Tuesday, September 12, 2017

நகையும், சுயமரியாதையும், கொசு(றும்)!!

ஒரு சில சமயம் சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை வாயடைத்து போக வைக்கும். பல நேரங்களில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தாலும் சமீபத்தில் முகுந்த் கேட்ட ஒரு கேள்வி என்னை யோசிக்க செய்தது. அது, Why do Women/Girls wear jewellery and makeup?
அதாவது "எதுக்கு மா நகை போடுறாங்க?, எதுக்கு பொண்ணுங்க மேக்கப் பண்ணுறாங்க?" இதுவே அந்த கேள்வி?.

எனக்கும் இதனை சார்ந்த ஒரு விஷயம் தோழிகளுடன் பேசும் போது கேட்க நேர்ந்தது. அதாவது, #100சாரீபாக்ட் எனப்படும் ஒரு தினமும் ஒரு புடவை அணிந்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் போடுவது. புடவை மட்டும் என்றில்லாமல் அதற்க்கு தேவையான அணிகலன்கள் (ஜிமிக்கி, தோடு, வளையல், நகை etc ) அணிந்து, அவை எங்கே வாங்கியது என்று டாக் செய்வது.
இதனை பலர் தினமும் செய்து வருவதாக அறிந்தேன். எதற்காக இவை செய்கிறார்கள்? என்ற கேள்வியும் வந்தது.

 சைக்காலஜியில் "மாஸ்லோவின் தேவைகள் பிரமிட்" என்ற ஒன்று உண்டு.  அதனை "Maslow's Hierarchy of Needs" என்றழைப்பர்.  அதன்படி, மனிதர்கள் தேவைகளை பல படிநிலைகள் கொண்டு பிரிக்கலாம். அவை,

1. அடிப்படை தேவைகள் (உணவு உடை உறைவிடம்)
2. பாதுகாப்பு தேவைகள் (வேலை, உடல்நிலை, வாழ்வில் ஸ்திரத்தன்மை)
3. அன்பு தேவைகள் (நண்பர்கள், குடும்பம், உறவுகள்)
4. சுயமரியாதை தேவைகள் (தன்னம்பிக்கை, சாதித்தல், அடுத்தவர் மதிக்கும்படி நடத்தை, தனித்தன்மை)
5.சுயம் அறிதல் (நன்னடத்தை, படைப்பாற்றல், தன்னிலை உணர்தல், வாழ்வின் நோக்கம் அறிய முற்படுத்தல்)



ஒவ்வொருவருடைய வாழ்வையும் எடுத்துக்கொண்டால் இந்த பிரமிடின் எதோ ஒரு படிநிலையில் நாம் இருக்கிறோம் அல்லது பல படிநிலைகளை தொட்டிருக்கிறோம் என்று அறியலாம்.

உதாரணமாக. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இரண்டாம் படிநிலையான வேலையை சார்ந்இருக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் பலரின் அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகின்றன.

வேலையும் இருந்து விட்டால், வாழ்வின் அடுத்த நிலையான, உறவுகளை தேட ஆரம்பித்து விடுகிறோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிலை பொருந்தாது, ஏனெனில், வேலைவெட்டி இல்லாதவன் தான் கதாநாயகன், ஆனால் உண்மை நிலவரம் வேறு, வேலை வெட்டி இல்லதவனை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

உறவுகளும் அமைந்த பின், அடுத்த நிலை பிரச்சனைகள் எட்டி பார்க்கின்றன, பெரும்பாலும் அவை, சுயமரியாதை சம்பந்தப்பட்டவை. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் 100க்கு 99 சீரியல்கள் இந்த சுயமரியாதை பிரச்னைனை கையிலெடுத்து, சமூக அந்தஸ்து, அடுத்தவர் மதிக்கும்படு நடத்தை,…என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுபவை.

சீரியல்கள் தவிர்த்து உண்மை நிலவரம் என்னவென்றால், தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும், அதற்கான சில ப்ரோடோகால் உண்டு, நகை போடுவது, மேக்கப் போடுவது, 100சாரீபாக்ட் எல்லாமே, தனக்கான, தன்னுடைய சுயத்துக்கான தேடல். இதனாலேயே, நிறைய வீடுகளில் சீட்டுப்போட்டு நகை வாங்குவது. வாயை கட்டி வயிற்றை கட்டி நகை வாங்குவது. கஷ்டப்படும்போது அடகு வைக்க என்று காரணம் சொல்லப்பட்டாலும், மற்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியான பல வீடுகளில் நகை என்பது, தன்னுடைய சுயமரியாதையை வளர்த்து கொள்ளவே. எனக்கு தெரிந்தே ஏழை குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில், நீங்கள் எவ்வளவு நகை அணிந்து இருக்குறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் இருக்கும் என்பதால்.

சுயமரியாதை என்ற ஒன்று மட்டுமே பலரை பலநிலைக்கு கீழே தள்ள வல்லது. பலர் கடன் வாங்கியாவது வீடு கட்டுவது, நகை வாங்குவது, பார்ட்டி வைப்பது எல்லாமே, தன்னுடைய ஸ்டேட்டஸ் ஐ வெளிக்காட்டி கொள்ள, ஏதோஒரு வகையில் தான் உயர்ந்தவன் அல்லது நானும் உங்களில் ஒருவன் என்று காட்டி கொள்ள. இப்படி வெட்டியாக சுயமரியாதை மட்டுமே கருத்தில் கொண்டு, உறவுகளை, வேலையை தொலைத்து அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்கள் எல்லாம் பந்தா பேர்வழிகள், "ரொம்ப நல்லவங்க சார்/மேடம்" நீங்க என்று சொல்லிவிட்டால் போதும், எதையும் செய்வார்கள்.

சுயமரியாதை என்பது ஒருவகை தேவை மட்டுமே, ஆனால் அதுவே வாழ்வின் முழுநோக்கமாக இருப்பின் இழப்பு மட்டுமே கிட்டும்.  வாழ்வின் முழு நோக்கம் தெரிய, அதீத சுயமரியாதை நிலையை விட்டு வெளிவரவும்.  நம்முடைய முழு திறமை வெளிப்படும்.

கொசு(று)

கொசுக்கடி பற்றிய ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கொசுக்கள் ஏன் ஒருசில மட்டும் அதிகம் கடிக்கின்றன?, இதுவே கட்டுரை

நீங்கள் ஒருபார்க்குக்கு நண்பர்களுடன்  சென்றுள்ளீர்கள், அங்கு உங்களை மட்டுமே கொசு பயங்கரமாக கடிக்கிறது, மற்றவர்களை அல்ல. ஏனென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?, ஏனெனில், கொசுக்கடிக்கும் உங்கள் ரத்தவகைக்கும் சம்பந்தம் உண்டு. கொசுக்கள் ஓரிரு ரத்தவகை மனிதர்களை அதிகம் விரும்பும். அதுவும், ஓ வகை மனிதர்கள் தாம் கொசுக்களின் முதல் விருப்பம். ஆனால் உங்கள் ரத்தவகை ஏ  எனில், உங்களை அதிகம் கடிக்காது.

நன்றி



3 comments:

Mahesh said...

manitharkalin thevaikalai vithu arumaiyaaka pathivu koduthatharkku nandri madam.

ninda naadkalukku piraku ningal mindum ezutha vanthiruppathil mikka makilichi.

thinamum kaalaiyil ezunthathum ungal pathivukal vaasikka svaarasyamakka irukkum + pathivin vaziye ethaaavathu oru puthiya visayathai therinthu konda thirupthiyum irukkum.
thodarnthu ezuthungal madam.

Avargal Unmaigal said...

என்னை ஏன் கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்ற காரணத்தை அறிந்து கொண்டேன்

வேகநரி said...

மிகவும் அருமையான பதிவு. எமது சமுதாயத்திற்கு பயனுள்ள ஒரு பதிவு.
தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும் அதற்காக அவர்கள் அடிக்கும் கூத்துக்கள் எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது.
பட்டினி கிடந்தாவது, நகைகள் வாங்குவது, கடன்பட்டாவது வீடுவாங்குவது, பார்ட்டிகள் அத்தியாவசியம்.அதில் பல பார்ட்டிகள் திட்டமிட்ட ஒரு திரைபட படப்பிடிப்பு போலவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை surprise party என்று வேறு செய்து காட்டுகிறார்கள்.பார்ப்பது இந்திய டிவி நிகழ்ச்சியா என்று கூட தோன்றும்.மற்றவர்களை எல்லாம் கோமாளிகளாக்கி இந்த சமூகம் தன்னை மதிக்க வேண்டும் என்பதிற்காக செய்து காட்டுவது,காட்டும் நாடகம் தான் இது.