினிலே" போன்றவை வெற்றி பெறவில்லையா?, ஏன் இந்த பாகுபாடுகளோ, எப்பொழுது மாறுமோ தெரியவில்லை.

டிஸ்கி

இது திரைப்படங்கள் குறித்தும், பெண்கள் சுதந்திரம் குறித்தும் என்னுடைய கருத்துகள் மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

Friday, October 2, 2015

ஆஸ்துமாவும்-சிசேரியனும்

ஒரு அறிவியல் செய்தி படிக்க கேட்க நேர்ந்தது. ஒன்று எப்படி சிசேரியனில் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகம் வரும் என்பது குறித்தது.  

Bacteria under Microscope: Thanks to google images


ஆஸ்துமாவும்-சிசேரியனும் 


இந்தியாவில் தற்போது நடக்கும் பல பிரசவங்கள் சிசேரியன் ஆக மட்டுமே இருக்கிறது. முதலில் டாக்டர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணுறாங்க என்று சொல்லுவார்கள். ஆனால், தற்போது மக்களே "நாங்க ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுறோம் நீங்க சிசேரியன் செய்துடுங்க" என்று சொல்லுகிறார்கள். அதாவது, குழந்தை பிறக்கும் நாள் நட்சத்திரம் எல்லாம் இவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். அப்படியே ஜாதகமும் தீர்மானித்து குழந்தையின் எதிர் காலத்தையும் தீர்மானித்து விடுகிறார்கள். 

இது ஒரு புறம் மும்முரமாக சென்று கொண்டு இருக்க, உண்மையில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் என்னவெல்லாம் இழக்கின்றன, சந்திகின்றன என்று பார்போம்  .


முதலில் சுகபிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகள் வெளியே வருவதற்குள் பெண்ணின் பிறப்பு உறுப்பில் சந்திக்கும் பாக்டீரியாக்கள் அவர்களின் உடல் எதிர்ப்பு சக்தி மற்றும் அலேர்ஜி குறித்து தீர்மானிக்கிறது. 
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் முதலில் இழப்பது   Lactobacillus என்னும் பாக்டீரியல் காலனி. இது குழந்தையின் GI tract எனப்படும் செரிமான பாதையை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. சிசேரியன் மூலம் பிறப்பதால் மனித தோலில் மற்றும் மருத்துவ மனையில் இருக்கும் Staphylococcus and Acinetobacter போன்ற கெடுதி விளைவிக்கும் பாக்டீரியாக்களை  முதலில் சந்திக்கிறார்கள். 

மேலும் தாய்பால் கொடுக்காமல் பார்முலா கொடுப்பது,சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு எல்லாம் அண்டிபயாடிக் எடுத்து கொள்ளுவது போன்றவையும்  இதனை மோசமாக்குகின்றன  என்றுதெரிவிகிறார்கள் .

முக்கியமாக 4 பாக்டீரியாக்கள் இதனை தீர்மானிக்கின்றன என்று மிக மதிப்புள்ள அறிவியல் பத்திரிக்கையான "Science" வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது.  3 வயதுக்குள் இந்த பாக்டீரியாக்கள் உணவிலோ அல்லது வேறு வகையிலோ உடலில்  சேர்த்து கொள்ளபடின், குழந்தைகள் ஆஸ்துமா போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று அது தெரிவிக்கிறது. 

அமெரிக்காவில் முக்கால் வாசி நேரம் சுக பிரசவத்திற்கு முயற்சி செய்ய சொல்லுவார்கள். ஆனாலும்,
மருத்துவ காரனங்களுக்காக ஒரு சிலருக்கு சிசேரியன் தவிர்க்க முடியாதது. உதாரணமாக, ப்ரீச் பேபி எனப்படும் தலை கீழாக குழந்தை இருக்கும் போது அல்லது பனிக்குடம் உடைந்த பிறகும் குழந்தை பிறக்க முடியாத நிலையில் இருக்கும் போது போன்ற ஒரு சில நேரங்களில். அப்படி ஏற்படும் சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதற்கான bacteriyal probiotic supplement கொடுப்பதன் மூலம் சிறு குழந்தை ஆஸ்துமா தவிர்க்கலாம்.  


photo courtesy : http://www.asthmaed.com/journal/2014/1/2/do-cesarean-sections-increase-atopy-and-asthma

ஆனால் மருத்துவ காரணம் இல்லாமல் ஜாதகத்துக்காக, நல்ல நேரத்திற்காக, அல்லது பணத்துக்காக என்று சிசேரியன் செய்வது மூலம் உங்கள் குழந்தைகளை நீங்களே உடல் நலம் இல்லாதவர்கள் ஆக்குகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள், உணருங்கள்.  

நன்றி.


References

Asthma: Undoing millions of years of coevolution in early life?SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307FS39

Early infancy microbial and metabolic alterations affect risk of childhood asthma SCIENCE TRANSLATIONAL MEDICINE : 307RA152


Neu J, Rushing J. Cesarean versus Vaginal Delivery: Long term infant outcomes and the Hygiene Hypothesis. Clinics in perinatology. 2011;38(2):321-331. doi:10.1016/j.clp.2011.03.008.

http://www.npr.org/sections/health-shots/2015/09/30/444746094/missing-microbes-provide-clues-about-asthma-risk


Thursday, October 1, 2015

இந்தியாவில் தொழில் தொடங்கிய ஒருவரின் புலம்பல்!


thanks to google images

நான் கம்பெனி தொடங்கி மூன்று மாதத்தில் கற்று கொண்டது என்ன?  என்ற கட்டுரையை லின்கெட்இன் இல் வாசிக்க நேர்ந்தது. அது கௌசிக் மித்ரா என்ற தொழில் முனைவோர் ஒருவரின் இந்தியாவில் தொழில் தொடங்கிய 3 மாத கால அனுபவம்.

1. பதில் கொடுப்பது: பொதுவாக இந்தியர்கள் உங்கள் மெயில், லெட்டெர்க்கு பதில் அனுப்ப மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு பதில் எழுதுவது என்பது பெரிய வேலை. பயம் அல்லது நேரமின்மை அல்லது விருப்பமின்மை காரணமாக இருக்கலாம். நீங்கள் திரும்ப ஞாபகபடுத்தி மெயில் அனுப்பினாலும் அது அவர்களின் குப்பை கூடைக்கு போகுமே தவிர வேறெங்கும் செல்லாது. அதனால், ஈமெயில் மூலம் ஒருவரை காண்டக்ட் செய்து விடலாம் பிசினெஸ் செய்து விடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைப்பை மறந்து விட்டு வேறு  வழி பாருங்கள்.

2. இலவச வேலை: இலவச வேலை செய்து தருவார்கள் என்று நம்மை அணுகுவது. உங்களுக்கு எங்களிடம் பிசினெஸ் வேண்டும் என்றால் இதனை முடித்து கொடு என்று ஆரம்பித்து இலவசமாக வேலை வாங்கி கொள்ளுவது. அல்லது ஸ்டுடென்ட்டை வைத்து முடிக்க பார்ப்பது அவர்களுக்கு சொற்ப சம்பளம் தருவது.

3. எல்லாவற்றிக்கும் நம் கலாச்சாரத்தை காரணம் காட்டுவது: உதாரணமாக நீங்கள் ஏதாவது வேலை நடக்க வில்லை, ஏன் நடக்கவில்லை என்று கேட்டால் அவர்கள். இது நம்ம ஊர்ல இப்படி தான் சார். எல்லாரும் மாமூல் கேட்பாங்க என்று ஆரம்பிப்பது. உடனே, பெரிய மந்திரியில் இருந்து..கடை நிலை ஊழியர் வரை எப்படி கேட்பார்கள் என்று ஆரம்பிப்பது.

4. உங்களுக்கு நண்பர்கள் பவெர்புல் வேலையில்  இருந்தால் அவர்கள் மூலம் காரியம் ஏதாவது சாதிக்கலாம் என்று நீங்கள் நினைத்து அணுகினால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். நண்பர்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே, அவர்களை பிஸ்னெஸ் பர்ட்னெர் ஆக்க நினைத்தால் உங்களுக்கு அது கெடுதலாக முடியும், நட்பும் பாழாய் போகும்.

5. நேரத்தின் மதிப்பு அறியாமல் இருப்பது. ஒவ்வொரு மணியும் பணம் அதனை இழுத்தடிப்பதால் எவ்வளவு நஷ்டம் என்று உணராமல் இருப்பது.

இது முக்கியமாக இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான அறிவுரைகள் என்றாலும், எல்லா பாயிண்டுகளும் எல்லா நாடுகளில் தொழில் தொடங்குவோருக்கும் பொறுந்தும்.

டிஸ்கி

மேற்கண்ட பல விஷயத்தை நானே இந்திய பல்கலை கழகத்துடன் ப்ராஜெக்ட் ஒன்று செய்யும் போது  நிறைய அனுபவித்து இருக்கிறேன். முக்கியமாக 1ஆவது, 3 ஆவது பாயிண்டும் 5தாவது பாயிண்டும்